பொட்டாசியச் சத்துக்கள் : பொட்டாசியச் சத்துக்கள் நிறைந்த இந்த காய்கறிகளை உங்கள் உணவில் ஏன் சேர்க்கவேண்டும்?
பொட்டாசியச் சத்துக்கள் : இந்த ஆரோக்கிய நன்மைகளை நீங்கள் பெறவேண்டுமெனில் பொட்டாசியச் சத்துக்கள் அதிகம் நிறைந்த இந்த காய்கறிகளை உங்கள் அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.

பொட்டாசியச் சத்துக்கள் உங்கள் உடலுக்கு தேவையான ஒரு மினரல் ஆகும். இது உங்கள் இதய ஆரோக்கியத், நரம்பு மண்டல இயக்கம் மற்றும் தசைகளின் இயக்கம் ஆகியவற்றுக்கு உதவுகிறது. பொட்டாசியச் சத்துக்கள் அதிகம் நிறைந்த உணவுகள் ரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது மேலும் சிறுநீரகத்தில் கற்கள் ஏற்படாமல் தடுக்கிறது. இந்த ஆரோக்கிய நன்மைகளை நீங்கள் பெறவேண்டுமெனில் பொட்டாசியச் சத்துக்கள் அதிகம் நிறைந்த இந்த காய்கறிகளை உங்கள் அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.
பாலக்கீரை
100 கிராம் பாலக்கீரையில் 79 மில்லி கிராம் பொட்டாசியச் சத்துக்கள் உள்ளது. இதில் இரும்புச் சத்துக்கள், கால்சியம் மற்றும் வைட்டமின் கே ஆகிய சத்துக்களும் உள்ளன. இந்த கீரை உங்கள் எலும்பு ஆரோக்கியத்துக்கு உதவுகிறது. வீக்கத்தைக் குறைக்கிறது. இதய ஆரோக்கியத்துக்கும் நல்லது.
வெண்டைக்காய்
100 கிராம் வெண்டைக்காயில் 57 மில்லி கிராம் பொட்டாசியச் சத்துக்கள் உள்ளது. இதில் நார்ச்சத்துக்களும், வைட்டமின் சி சத்துக்களும் உள்ளது. இதில் உள்ள பொட்டாசியச் சத்துக்கள் உங்கள் இதய ஆரோக்கியத்துக்கு உதவுகிறது. மேலும் நார்ச்சத்துக்கள் செரிமான ஆரோக்கியம் மற்றும் ரத்தச் சர்க்கரையை கட்டுப்படுத்த உதவுகிறது.
