Tamil News  /  Lifestyle  /  Pongal Special Recipe Tithikkum Karkandu Pongal Sweet Pepper Pongal Perfect For A Super Presentation

Pongal Special Recipe : தித்திக்கும் கற்கண்டு பொங்கல்; மணக்கும் மிளகு பொங்கல்; சூப்பர் கொண்ட்டாட்டத்துக்கு ஏற்றது!

Priyadarshini R HT Tamil
Jan 14, 2024 06:00 AM IST

Pongal Special Recipe : தித்திக்கும் கற்கண்டு பொங்கல்; மணக்கும் மிளகு பொங்கல்; சூப்பர் கொண்ட்டாட்டத்துக்கு ஏற்றது!

Pongal Special Recipe : தித்திக்கும் கற்கண்டு பொங்கல்; மணக்கும் மிளகு பொங்கல்; சூப்பர் கொண்ட்டாட்டத்துக்கு ஏற்றது!
Pongal Special Recipe : தித்திக்கும் கற்கண்டு பொங்கல்; மணக்கும் மிளகு பொங்கல்; சூப்பர் கொண்ட்டாட்டத்துக்கு ஏற்றது!

ட்ரெண்டிங் செய்திகள்

கற்கண்டு – 200 கிராம்

பால் – ஒரு கப்

ஏலக்காய் தூள் – 2 சிட்டிகை

முந்திரி – ஒரு கைப்பிடி

உலர்ந்த திராட்சை – ஒரு கைப்பிடி

நெய் – தேவையான அளவு

உப்பு – ஒரு சிட்டிகை

செய்முறை -

கடாயில் தண்ணீர் மற்றும் கல்கண்டு சேர்த்து, கல்கண்டு கரையும் வரை கொதிக்கவிட்டு, எடுத்து வைக்கவேண்டும்.

பச்சரிசியை 30 நிமிடங்கள் ஊறவைக்கவேண்டும்.

ஒரு பாத்திரத்தில், தண்ணீர் மற்றும் பால் சேர்த்து சூடாக்கவேண்டும்.

இதில் ஊறவைத்த அரிசியை சேர்த்து வேகவிடவேண்டும்.

அரிசி குலைய வெந்தவுடன், இதில் செய்த கல்கண்டு பாகை வடிகட்டி ஊற்றவும்

அனைத்தும் நன்றாக திரண்டு வரும்வரை வேகவிடவும்

இதில் ஏலக்காய் தூள், வறுத்த முந்திரி திராட்ரசை சேர்த்து இறக்கவேண்டும்.

கல்கண்டு பொங்கல் தயார்.

மிளகு பொங்கல்

தேவையான பொருட்கள்

பச்சை அரிசி – ஒரு கப்

பாசி பருப்பு – அரை கப்

மிளகு – 2 டேபிள் ஸ்பூன்

இஞ்சி – 1 துண்டு

நெய் – 2 டேபிள் ஸ்பூன்

சீரகம் – ஒரு ஸ்பூன்

முந்திரி பருப்பு – ஒரு கைப்பிடி

பெருங்காயத்தூள் – கால் ஸ்பூன்

கறிவேப்பிலை – 2 கொத்து

செய்முறை -

மிளகு பொங்கல் செய்வதற்கு ஒரு குக்கரில் பச்சை அரிசி, பாசிப்பருப்பு இந்த இரண்டையும் நன்கு சுத்தமாக கழுவி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து ஐந்து விசில் வரும் வரை வேகவைக்கவேண்டும்.

அடுத்து பொங்கலை தாளிக்க ஒரு தாளிக்கும் கரண்டியில் நெய், சீரகம், இடித்த மிளகு, பொடியாக நறுக்கிய இஞ்சி, முந்திரி பருப்பு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை சேர்த்து நன்கு கிளறவேண்டும்.

செய்து வைத்த பொங்கலுடன் சேர்த்து நன்கு கலக்கவேண்டும்.

இறுதியாக இந்த பொங்கலை நெய் சேர்த்து பறிமாறவேண்டும்.

சூடான மற்றும் மிகவும் எளிமையான மிளகு பொங்கல் தயார்.

பொங்கல், ஆங்கிலப்புத்தாண்டுக்கு அடுத்து வரும் பண்டிகை, இது அறுவடையை கொண்டாடும் பண்டிகை. இந்த நாளில் வெண் பொங்கல் மற்றும் சர்க்கரை பொங்கலிட்டு கொண்டாடப்படுகிறது. 

கிராமத்தில் பொங்கல் விழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. பொங்கலன்று சூரிய பகவானுக்கு நன்றி தெரிவிக்கப்படுகிறது. விவசாயத்துக்கு உதவிய மாடுகள் மற்றும் இயற்கைக்கு நன்றி கூறும் திருவிழாவாக பொங்கல் தமிழ்நாட்டில் கொண்டாடப்படுகிறது.  

இதையொட்டி, காளைகளை அவிழ்த்துவிட்டு அடக்கும் ஜல்லிக்கட்டு எனப்படும் வீர விளையாட்டும் நடைபெறுகிறது. திங்கட் கிழமை வரும் பொங்கலன்று வித்யாசமாக மிளகு பொங்கல் மற்றும் கற்கண்டு பொங்கல் செய்து மகிழுங்கள். பல்வேறு வித்யாசமான முறைகளிலும் அன்று பொங்கல் செய்து அசத்தலாம். 

நன்றி - ஹேமா சுப்ரமணியன். 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

WhatsApp channel

டாபிக்ஸ்