Benefits of Peaches: எடை குறைப்பு முதல் கண், சரும பாதுகாப்பு வரை..! ஏராள நன்மைகளை கொண்டிருக்கும் பீச் பழங்கள்
குழிப்பேரி என்று அழைக்கப்படும் பீச் பழம் உங்கள் சருமம், கண்கள், குடல் ஆரோக்கியத்துக்கு நன்மை தருவதாக உள்ளது. பீச் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் உடல் ஆரோக்கிய நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்

பீச் பழங்கள், வெள்ளை அல்லது மஞ்சள் சதை ஓட்டில் விதையுடன் பொதிந்திருப்பதால், கல் பழ வகையின் கீழ் வருகின்றன. பீச் பழத்தை பல வழிகளில் சாப்பிடலாம். இதை பச்சையாகவோ, சுடப்பட்டோ அல்லது சாறாகவோ எடுத்துக்கொள்ளலாம். இனிப்பு சுவை கொண்ட இவை ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது. உங்கள் அன்றாட டயட்டில் இதை சேர்த்து கொள்ள வேண்டும்.
இவற்றில் கலோரிகள் மற்றும் கொழுப்புகள் குறைவாக இருப்பதால், உடல் எடையை குறைக்க உதவுகிறது. இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இவை உங்கள் குடல் ஆரோக்கியத்துக்கு நல்லது. அவை சில வகையான புற்றுநோய்களின் அபாயத்தையும் குறைப்பதாக கூறப்படுகிறது. பீச்சின் ஆரோக்கிய நன்மைகளை அறிந்து கொள்ளலாம்
செரிமான ஆரோக்கியம்
அமெரிக்காவின் விவசாயத் துறையின் கூற்றுப்படி, சுமார் 100 கிராம் பச்சை பீச்சில் 1.5 கிராம் நார்ச்சத்து உள்ளது. இந்த நார்ச்சத்து ஆரோக்கியமான செரிமானத்தை ஊக்குவிப்பதில் முக்கியமானது என்கிறார் மருத்துவ உணவியல் நிபுணர் தேவானந்தா வி.எம். இது வயிற்றுப்போக்கு மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளை சமாளிக்கிறது, ஏனெனில் இது சீரான செரிமானம் மற்றும் குடல் இயக்கங்களை உறுதி செய்கிறது.