தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  Poondu Idly Podi An Idly Podi With A Different Flavor With Garlic Here Are Some Saving Tips

Poondu Idly Podi : பூண்டு சேர்த்து வித்யாசமான சுவையில் ஒரு இட்லிப்பொடி! சேமிக்கும் குறிப்புகளும் இதோ!

Priyadarshini R HT Tamil
Mar 26, 2024 06:30 AM IST

Poondu Idly Podi : பூண்டு சேர்த்து வித்யாசமான சுவையில் ஒரு இட்லிப்பொடி செய்வது எப்படி?

Poondu Idly Podi : பூண்டு சேர்த்து வித்யாசமான சுவையில் ஒரு இட்லிப்பொடி! சேமிக்கும் குறிப்புகளும் இதோ!
Poondu Idly Podi : பூண்டு சேர்த்து வித்யாசமான சுவையில் ஒரு இட்லிப்பொடி! சேமிக்கும் குறிப்புகளும் இதோ!

ட்ரெண்டிங் செய்திகள்

உளுத்தம்பருப்பு – ஒரு கப்

வெள்ளை எள் – கால் கப்

மிளகாய் வற்றல் – 20

கறிவேப்பிலை - ஒரு கொத்து

பெருங்காயத்தூள் – ஒரு ஸ்பூன்

பூண்டு பற்கள் – 15

கல் உப்பு - தேவையான அளவு

நல்லெண்ணெய் – இரண்டரை டேபிள் ஸ்பூன்

(அனைத்து பொருட்களையும் வறுக்க அடிக்கனமான இரும்பு கடாயை எடுத்துக்கொள்ள வேண்டும்)

செய்முறை

கடாயை சூடாக்கி அதில் வெள்ளை எள்ளை சேர்த்து மிதமான சூட்டில் சட சடவென பொரிந்து வரும் வரை வறுக்கவேண்டும். பின்னர் அதை ஒரு தட்டில் மாற்றிக் கொள்ள வேண்டும்.

அதே கடாயில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு சூடானவுடன் அரை கப் கடலைப்பருப்பை சேர்த்து மிதமான சூட்டில் வறுத்துக்கொள்ள வேண்டும். கடலைப்பருப்பு லேசாக நிறம் மாறி வரும்போது உளுத்தம்பருப்பை சேர்த்து கையை எடுக்காமல் தொடர்ந்து மிதமான சூட்டில் நன்றாக சிவந்து வாசம் வரும் வரை வறுத்துக்ககொண்டே இருக்கவேண்டும். பின்னர் தட்டில் மாற்றிக் கொள்ளவேண்டும்.

அடுத்து ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு அதில் மிளகாய் வற்றல் சேர்த்து மிதமான சூட்டில் வறுக்கவேண்டும். ஒரு நிமிடம் வறுபட்டவுடன் ஒரு கொத்து கறிவேப்பிலையை சேர்த்து தொடர்ந்து கையை எடுக்காமல் வறுக்கவேண்டும். மிளகாய் வற்றல் மற்றும் கறிவேப்பிலை முறுகலானதும் அதையும் ஒரு தட்டில் மாற்றி கொள்ளவேண்டும்.

பின் எஞ்சிய எண்ணெய் விட்டு தட்டிய பூண்டு பற்களை சேர்த்து நன்றாக சிவந்து வரும் வரை வறுக்கவேண்டும். பின்னர் அடுப்பை அணைத்து விடவேண்டும்.

வறுத்து வைத்துள்ள பொருட்களை ஆறவைத்துக் கொள்ளவேண்டும்.

காய்ந்த மிக்ஸி ஜாரில் வறுத்து ஆறவைத்த பருப்பை சேர்த்து கொர கொரப்பாக அரைத்து பின் வறுத்த மிளகாய் வற்றல் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து பொடிக்கவேண்டும்.

கடைசியாக பெருங்காயத்தூள், வறுத்த எள், வறுத்த பூண்டு மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கொர கொரப்பாக அரைத்துக் கொள்ளவேண்டும். மணக்க மணக்க இட்லி பொடி தயார்.

பொடியை ஆறவைத்து காற்று புகாத டப்பாவில் மாற்றிக் கொள்ளவேண்டும். இதை ஒரு மாதம் வரை பயன்படுத்தலாம்.

நன்றி - விருந்தோம்பல். 

குறிப்புகள்

கருப்பு உளுந்து, கருப்பு எள் சேர்த்தும் இட்லிப்பொடி தயார் செய்யலாம். இட்லிப்பொடிக்கு தொட்டுக்கொள்ள எப்போதும் நல்லெண்ணெய் தான் சிறந்தது. இட்லிப்பொடியின் சுவை அதிகரிக்க சிறிது புளி கூட சேர்த்துக்கொள்ளக்கலாம்.

பொடியை கொரகொரப்பாக, நைசாக என இரண்டு வகைகளிலும் உங்களுக்கு பிடித்தவாறு அரைத்துக்கொள்ளலாம். கொரகொரப்பாக இருப்பது அதிக சுவையாக இருக்கும். அதிகளவில் செய்யும்போது மில்லில் கொடுத்து அரைத்தால் நன்றாக இருக்கும்.

எந்த ஒரு பொடியையுமே மிக நீண்ட நாட்கள் வைத்துக்கொள்ளக்கூடாது. அதிகபட்சமாக ஒரு மாதம் வரை பயன்படுத்தலாம். மாதத்திற்கு ஒருமுறை ஃபிரஷ்ஷாக செய்யும்போதுதான், அதன் சுவை, மணம் என அனைத்தும் மாறாது.

நீண்ட நாட்கள் வைத்துக்கொள்ள விரும்பினால், அதை பெரிய டப்பாவில் அடைத்து காற்றுபுகாதபடி மேலே ஒரு பேப்பர் போட்டு டப்பாவை மூடிவிட வேண்டும்.

அன்றாட பயன்பாட்டுக்கு தனியாக ஒரு சிறிய டப்பாவில் எடுத்துக்கொள்ள வேண்டும். டப்பாவை அடிக்கடி திறந்து மூடினாலே போதும் அதன் நிறம் மற்றும் சுவை மாறக்கூடும்.

WhatsApp channel

டாபிக்ஸ்