தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  Pregnancy Foods These Are The Foods That Women Must Avoid During Pregnancy

Pregnancy Foods : கர்ப்ப காலத்தில் பெண்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டிய உணவுகள் இவைதான்?

Priyadarshini R HT Tamil
Jan 30, 2024 03:32 PM IST

Pregnancy Foods : கர்ப்ப காலத்தில் பெண்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டிய உணவுகள் இவைதான்?

Pregnancy Foods : கர்ப்ப காலத்தில் பெண்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டிய உணவுகள் இவைதான்?
Pregnancy Foods : கர்ப்ப காலத்தில் பெண்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டிய உணவுகள் இவைதான்?

ட்ரெண்டிங் செய்திகள்

இதனால் கர்ப்பிணிகள் சில உணவுகளை எடுத்துக்கொள்ளக்கூடாது என்று அந்த காலம் முதலே சில உணவுகள் குறிப்பிடப்பட்டு வருகிறது. அது அவர்களின் நலம் மற்றும் குழந்தைகளின் நலன் இரண்டுக்குமே பொருந்தும். எனவே உண்மையில் கர்ப்பிணிகள் எந்த உணவை எடுத்துக்கொள்ளலாம் அல்லது எடுத்துக்கொள்ளக்கூடாத உணவுகள் எவை என்று இங்கு தெரிந்துகொள்ளலாம். அறிவியல் மற்றும் மருதுதுவர்களின் அறிவுரைகள் என்ன கூறுகின்றன?

கர்ப்ப கால உணவுகள்

மாறிவரும் இன்றைய காலகட்டத்தில், கர்பப காலத்தில் நாம் எந் உணவை எடுத்துக்கொள்ளலாம் மற்றும் கூடாது என்பதை ஆதாரங்களுடன் கட்டுக்கதைகள் மற்றும் உண்மைகளை பிரித்து தெரிந்துகொள்வது மிகவும் அவசியம்.

கர்ப்ப கால ஆரோக்கியத்துக்கு, கர்ப்பிணிகள், அவர்கள் தவிர்க்க வேண்டிய உணவு வகைகள் குறித்து அவர்கள் தெரிந்துகொள்வது கட்டாயம். ஏனெனில் சில உணவுகளே குழந்தை மற்றும் தாய்மார்களுக்கு ஆபத்தை விளைவிக்கும். எனவே கீழே கொடுக்கப்பட்டுள்ள உணவு வகைகளை கர்ப்ப காலத்தில் பெண்கள் தவிர்த்தால் அது தாய் மற்றும் குழந்தை இருவருக்கும் நல்லது.

பச்சையான மற்றும் சமைக்காத உணவுகள்

பச்சையான மற்றும் சமைக்காத உணவுகள், இறைச்சி, மீன், முளைக்கட்டிய தானியங்கள் உள்ளிட்டவற்றை கர்ப்பிணிகள் தவிர்க்க வேண்டியது அவசியம். இவற்றை பச்சையாகவோ அல்லது சரியாக வேகவைக்காமலோ சாப்பிடுவது ஆபத்தை ஏற்படுத்தும். இவை ஒட்டுண்ணி அல்லது பாக்டீரியா தொற்றுகளை உடலில் ஏற்படுத்தும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

அவை சால்மோனிலா, ஈ.கோலி, டோக்சோபிளாஸ்மா மற்றும் லிஸ்டீரியா ஆகிய பாக்டீரியா தொற்றுக்களை ஏற்படுத்தக்கூடியது. இந்த பாக்டீரியாக்களால் தாய் மற்றும் கரு ஆகிய இரண்டு பேருக்கும் பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். இதனால் கருச்சிதைவு, குறைமாதத்தில் குழந்தை பிறப்பது அல்லது வளர்ச்சியில் ஏதேனும் கோளாறுகள் ஏற்படுவது போன்ற பிரச்னைகள் ஏற்படும்.

எனவே இதுபோன்ற பிரச்னைகளை தவிர்ப்பதற்கு கர்ப்பிணிகள் நன்றாக சமைக்கப்பட்ட உணவுகளை மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும்.

மெர்குரி அதிகம் உள்ள இறைச்சி உணவுகள்

கர்ப்ப காலத்தில் உங்கள் உணவில் மீன் சேர்த்துக்கொள்வது நல்லதுதான். அது உங்கள் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தை வழங்குகிறது. அது உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது என்றாலும், சுறா மீன்கள், வாள் மீன்கள், கெளுத்தி மீன்கள், பாறை மீன் ஆகியவற்றை தவிர்ப்பது நல்லது.

இவற்றில் அதிகளவில் மெர்குரி இருப்பதால் இவற்றை எடுத்துக்கொள்ளும்போது தாய்மார்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். இந்த வகை மீன்களை கர்ப்ப காலத்தில் பெண்கள் எடுத்துக்கொள்ளும்போது, அது குழந்தைகளின் நரம்பு மண்டல சிதைவுக்கு வழிவகுக்கிறது. எனவே இறால், சால்மன் உள்ளிட்ட கடல் உணவுகளை மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும். இவை கொஞ்சம் பாதுகாப்பானவை.

பதப்படுத்தப்படாத பால் உணவுகள்

பதப்படுத்தப்படாத பால் உணவுகளில் இருந்த கர்ப்பிணிகள் சற்று விலகியிருக்க வேண்டும். பால், யோகர்ட் மற்றும் ஃபீட்டா போன்ற மிருதுவான சீஸ், ப்ளூ சீஸ் போன்ற பதப்படுத்தப்படாத பால் உணவுகளில் இருந்து தள்ளியிருக்க வேண்டும். இவற்றில் ஆபத்தை விளைவிக்கக்கூடிய பாக்டீரியாக்கள் இருக்கும். அவை லிஸ்டீரியா மோனோசைட்டோஜீன்கள் என்று அழைக்கப்படுகிறது.

அவை கடுமையாக நோய் தொற்றுகளை ஏற்படுத்தக்கூடியவை. அவை சில நேரங்களில் கருச்சிதைவை கூட ஏற்படுத்தும். எனவே பதப்படுத்தப்படாத பால் உணவுகளை கர்ப்பிணிகள் கட்டாயம் தவிர்க்க வேண்டும். அதுதான் அவர்களின் ஆரோக்கியத்துக்கும், அவர்கள் குழந்தைகளின் ஆரோக்கியத்துக்குத் நல்லது.

ஆரோக்கியமான உணவு, ஆரோக்கியமான வாழ்வு

யுனிசெப்பை பொறுத்த வரையில், நீங்கள் கர்ப்பமாக இருக்கும்போதோ அல்லது கர்ப்பத்துக்கு முயற்சிக்கும்போதோ அல்லது பாலூட்டும்போதோதான் நீங்கள் ஆரோக்கியமான உணவை எடுத்துக்கொள்ள வேண்டும். எனினும், கர்ப்பிணிகள், தங்கள் மற்றும் தங்கள் கருவின் ஆரோக்கியத்திற்காக சில உணவு வகைகளை தவிர்க்க வேண்டும். எனவே பெற்றோர் வாழ்க்கையை மகிழ்ச்சியாக கழிக்க பெற்றோர் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும்.

அதற்கு மருத்துவர் அல்லது சுகாதார அலுவலரை அணுகி நீங்கள் எந்த உணவை கர்ப்ப காலத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை கலந்து ஆலோசித்து அதற்கு ஏற்றார்போல் உணவு எடுத்துக்கொள்ள வேண்டும். குறைந்தபட்சம் ஊட்டச்சத்து நிபுணரையாவது அணுகுவது அவசியம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்