பொடி சாதம் : பொடி சாதம் செய்ய ஏற்ற பொடி இதோ! ஒருமுறை ருசித்தால் அடிக்கடி சாப்பிட வேண்டும் என நினைப்பீர்கள்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  பொடி சாதம் : பொடி சாதம் செய்ய ஏற்ற பொடி இதோ! ஒருமுறை ருசித்தால் அடிக்கடி சாப்பிட வேண்டும் என நினைப்பீர்கள்!

பொடி சாதம் : பொடி சாதம் செய்ய ஏற்ற பொடி இதோ! ஒருமுறை ருசித்தால் அடிக்கடி சாப்பிட வேண்டும் என நினைப்பீர்கள்!

Priyadarshini R HT Tamil
Updated May 11, 2025 01:10 PM IST

பொடி சாதம் : இந்தப் பொடியை மட்டும் நீங்கள் தயாரித்து வைத்துக்கொண்டு அதை நீண்ட நாட்கள் பயன்படுத்தலாம். இதை நீங்கள் ஃபிரிட்ஜில் வைத்துக்கொள்ளலாம். உங்களுக்கு தேவைப்படும்போது சாதத்தை தயாரித்துக்கொள்ளலாம்.

பொடி சாதம் : பொடி சாதம் செய்ய ஏற்ற பொடி இதோ! ஒருமுறை ருசித்தால் அடிக்கடி சாப்பிட வேண்டும் என நினைப்பீர்கள்!
பொடி சாதம் : பொடி சாதம் செய்ய ஏற்ற பொடி இதோ! ஒருமுறை ருசித்தால் அடிக்கடி சாப்பிட வேண்டும் என நினைப்பீர்கள்!

தேவையான பொருட்கள்

• கடலை பருப்பு – 2 டேபிள் ஸ்பூன்

• உளுந்து – ஒரு டேபிள் ஸ்பூன்

• வர மல்லி – 2 டேபிள் ஸ்பூன்

• வெந்தயம் – கால் ஸ்பூன்

• மிளகு – அரை ஸ்பூன்

• சீரகம் – அரை ஸ்பூன்

• பட்டை – 3

• கிராம்பு – 5

• தேங்காய்த் துருவல் – 3 டேபிள் ஸ்பூன்

• கஷ்மீரி மிளகாய் – 8

• மஞ்சள் தூள் – அரை ஸ்பூன்

• பெருங்காயத் தூள் – ஒரு ஸ்பூன்

செய்முறை

1. முதலில் இந்தப் பொடியை தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம். இந்தப் பொடியை மட்டும் நீங்கள் தயாரித்து வைத்துக்கொண்டு அதை நீண்ட நாட்கள் பயன்படுத்தலாம். இதை நீங்கள் ஃபிரிட்ஜில் வைத்துக்கொள்ளலாம். உங்களுக்கு தேவைப்படும்போது சாதத்தை தயாரித்துக்கொள்ளலாம்.

2. ஒரு கடாயை சூடாக்கி, அதில் கடலை பருப்பு, உளுந்து, வர மல்லி இந்த மூன்றையும் சேர்த்து அனைத்தும் பொன்னிறமாகும் வரை வறுக்கவேண்டும். இதை எடுத்து தனியாக வைத்துக்கொள்ளவேண்டும். அடுத்து வெந்தயம், மிளகு, சீரகம், பட்டை, கிராம்பு என அனைத்தையும் சேர்த்து வாசம் வரும் வரை வதக்கவேண்டும்.

3. அடுத்து தேங்காய்த் துருவலையும் தூவி வறுத்து எடுத்து தனியான ஆறவிடவேண்டும். அடுத்து கஷ்மீரி மிளகாயை வறுத்துக்கொள்ளவேண்டும். அனைத்தையும் ஆறவைத்து காய்ந்த மிக்ஸி ஜாரில் சேர்த்து தண்ணீர் படாமல் பொடித்து எடுத்துக்கொள்ளவேண்டும்.

4. இதனுடன் மஞ்சள் தூள் மற்றும் பெருங்காயத் தூளையும் சேர்த்து ஒருமுறை ஓட்டிக்கொள்ளவேண்டும். இந்தப்பொடியை நீங்கள் நீண்ட நாட்கள் ஃபிரிட்ஜில் வைத்து பயன்படுத்திக்கொள்ளலாம்.

இதைவைத்து சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

சாதம் செய்ய தேவையான பொருட்கள்

• வடித்து ஆறிய சாதம் – 2 கப்

• எண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன்

• கடுகு – கால் ஸ்பூன்

• உளுந்து – கால் ஸ்பூன்

• சீரகம் – கால் ஸ்பூன்

• பச்சை மிளகாய் – 2 (கீறியது)

• வேர்க்கடலை – ஒரு கப்

• உப்பு – தேவையான அளவு

• கத்தரிக்காய் – 4 (நீளவாக்கில் நறுக்கியது)

செய்முறை

1. ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து அது சூடானவுடன் அதில் கடுகு, உளுந்து, சீரகம் என அனைத்தையும் சேர்த்து அது பொரிந்தவுடன், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்துக்கொள்ளவேண்டும்.

2. அடுத்து நிலக்கடலை சேர்த்து அது பொன்னிறமானவுடன், கத்தரிக்காய் சேர்த்துக்கொள்ளவேண்டும். அதை நன்றாக வதக்கியவுடன் தயாரித்து வைத்துள்ள பொடியில் ஒரு ஸ்பூன் அளவுக்கு சேர்த்து நன்றாக வதக்கவேண்டும்.

3. அடுத்து வடித்து ஆறிய சாதத்தை சேர்த்து கிளறவேண்டும். அதை நன்றாகக் கிளறி இறக்கினால் சூப்பர் சுவையான சாதம் தயார்.

இந்தப்பொடியை நீங்கள் தயார் செய்து வைத்துக்கொண்டீர்கள் என்றால் அடிக்கடி இந்த பொடி சாதத்தை செய்யலாம். இந்த சாதத்தில் கத்தரிக்காய்க்கு பதில் கோவக்காய், அவரைக்காய், வெண்டைக்காய் உள்ளிட்ட காய்கறிகளை சேர்த்தும் தயாரிக்கலாம். கத்தரிக்காய் சேர்க்கும்போது அது வாங்கி பாத் என்று அழைக்கப்படுகிறது.