Thoppukaranam: தினமும் தோப்புக்கரணம் போடுவதால் இவ்வளவு நன்மைகளா!
”Thoppukaranam: தூக்கமின்மை உள்ளிட்ட பிரச்னைகளை கொண்டவர்கள் உடல் வியர்க்கும் அளவுக்கு தோப்புக்கரணம் செய்வதன் மூலம் ஆழ்ந்த தூக்கத்தை பெற முடியும்”
வீட்டிலேயே எளிதில் செய்யக்கூடிய உடற்பயிற்சிகளில் ஒன்றாக தோப்புக்கரணம் உள்ளது. முறையாக தோப்புக்கரணம் போடுவதால் உடல் மற்றும் மனம் ஆகியவை பல நன்மைகளை பெறுகிறது. இந்திய பாரம்பரியத்தில் தோப்புக்கரணம் என்பது வழிபாட்டு முறையோடு இணைந்துள்ளதால் காலம் தொண்டே தோப்புக்கரணம் போடும் வழக்கம் நமது முன்னோர்களிடம் இருந்து வருகிறது.
முறையாக தோப்புக்கரணம் போடுவது உடலில் ரத்த ஓட்டம் அதிகரிப்பதுடன், இதனால், உடலின் அனைத்து உறுப்புகளுக்கும் தேவையான ஆக்ஸிஜன் மற்றும் சத்துக்கள் கிடைக்க உதவுகிறது.
முறையான நடைமுறைகள் உடன் தோப்புக்கரணம் போடுவதால் கால்கள், இடுப்பு, முதுகு மற்றும் கைகளில் உள்ள தசைகளை வலுப்பெறுகிறது.
உடலின் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்க தோப்புக்கரணம் உதவுவதுடன் உடல் செரிமானத்தை மேம்படுத்துகிறது.
மன அழுத்தம் மற்றும் பதற்றத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தோப்புக்கரணம் போடுவதன் மூலம் நன்மைகளை பெற முடியும்.
தூக்கமின்மை உள்ளிட்ட பிரச்னைகளை கொண்டவர்கள் உடல் வியர்க்கும் அளவுக்கு தோப்புக்கரணம் செய்வதன் மூலம் ஆழ்ந்த தூக்கத்தை பெற முடியும். தோப்பு கரணம் ஒரு எளிய, ஆனால் சக்தி வாய்ந்த பயிற்சியாகும். இது உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை வழங்குகிறது.
தோப்புக்கரணம் செய்யும் முறை:
- தோள்பட்டை அகலத்திற்கு கால்களை விரித்து நிற்கவும்.
- வலது கையை மடக்கி, வலது கையின் பெருவிரலால் இடது காது மடலின் நுனியை பிடிக்கவும்.
- இடது கையை மடக்கி, இடது கையின் பெருவிரலால் வலது காது மடலின் நுனியை பிடிக்கவும்.
- முழங்கால்களை மடக்கி, உட்காரும் நிலைக்கு செல்லவும்.
- முதுகை நேராக வைத்திருக்கவும்.
- மூச்சை உள்ளிழுத்தபடி உட்காரவும்.
- மூச்சை வெளியிட்டபடி எழுந்து நிற்கவும்.
டாபிக்ஸ்