தீபாவளி பட்டாசு புகை கண்களைப் பதம் பார்க்கிறதா.. செய்யவேண்டிய முன்னெச்சரிக்கைகள்..
தீபாவளி பட்டாசு புகை கண்களைப் பதம் பார்க்கிறதா என்பது பற்றியும்; செய்யவேண்டிய முன்னெச்சரிக்கைகள் குறித்தும் பார்ப்போம்.
தீபாவளிப் பண்டிகை அக்டோபர் 31ஆம் தேதியான இன்று கொண்டாடப்படுகிறது. தீபங்களின் திருவிழா பாரதத்தில் மட்டுமின்றி உலகின் பல நாடுகளிலும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
தீபாவளி என்பது இனிப்புகள் மற்றும் பட்டாசுகளின் கொண்டாட்டத் திருவிழாவாகும். குழந்தைகளுக்கு தீபாவளி என்பது பட்டாசு கொளுத்தும் பண்டிகை ஆகும். இருப்பினும், பட்டாசுகளால் வெளியிடப்படும் தீ, நச்சுப்புகை ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. இதன் புகை நுரையீரலுக்கு மட்டுமல்ல, கண்களுக்கும் மிகவும் ஆபத்தானது.
எனவே, இந்த தீபாவளியைப் பாதுகாப்பான பண்டிகையாக கொண்டாட நடவடிக்கை எடுக்க வேண்டும். பட்டாசுகளில் இருந்து வெளியேறும் புகை மற்றும் மாசுபாட்டில் இருந்து கண்களுக்கு என்ன ஆபத்து, அதைத் தடுக்க என்ன நடவடிக்கைகள் எடுக்கலாம் என்பதைக் கண்டுபிடிப்போம்.
பட்டாசுகள் கண்களுக்கு அதிக அளவு சேதத்தை ஏற்படுத்துகின்றன. இது கண் எரிச்சல், கண்ணில் தொற்று மற்றும் வலி போன்ற பிரச்னைகளுக்கு வழிவகுக்கிறது. பட்டாசுகளில் இருந்து வெளிப்படும் புகை பல தீங்குகளை விளைவிக்கும் ரசாயனங்களை வெளியிடுகிறது. அவை நீண்ட காலத்திற்கு கண்களைச் சேதப்படுத்தும்.
பட்டாசுகளிலிருந்து வெளிப்படும் புகையில் ஈயம் போன்ற தீங்கு விளைவிக்கும் கூறுகள் உள்ளன. இது கண்களில் ஒவ்வாமையை ஏற்படுத்துவதன் மூலம் கண்ணில் இருக்கும் கார்னியாவை சேதப்படுத்துகிறது. இது குழந்தைகள் மீது கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும். இது குழந்தைகளின் பார்வைத் திறனில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
பட்டாசுகளால் ஏற்படும் பாதிப்புகள்:
- பட்டாசுகளால் ஏற்படும் புகை மற்றும் மாசுபாட்டில் நீண்ட நேரம் இருப்பது கண்களில் வறட்சிக்கு வழிவகுக்கும். மேலும், பல நேரங்களில் பட்டாசுகளை வெடிக்கும்போது கண்களுக்கு கடுமையான காயங்கள் ஏற்படலாம். பட்டாசுகளை அருகில் இருந்து எரிக்கும்போது இதுபோன்ற ஆபத்து அடிக்கடி ஏற்படுகிறது. பட்டாசுகளிலிருந்து வரும் தீப்பொறிகள், தீ மற்றும் புகை ஆகியவை கண்களில் எரிச்சல் மற்றும் காயத்தை ஏற்படுத்தும்.
- பட்டாசுகள் விழித்திரையில் கடுமையான சேதத்தை ஏற்படுத்துகின்றன. விழித்திரை காயங்கள் நீண்டகால பார்வைப் பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். பட்டாசு புகையால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் தற்காலிகப்பார்வை இழப்பு பிரச்னையைச் சந்திக்க நேரிடும்.
- மாசுபட்ட காற்று கண் நோய்த்தொற்றுகளின் அபாயத்தை அதிகரிக்கிறது. இது தொடர்ந்து நீர் நிறைந்த கண்கள், சிவத்தல், எரிச்சல் மற்றும் வீக்கத்திற்கு வழிவகுக்கிறது.
- பட்டாசு புகையில் இருப்பது மாலைக்கண், கண்புரை போன்ற கடுமையான நாள்பட்ட கண் பிரச்னைகளின் அபாயத்தை அதிகரிக்கிறது. இது காலப்போக்கில் பார்வையில் மோசமான விளைவை ஏற்படுத்தத்தொடங்குகிறது.
பட்டாசு புகையிலிருந்து கண்களை பாதுகாக்க உதவிக்குறிப்புகள்
- கண்களுக்கு அருகில் புகை இருந்தால் கைகளால் கண்களை தேய்க்கும் தவறை செய்யாதீர்கள். புகையில் உள்ள ரசாயனங்கள் கண்களை எரிச்சலடையச்செய்து, கண்களில் கண்ணீரை வரவழைக்கும்.
- கண்களைச்சுற்றி புகை இருந்தால், உடனடியாக கண்களை சுத்தமான தண்ணீரில் கழுவவும். அவ்வாறு செய்வதன் மூலம், கண்களில் உள்ள தூசி மற்றும் புகைத்துகள்கள் சுத்தமாகும். இது எரிச்சல் அல்லது அரிப்பு உணர்வை நீக்கும்.
- பட்டாசுகளை வெடிக்கும்போது பாதுகாப்புக் கண்ணாடிகளை அணிவது நல்லது. கண்களில் அணியும் கண்ணாடிகள் புகை, தூசி துகள்களிலிருந்து கண்களைப் பாதுகாக்க உதவுகின்றன.
- கண்களை ஆரோக்கியமாக வைத்திருக்கவும், பட்டாசு புகையால் ஏற்படும் சேதத்திலிருந்து பாதுகாக்கவும் உடலை ஹைட்ரேட் செய்ய முயற்சிக்கவும். அதாவது நாள் முழுவதும் நிறைய தண்ணீர் குடிக்கவும்.
டாபிக்ஸ்