Porivilanga Uridai : பொரிவிளங்கா உருண்டை! உங்கள் பற்களின் பலத்தை பதம் பார்க்கும்! ஆரோக்கியத்தை அள்ளி வழங்கும்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Porivilanga Uridai : பொரிவிளங்கா உருண்டை! உங்கள் பற்களின் பலத்தை பதம் பார்க்கும்! ஆரோக்கியத்தை அள்ளி வழங்கும்!

Porivilanga Uridai : பொரிவிளங்கா உருண்டை! உங்கள் பற்களின் பலத்தை பதம் பார்க்கும்! ஆரோக்கியத்தை அள்ளி வழங்கும்!

Priyadarshini R HT Tamil
Published Sep 15, 2024 02:52 PM IST

Porivilanga Uridai : பொரிவிளங்கா உருண்டை, தமிழ்நாட்டின் பாரம்பரிய ஸ்னாக்ஸ். உங்கள் பற்களின் பலத்தை பதம் பார்க்கும். ஆனால், ஆரோக்கியத்தை அள்ளி வழங்கும். இதைச் செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

Porivilanga Uridai : பொரிவிளங்கா உருண்டை! உங்கள் பற்களின் பலத்தை பதம் பார்க்கும்! ஆரோக்கியத்தை அள்ளி வழங்கும்!
Porivilanga Uridai : பொரிவிளங்கா உருண்டை! உங்கள் பற்களின் பலத்தை பதம் பார்க்கும்! ஆரோக்கியத்தை அள்ளி வழங்கும்!

தேவையான பொருட்கள்

பாசிப் பயறு – 2 கப்

புழுங்கல் அரிசி – அரை கப்

தேங்காய் துருவல் – அரை கப்

வெல்லம் – ஒன்றரை கப் (பொடியாக நுணுக்கியது)

ஏலக்காய்ப் பொடி – அரை ஸ்பூன்

சுக்குப் பொடி - கால் டீஸ்பூன்

பொரிவிளங்காய் உருண்டை செய்வது எப்படி?

கடாயில் அரிசி மற்றும் பாசிப்பயறு இரண்டையும் தனித்தனியாக சேர்த்து நன்றாக சிவந்து வாசம் வரும்வரையில் வறுத்துக்கொள்ளவேண்டும். பச்சைப்பயறுடன் கால் ஸ்பூன் வெள்ளை முழு உளுந்து போட்டு வறுக்கவேண்டும். அப்போதுதான் பயிறு சிவப்பது தெரியும்.

அடுத்து பொட்டுக்கடலையைப்போட்டு நன்றாக வறுத்துக்கொள்ளவேண்டும். பின்னர் தேங்காய்த் துருவலைப்போட்டு நன்றாக தண்ணீர் வற்றி சிவக்கும் வரை வறுத்து தனியாக வைத்துக்கொள்ளவேண்டும். தேங்காயை துண்டுகளாக்கியும். சிவக்க வறுத்துக்கொள்ளலாம்.

காய்ந்த மிக்ஸி ஜாரில் சேர்த்து வறுத்த அரிசி, பாசிப்பயறு ஆகியவற்றை கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டு அரைத்துக்கொள்ளவேண்டும்.

ஒரு பாத்திரத்தில் அரைத்த மாவு, வறுத்த பொட்டுக்கடலை, தேங்காய்த் துருவல் அல்லது துண்டுகள், ஏலக்காய் பொடி, சுக்குப்பொடி என அனைத்தையும் சேர்தது நன்றாகக் கலந்துகொள்ளவேண்டும்.

அடிக்கனமான பாத்திரத்தில் வெல்லத்தைப் போட்டு அத்துடன் அரை கப் தண்ணீரைச் சேர்த்து கொதிக்க விடவேண்டும். வெல்லம் கரைந்து, கொதிக்க ஆரம்பித்தவுடன், அதை எடுத்து வடிகட்டி விட்டு மீண்டும் ஒரு பாத்திரத்தில் ஊற்றி கம்பி பாகு பதம் வரும் வரை காய்ச்சவேண்டும்.

வெல்லத்தில் இருக்கும் தூசிகள் பாகில் வரக்கூடாது என்பதால்தான் இரண்டு பாத்திரத்தில் இருமுறை வெலத்தை காய்ச்ச வேண்டும். அடுப்பை குறைவான தீயில் வைத்துக்கொள்ளவேண்டும்.

ஒரு தட்டில், 3 அல்லது 4 கரண்டி மாவைப் போட்டு, அதன் மேல் இரண்டு கரண்டி வெல்லப்ப்பாகை ஊற்றி, ஒரு ஸ்பூனால் கலந்து, உடனடியாக உருண்டை பிடிக்கவேண்டும்.

பாகு மாவு இரண்டையும் சரியான அளவில் சேர்த்து அனைத்து மாவையும் உருண்டைகளாக பிடித்துக்கொள்ளவேண்டும். பாகை போட்டு உருண்டை பிடிக்கும் அளவுக்கு வரும் வரை பார்த்து கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்துக்கொள்ள வேண்டும்.

இந்த உருண்டை கெட்டியாக இருக்கும். அதனால் இது கெட்டி உருண்டை என்று அழைக்கப்படுகிறது. இதை கடித்து சாப்பிடுவது மிகவும் கடினம். ஆனால் சுவை நிறைந்ததாக இருக்கும்.

தினமும் உங்கள் குழந்தைகளுக்கு ஒன்று அல்லது இரண்டு உருண்டை கொடுத்தால் அவர்களின் உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும்.

இது கடிப்பதற்கு கொஞ்சம் கடினமாக இருந்தாலும், சுவை அனைவருக்கும் பிடிக்கும் வகையில்தான் இருக்கும். இதை உங்கள் வீட்டில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். ஒருமுறை ருசித்தால் மீண்டும், மீண்டும் ருசிப்பீர்கள்.

இதுபோன்ற பல்வேறு ஆரோக்கியமான ரெசிபிக்களை ஹெச்.டி தமிழ் உங்களுக்காக ஆராய்ந்து எடுத்து வழங்கிவருகிறது. இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்துகொள்ள நீங்கள் இந்தப்பக்கத்தில் இணைந்திருங்கள்.