Pregnancy Problems : தமிழகத்தில் கேள்விக்குறியாகும் 60 சதவீத தாய்மார்களின் பேறுகால உபாதைகள் – அதிர்ச்சி ஆய்வு!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Pregnancy Problems : தமிழகத்தில் கேள்விக்குறியாகும் 60 சதவீத தாய்மார்களின் பேறுகால உபாதைகள் – அதிர்ச்சி ஆய்வு!

Pregnancy Problems : தமிழகத்தில் கேள்விக்குறியாகும் 60 சதவீத தாய்மார்களின் பேறுகால உபாதைகள் – அதிர்ச்சி ஆய்வு!

Priyadarshini R HT Tamil
May 31, 2024 02:01 PM IST

Pregnancy Problems : தமிழகத்தில் கேள்விக்குறியாகும் 60 சதவீத தாய்மார்களின் பேறுகால உபாதைகள் குறித்த அதிர்ச்சியான ஆய்வு வெளியாகியுள்ளது.

Pregnancy Problems : தமிழகத்தில் கேள்விக்குறியாகும் 60 சதவீத தாய்மார்களின் பேறுகால உபாதைகள் – அதிர்ச்சி ஆய்வு!
Pregnancy Problems : தமிழகத்தில் கேள்விக்குறியாகும் 60 சதவீத தாய்மார்களின் பேறுகால உபாதைகள் – அதிர்ச்சி ஆய்வு!

கருவுரும் தாய்மார்கள் 

கருவுற்ற தாய்மார்கள் தேவையான வளர்ச்சியை எட்டுகின்றனரா,இல்லையா? என அறிய, கருவுற்ற பின், குழந்தை பிறப்பிற்கு முன் 9-10 கிலோ எடை அதிகரிக்க வேண்டும்.

ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு முதல், 2ம், 3ம் 3 மாதங்களில் (Trimester) முறையே 11, 10, 11 கிராம்/100 மில்லி ரத்தம் என இருப்பதை உறுதிசெய்தால், தாய் மற்றும் சேய் நலம் நன்றாக இருக்கும்.

மேற்சொன்னவை நடக்கவில்லையெனில், தாய் மூலம் சேய்க்கு கிடைக்கும் உணவு போதுமானதாக இல்லை என்ற முடிவுக்கு வர முடியும்.

18-20 ம் வாரம் 2 கிலோ எடை அதிகரித்து, ஹீமோகுளோபின் அளவு - 11 கிராம்/100 மில்லி ரத்தம், 26-28ம் வாரத்தில் 3 கிலோ எடை அதிகரித்து, ஹீமோகுளோபின் அளவு-10 கிராம்/100 மில்லி ரத்தம், 37-40 வாரத்தில் 4 கிலோ அதிகரித்து, ஹீமோகுளோபின் அளவு-11 கிராம்/100 மில்லி ரத்தம் என இருந்தால் மட்டுமே வழக்கமான வளர்ச்சியை கருவுற்ற தாய்மார்கள் எட்டியுள்ளனர் என பொருள் கொள்ள முடியும்.

தமிழக நிலவரம் 

ஆனால் தமிழகத்தில் 40 சதவீதம் கருவுற்ற தாய்மார்கள் மட்டுமே மேற்சொன்ன வளர்ச்சி அல்லது இலக்கை எட்டியுள்ளனர்.

குழந்தையை பொறுத்தமட்டில், முதல் 1,000 நாள் வளர்ச்சி மிக முக்கியமானது என்பதால், கருவுற்ற பெண்கள் மேற்சொன்ன வளர்ச்சியை எட்டவில்லையெனில், குழந்தையின் வளர்ச்சியும் பாதிக்கப்படும்.

குடும்ப உறுப்பினர்களுக்கு, மேற்சொன்ன விழிப்புணர்வை ஏற்படுத்தினால், அவர்கள் மூலமே கருவுற்ற பெண்களின் வளர்ச்சி சீராக உள்ளதா? இல்லையா எனக் கண்டறிய முடியும்.

தாய் மற்றும் சேய் நலம் காக்க, சுகாதாரப் பணியாளர்கள், குறிப்பாக கிராம சுகாதார செவிலியர்கள் (Village Health Nurses), பெண் தன்னார்வ சுகாதார ஆர்வலர்களுக்கு தேவையான, போதிய பயிற்சி அவசியம் என்பதை உணர்ந்து அரசு அவர்களுக்கு தகுந்த பயிற்சியளிக்க திட்டமிட்டுள்ளது.

மேற்சொல்லப்பட்ட இலக்கை அடையாத கருவுற்ற பெண்களை ஆரம்பத்திலேயே கண்டறிந்து, அவர்களை ஆரம்ப சுகாதார நிலையங்கள் அல்லது அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி தேவையான மருத்துவ உதவியை பெறுவது அரசின் நோக்கம் என்றாலும், அதனால் போதிய பலன் கிட்டுமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது.

ஆரம்ப சுகாதார நிலையங்கள்

ஆரம்ப சுகாதார நிலையங்கள் அல்லது பெரும்பாலான அரசு மருத்துவமனைகளில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க, இரும்புச்சத்து மற்றும் போலிக் அமில மாத்திரைகளை தவிர்த்து வேறு வசதிகள் இல்லை.

ரத்தசோகைக்கு மேற்சொன்ன சத்துகளின் குறைப்பாடு தான் முக்கிய காரணமா? என்பதை எப்படி கண்டறிவது? தமிழகத்தில் ஏறக்குறைய மூன்றில் ஒருவருக்குத்தான் இரும்புச்சத்து குறைப்பாடு காரணமாக ரத்தசோகை ஏற்படுவது ஆய்வில் தெரியவந்துள்ளது.

ரத்தசோகையின் பின்னணியில் சமூக மற்றும் பொருளாதாரக் காரணங்களும் நிறைய உள்ளபோது, அதனை சரிசெய்யாமல், வெறும் இரும்புச்சத்து மற்றும் போலிக் அமில மாத்திரைகள் மூலம் ரத்தசோகையை எளிதில் சரிசெய்ய முடியுமா?

தமிழகத்தில் 2022-23ன்போது, தமிழக பொதுசுகாதாரத்துறை ஆய்வில், ரத்தசோகை 3 சதவீத கருவுற்ற தாய்மார்களின் இறப்பிற்கு காரணமாக உள்ளது எனத் தெரியவந்துள்ளது. சில மாவட்டங்களில் (திருப்பத்தூர்-2021-22) ரத்தசோகையால் ஏற்படும் உயிரிழப்பு விகிதம் 7 சதவீதம் என அதிகமாக உள்ளது.

எனவே, சமூக மற்றும் பொருளாதார காரணங்களை (கருவுற்ற காலத்தில் உடல் எடை அல்லது ஹீமோகுளோபின் அளவு தேவையான அளவுக்கு அதிகரிக்க) சரிசெய்யாமல், பொது சுகாதாரதத்துறை களப் பணியாளர்களுக்கு தேவையான பயிற்சி மட்டும் கொடுப்பது போதிய பலனைத் தருமா? என்ற கேள்வி எழுகிறது.

தமிழக அரசு மற்றும் சுகாதாரத்துறை ரத்தசோகை, உடல் எடை குறைவிற்கான (கருவுற்ற காலத்தில்) சமூக மற்றும் பொருளாதாரக் காரணங்களையும் நீக்க நடவடிக்கைகள் எடுப்பது சிறப்பாக இருப்பதோடு, கூடுதல் பலனைக் கொடுக்கும்.

நன்றி – மருத்துவர். புகழேந்தி.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.