Potato Peas Curry: கல்யாண வீட்டு ஸ்டெயில் பச்சை பட்டாணி, உருளைக்கிழங்கு கூட்டின் சீக்ரெட்.. இப்படி செய்து பாருங்க
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Potato Peas Curry: கல்யாண வீட்டு ஸ்டெயில் பச்சை பட்டாணி, உருளைக்கிழங்கு கூட்டின் சீக்ரெட்.. இப்படி செய்து பாருங்க

Potato Peas Curry: கல்யாண வீட்டு ஸ்டெயில் பச்சை பட்டாணி, உருளைக்கிழங்கு கூட்டின் சீக்ரெட்.. இப்படி செய்து பாருங்க

Pandeeswari Gurusamy HT Tamil
Jan 09, 2025 06:00 AM IST

Potato Peas Curry: பந்தியில் இலையில் சூடான சாதம் சாம்பாருடன் வைக்கப்பட்டும் பச்சை பட்டாணி, உருளைக்கிழங்கு கூட்டை சேர்த்து சாப்பிடுவதை நினைக்கும் போதே பலருக்கும் நாக்கில் எச்சில் ஊறும். நாம் வீட்லேயும் அதே ஸ்டெயிலில் கூட்டு செய்தால் ருசி அசத்தலாக வரும்.

Potato Peas Curry: கல்யாண வீட்டு ஸ்டெயில் பச்சை பட்டாணி, உருளைக்கிழங்கு கூட்டின் சீக்ரெட்.. இப்படி செய்து பாருங்க
Potato Peas Curry: கல்யாண வீட்டு ஸ்டெயில் பச்சை பட்டாணி, உருளைக்கிழங்கு கூட்டின் சீக்ரெட்.. இப்படி செய்து பாருங்க

உருளைக்கிழங்கு பச்சை பட்டாணி கூட்டு செய்ய தேவையான பொருட்கள்

உருளைக்கிழங்கு - 3

பச்சை பட்டாணி -200 கிராம்

வெங்காயம் -100 கிராம்

தக்காளி - 1

இஞ்சி - ஒரு துண்டு

பூண்டு - 8 பல்

தேங்காய் துருவல் 5 ஸ்பூன்

சோம்பு - ஒரு ஸ்பூன்

கசகசா - 1/2 ஸ்பூன்

பட்டை - 2 துண்டு

மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்,

மல்லித்தூள் - 1 டீ ஸ்பூன்

மிளகாய் தூள் - 1 டீபூன்

கடலெண்ணெய் - 3 ஸ்பூன்

கடுகு - 1/2 டீ ஸ்பூன்

உளுந்தம்பருப்பு -1 ஸ்பூன்

கறிவேப்பிலை - 1 கொத்து

மல்லி இலை - சிறிதளவு

உப்பு - தேவையான அளவு

உருளைக்கிழங்கு பச்சை பட்டாணி கூட்டு செய்முறை

பச்சை பட்டாணி மற்றும் உருளை கிழங்கை கழுவி குக்கரில் சேர்த்து 2 விசில் விட்டு எடுத்து கொள்ள வேண்டும். உருளைகிழங்கை தோல் நீங்கி தேவையான அளவில் நறுக்கி கொள்ள வேண்டும். பின்னர் ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய் துருவல், சோம்பு, கசகசா, பட்டை , கிராம்பு, இஞ்சி, பூண்டு ஒரு தக்காளி சேர்த்து நல்ல பேஸ்ட்டாக அரைத்து கொள்ள வேண்டும்.

ஒரு கடாயை சூடாக்கி எண்ணெய் விட்டு அதில் கடுகு உளுந்து சேர்த்து நன்றாக பொரிய விட வேண்டும். பின்னர் வெட்டி வைத்த வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். வெங்காயம் பொன்னிறமாக வதங்கும் போது அதில் கறிவேப்பிலையுடன் மஞ்சள் தூள், மல்லித்தூள் மிளகாய் தூள் சேர்த்து கலந்து விட வேண்டும் மசாலா பொடிகளை சேர்க்கும் போது அடுப்பை மிதமான தீயில் வைத்து கிளறி விட வேண்டும். இப்போது ஏற்கனவே அரைத்த பேஸ்ட்டை சேர்த்து கலந்து விட வேண்டும். இரண்டு நிமிடம் வரை இஞ்சி, பூண்டு தேங்காய் தக்காளியின் பச்சை வாடை போகும் வரை கலந்து விட வேண்டும். பின்னர் கொஞ்சாக தண்ணீர் சேர்த்து கொதிக்க விட வேண்டும். அதில் நாம் ஏற்கனவே வேக வைத்து எடுத்து வைத்திருந்த பச்சை பட்டாணி, உருளை கிழங்கை சேர்த்து தேவையான உப்பை யும் சேர்த்து கலந்து விட வேண்டும். தண்ணீர் வற்றிவுடன் அதில் கொத்தமல்லி இலையை சேர்த்து கலந்து விட வேண்டும். அவ்வளவு தான் கல்யாண வீட்டு பச்சை பட்டாணி உருளைக்கிழங்கு கூட்டு ரெடி.

சூடான சாம்பார்சாதம், ரசம் சாதம், தயிர் சாதத்துடன் சாப்பிட ருசி அருமையாக இருக்கும். நீங்களும் டிரை பண்ணுங்க

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.