Poondu Thokku Rice : மணக்கும் பூண்டு தொக்கில் சூடான சாதம் சேர்க்க சூப்பரான லன்ச் பாக்ஸ் ரெசிபி தயார்–பூண்டு தொக்கு சாதம்
Poondu Thikku Rice : பூண்டு தொக்கு சாதம் செய்வது எப்படி என்று பாருங்கள். இதை லன்ச் பாக்ஸ்க்கு கொடுத்துவிட்டால் கொஞ்சம் கூட மிச்சம் இருக்காது.

பூண்டு தொக்கு சாதம் செய்ய தேவையான பொருட்கள்
• உதிரியாக வடித்த சூடான சாதம் – ஒரு கப்
• நல்லெண்ணெய் – ஒரு குழிக்கரண்டி
• கடுகு – கால் ஸ்பூன்
• வெந்தயம் – கால் ஸ்பூன்
• கறிவேப்பிலை – ஒரு கொத்து
• சின்ன வெங்காயம் – ஒரு கைப்பிடியளவு (பொடியாக நறுக்கியது)
• பூண்டு – ஒரு கைப்பிடியளவு (பொடியாக நறுக்கியது)
• தக்காளி – 2 (பொடியாக நறுக்கியது)
• புளிக்கரைசல் – கால் கப்
• உப்பு – தேவையான அளவு
• மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
• குழம்பு மிளகாய்த் தூள் – ஒரு ஸ்பூன்
செய்முறை
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து அது சூடானவுடன், அதில் கடுகு, வெந்தயம் சேர்த்து பொரிந்தவுடன் கறிவேப்பிலையை, பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், பூண்டு என அனைத்தையும் சேர்த்து நன்றாக எண்ணெயிலே வதக்கிக்கொள்ளவேண்டும்.
அடுத்து தக்காளியையும் சேர்த்து நன்றாக வதக்கவேண்டும். உப்பு, மஞ்சள் தூள், குழம்பு மிளகாய்த் தூள் சேர்த்து நன்றாக மசித்துக்கொள்ளவேண்டும். அடுத்து புளிக்கரைசல் சேர்த்து நன்றாக கொதிக்கவிடவேண்டும்.
புளிக்கரைசல் நீங்கள் விரும்பினால் சேர்க்கலாம். இல்லாவிட்டால் வெறும் தண்ணீர் கூட சேர்த்து கொதிக்கவிடலாம். அதில் வடித்து ஆறவைத்த சாதத்தை சேர்த்து கிளறினால், சூப்பர் சுவையான லன்ச் பாக்ஸ் ரெசிபி தயார். இதை லன்ச் பாக்ஸில் போட்டுக்கொடுத்துவிட்டீர்கள் என்றால் கொஞ்சம் கூட மிச்சம் வராது.
அந்தளவுக்கு சுவையானதாக இருக்கும். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். பெரியவர்களுக்கும் பிடிக்கும் சுவையில் இருக்கும். நீங்கள் ஒருமுறை ருசித்தால் மீண்டும் சாப்பிடவேண்டும் என்று நினைப்பீர்கள். எனவே செய்து பாருங்கள். இதற்கு தொட்டுக்கொள்ள வத்தல், அப்பளமே போதும். அதற்கும் நீங்கள் பெரிதாக ஒன்றும் கஷ்டப்படத் தேவையில்லை.
மேலும் ஒரு ரெசிபியைத் தெரிந்துகொள்ளுங்கள்
சம்பா கோதுமை ரவை – தக்காளி தோசை செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்
• சம்பா கோதுமை ரவை – ஒரு கப்
• தக்காளி – 1
• வரமிளகாய் – 5
• சீரகம் – அரை ஸ்பூன்
• அரிசி மாவு – ஒரு டேபிள் ஸ்பூன்
• இஞ்சி – ஒரு சிறிய துண்டு
செய்முறை
சம்பா கோதுமை ரவையை 10 நிமிடம் ஊறவைத்துக்கொள்ளவேண்டும். ஊறியவுடன் அதில் தக்காளி, வர மிளகாய், சீரகம், அரிசி மாவு, இஞ்சி சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ளவேண்டும். இதை தோசைக்கல்லில் ரவா தோசைப் போல் மெல்லிசாக வார்த்து எடுக்கலாம் அல்லது அடைபோல் மொத்தமாகவும் வார்த்து எடுக்கலாம்.
சூப்பர் சுவையில் அசத்தும் இந்த தோசைக்கு தேங்காய் சட்னி சூப்பர் மேட்ச்சாக இருக்கும். இட்லி, தோசை மாவு இல்லாத நேரத்தில் இதுபோல் ஈசியாக செய்து நிலைமையை சமாளித்துக்கொள்ளலாம். இதன் சுவையும் அசத்தலாக இருக்கும் என்பதால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். எனவே செய்து சாப்பிட்டு மகிழ்ந்திருங்கள்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்