Potato Rice : உருளைகிழங்கு சாதம்! சூப்பர் சுவையில் லன்ச் பாக்ஸ் ரெசிபி!
Potato Rice : உருளைகிழங்கு சாதம்! சூப்பர் சுவையில் லன்ச் பாக்ஸ் ரெசிபி!
தேவையான பொருட்கள்
நல்லலெண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன்
கடுகு – அரை ஸ்பூன்
கடலை பருப்பு – ஒரு ஸ்பூன்
உளுத்தம் பருப்பு – ஒரு ஸ்பூன்
சிவப்பு மிளகாய் – 2
பெருங்காயத்தூள் – கால் ஸ்பூன்
மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
உருளைகிழங்கு - 2
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை – ஒரு கொத்து
அரிசி – சாதம் தயாரிக்க அல்லது சாதமாகவே எடுத்துக்கொள்ளலாம்
மசாலா தூள் தயாரிக்க
உளுத்தம் பருப்பு – ஒரு ஸ்பூன்
கடலை பருப்பு – ஒரு ஸ்பூன்
மிளகு – ஒரு ஸ்பூன்
சிவப்பு மிளகாய் -7
மல்லி விதை – 2 ஸ்பூன்
சீரகம் – ஒரு ஸ்பூன்
வெந்தயம் – கால் ஸ்பூன்
செய்முறை
முதலில் மசாலா தூள் தயாரிக்க வேண்டும்
உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, மிளகு, சிவப்பு மிளகாய், மல்லி விதை, சீரகம், வெந்தயம் ஆகியவற்றை பொன்னிறமாகும் வரை வறுத்துவிட்டு சிறிது நேரம் ஆறவிட்டு, காய்ந்த மிக்ஸியில் சேர்த்து வறுத்து எடுத்து தனியாக வைத்துக்கொள்ள வேண்டும்.
அடுத்து ஒரு கடாயில் நல்லெண்ணெய், கடுகு, கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, சிவப்பு மிளகாய், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும்.
இந்த வதக்கியவற்றில் உருளைக்கிழங்கு, தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள், சேர்த்து பொன்னிற்றமாகவும் வரை வறுக்கவேண்டும்.
பின்னர் அரைத்துவைத்துள்ள மசாலா தூளை சேர்த்து கலக்கவேண்டும்.
இந்தக்கலவையில் வேகவைத்த சாதத்தை சேர்த்து கலக்கவேண்டும். சுவையான உருளைகிழங்கு சாதம் தயார்.
இந்த உருளைகிழங்கு சாதத்துடன் அப்பளம் அல்லது வத்தல் சேர்த்து பரிமாறவேண்டும்.
இது குழந்தைகளின் லன்ச் பாக்ஸ்க்கு ஏற்ற ரெசிபி.
நன்றி - ஹேமா சுப்ரமணியன்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்