உருளைக்கிழங்கு சீஸ் பால்ஸ்; குழந்தைகளுக்கு செய்து கொடுங்க! சாப்பிட்டுக்கிட்டே இருப்பாங்க!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  உருளைக்கிழங்கு சீஸ் பால்ஸ்; குழந்தைகளுக்கு செய்து கொடுங்க! சாப்பிட்டுக்கிட்டே இருப்பாங்க!

உருளைக்கிழங்கு சீஸ் பால்ஸ்; குழந்தைகளுக்கு செய்து கொடுங்க! சாப்பிட்டுக்கிட்டே இருப்பாங்க!

Priyadarshini R HT Tamil
Dec 10, 2024 12:13 PM IST

உருளைக்கிழங்கு சீஸ் பால்ஸ் செய்வது எப்படி?

உருளைக்கிழங்கு சீஸ் பால்ஸ்; குழந்தைகளுக்கு செய்து கொடுங்க! சாப்பிட்டுக்கிட்டே இருப்பாங்க!
உருளைக்கிழங்கு சீஸ் பால்ஸ்; குழந்தைகளுக்கு செய்து கொடுங்க! சாப்பிட்டுக்கிட்டே இருப்பாங்க!

173 கிராம் உருளைக்கிழங்கில், 161 கலோரிகள், 0.2 கிராம் கொழுப்பு, 4.3 கிராம் புரதச்சத்து, 36.6 கிராம் கார்போஹைட்ரேட், 3.8 கிராம் நார்ச்சத்து, 28 சதவீதம் வைட்டமின் சி, 27 சதவீதம் வைட்டமின் பி6, 26 சதவீதம் பொட்டாசியம், 19 சதவீதம் மேங்கனீஸ், 12 சதவீதம் மெக்னீசியம், 12 சதவீதம் பாஸ்பரஸ், 12 சதவீதம் நியாசின், 12 சதவீதம் ஃபோலேட் ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளது. இத்தனை ஆரோக்கிய நன்மைகள் நிறைந்த உருளைக்கிழங்கில் சீஸ் பால்ஸ் செய்வது எப்படி என்று பாருங்கள்.

தேவையான பொருடகள்

வேகவைத்த உருளைக்கிழங்கு – 4

பெரிய வெங்காயம் – கால் கப் (பொடியாக நறுக்கியது)

குடை மிளகாய் – கால் கப் (பொடியாக நறுக்கிறது)

மல்லித்தழை – 2 ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)

பிரட் கிரம்ஸ் – ஒரு கப்

(மிகவும் முக்கியமானது. இதுதான் உருளைக்கிழங்கின் ஈரத்தன்மையை உறிஞ்சிக்கொள்ளும்)

பச்சை மிளகாய் – 1 (பொடியாக நறுக்கியது)

ஓரிகானோ – அரை ஸ்பூன்

இட்டாலியன் சீசனிங் – அரை ஸ்பூன்

ரெட் சில்லி ஃப்ளேக்ஸ் – ஒரு ஸ்பூன்

மிளகுத்தூள் – கால் ஸ்பூன்

சீஸ் க்யூப்கள் – 4

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – தாராளமாக

மைதா – ஒரு டேபிள் ஸ்பூன்

கார்ன் ஃப்ளார் – 4 டேபிள் ஸ்பூன்

செய்முறை

ஒரு பாத்திரத்தில் வேகவைத்த உருளைக்கிழங்கை மசித்து எடுத்துக்கொள்ளவேண்டும். அதில் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், குடை மிளகாய், மல்லித்தழை, பிரட் கிரம்ஸ், ஓரிகானோ, ரெட் சில்லி ஃப்ளேக்ஸ், மிளத்தூள் சேர்த்து நன்றாக மசித்துக்கொள்ளவேண்டும். சீஸ்களை அதன் மீது துருவி விடவேண்டும். தேவையான அளவு உப்பு சேர்த்து அனைத்தையும் நன்றாக பிசைந்து கொள்ள வேண்டும்.

எடுத்து சிறிய உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவேண்டும். அதன் இடையில் சிறிய சீஸ் துண்டுகளை வைக்கலாம். உங்களுக்கு அது பிடிக்கவில்லையென்றாலும் விட்டுவிடலாம்.

ஒரு கிண்ணத்தில் மைதா மற்றும் கார்ன் ஃப்ளார் இரண்டையும் தண்ணீர் ஊற்றி கரைத்து வைத்துக்கொள்ளவேண்டும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி அது சூடானவுடன், உருண்டைகளை மாவு கரைசலில் போட்டு உருட்டி, பிரட் கிரம்ஸில் உருட்டி எடுத்து, எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்தால் சூப்பர் சுவையான உருளைக்கிழங்கு சீஸ் பால்ஸ் தயார். இதை தக்காளி கெட்ச் அப்புடன் பரிமாறினால் சூப்பர் சுவையான இருக்கும்.

இதை உடனே பொரித்து எடுக்காமல், ஃபிரிட்ஜில் அரைமணி நேரம் வைத்து பொரித்து எடுத்தால் இன்னும் சுவையாக இருக்கும். தொட்டுக்கொள்ள வெறும் கெட்ச் அப் மட்டும் எடுக்காமல், கெட்ச் அப், மயோனைஸ் மற்றும் ஓரிகானானோ சேர்த்து கலந்து வைத்தால் கூடுதல் சுவையாக இருக்கும். இதை நீங்கள் உருளை சீஸ் பால்சுடன் சேர்த்துக்கொடுத்தால் குழந்தைகள் நிறுத்தாமல் சாப்பிட்டுக்கொண்டே இருப்பார்கள்.

குழந்தைகள் மட்டுமல்ல பெரியவர்களுக்கும் இது மிகவும் பிடிக்கும். ஒருமுறை ருசித்தால் மீண்டும் மீண்டும் ருசிப்பீர்கள். எனவே ஒருமுறை கட்டாயம் முயற்சித்துத்தான் பாருங்களேன்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.