Train Your Brain : உங்கள் குழந்தைகளின் மூளையை சுறுசுறுப்பாக வேண்டுமா? அதற்கு இந்த பயிற்சிகள் கொடுங்கள்!
Practice Your Brain : உங்கள் குழந்தைகளின் மூளையை சுறுசுறுப்பாக வேண்டுமா? அதற்கு என்னென்ன பயிற்சிகள் செய்யவேண்டும் பாருங்கள்.

உங்கள் குழந்தைகளின் மூளைக்கு பயிற்சி கொடுத்தால் அதை பல மடங்கு அதிகம் செயல்படவைக்க முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? இது குழந்தைகளுக்கு மட்டுமல்ல பெரியவர்களுக்கும்தான். மூளையின் செயல்திறனை அதிகரிக்க நீங்கள் செய்யவேண்டியது இதைத்தான்.
அன்றாட வாசிப்பு
எப்போதும், புத்தகங்கள் அல்லது கட்டுரைகள், செய்தித்தாள்கள் அல்லது வார இதழ்கள் என எதையாவது படித்துக்கொண்டே இருக்கவேண்டும். இவ்வாறு நீங்கள் படிக்கும்போது, அது உங்களின் மனதை தூண்டும். உங்களுக்கு தேவையான புதிய வார்த்தைகளை அதிகரிக்கும். உங்களின் எழுத்து திறனை அதிகரிக்கும். உங்கள் வாதங்களை அர்த்தமுள்ளதாக்கும். உங்களின் உரையாடல்களை சுவாரஸ்யமாக்கும்.
விளையாட்டு மற்றும் பசில்கள்
கிராஸ் பேர்ட் பசில், சுடோக்கு, செஸ் போன்ற மூளைக்கு வேலை கொடுக்கும் விளையாட்டுகள் மற்றும் செயல்கள் அனைத்தும் உங்களுக்கு பிரச்னைகளை தீர்க்கும் திறனை அதிகரிக்கும். இதனால் உங்கள் மூளை எப்போதும் சுறுசுறுப்படையும்.