Pongal 2025 : தமிழ்நாட்டில் அறுவடை திருவிழா, பொங்கல்; இந்தியாவின் மற்ற மாநிலங்களில் எவ்வாறு கொண்டாப்படுகிறது?
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Pongal 2025 : தமிழ்நாட்டில் அறுவடை திருவிழா, பொங்கல்; இந்தியாவின் மற்ற மாநிலங்களில் எவ்வாறு கொண்டாப்படுகிறது?

Pongal 2025 : தமிழ்நாட்டில் அறுவடை திருவிழா, பொங்கல்; இந்தியாவின் மற்ற மாநிலங்களில் எவ்வாறு கொண்டாப்படுகிறது?

Priyadarshini R HT Tamil
Jan 14, 2025 06:23 AM IST

இந்தியாவின் மற்ற மாநிலங்களில் பொங்கல் பண்டிகை எவ்வாறு கொண்டாடப்படுகிறது என்று பாருங்கள்.

Pongal 2025 : தமிழ்நாட்டில் அறுவடை திருவிழா, பொங்கல்; இந்தியாவின் மற்ற மாநிலங்களில் எவ்வாறு கொண்டாப்படுகிறது?
Pongal 2025 : தமிழ்நாட்டில் அறுவடை திருவிழா, பொங்கல்; இந்தியாவின் மற்ற மாநிலங்களில் எவ்வாறு கொண்டாப்படுகிறது?

கர்நாடகா

கர்நாடகாவில் உறவினர் வீடுகளுக்குச் சென்று பரிசுகள் கொடுத்தும், எள்ளு என்ற ரெசிபி செய்து கொண்டாடப்படுகிறது. கரும்புடன் சேர்த்து இந்த எள்ளு என்ற உணவை மக்கள் உட்கொள்கிறார்கள். அதை மற்றவர்களுடனும் பகிர்ந்துகொள்கிறார்கள். பொங்கல் கர்நாடகாவில் சங்கராந்தி என்று அழைக்கப்படுகிறது. மாடு மற்றும் காளைகளை அலங்கரித்து பொங்கல் ஊட்டுகிறார்கள். கோயில் மற்றும் வீடுகளில் மக்கள் சிறப்பு வழிபாடு நடத்துகிறார்கள். மாலையில் மாடுகளை மேளதாளங்கள் முழங்க ஊர்வலம் அழைத்துச் செல்கிறார்கள். மாலையில் தீ மூட்டி, மக்கள் இதமாக குளிர்காய்ந்து, இந்த குளிர் மாதத்தின் குளிரை ஓட்டுகிறார்கள். இந்த நாளில் அனைவரும் புத்தாடை உடுத்துகிறார்கள்.

மஹாராஷ்ட்ரா

மஹாராஷ்ட்ராவில் பொங்கல் பண்டிகை மகர் சங்கராந்தி என்று கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் பட்டங்கள் பறக்கவிடப்படுகிறது. பல்வேறு வடிவங்களில் வண்ணமயமான பட்டங்கள் வானத்தில் பறக்கும். லட்டு மற்றும் எள்ளில் செய்யப்படும் லட்டுகளை பரிமாறி ஆண்டு முழுமைக்கும் இனிமை நிறைந்திருக்க வாழ்த்துகிறார்கள். இந்த நாளில் புதுமணப்பெண்களுக்கு எள், பருத்தி, எண்ணெய் ஆகியவை சீராகக் கொடுக்கப்படுகிறது. இன்றைய நாளில் அந்தப்பெண்ணுக்கு மஞ்சள், குங்குமம் வைத்து நலங்கு வைக்கப்படுகிறது. பெண், புகுந்த வீட்டில் பெருவாழ்வு வாழ விருந்தினர்கள் வந்து வாழ்த்தி நலங்கு வைத்துவிட்டுச் செல்கிறார்கள்.

குஜராத்

குஜராத்திலும் மகர் சங்கராந்தியாகக் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகையன்று வண்ண வண்ண பட்டங்கள் வானில் பறக்கவிடப்படுகின்றன. 13 மற்றும் 14 இரண்டு நாட்களிலும் களைகட்டும் கொண்டாட்டத்தில் அனைத்து குடும்பத்தினரும் வெளியில் இருப்பார்கள். விடிந்தது முதல் இரவு வரை எண்ணற்ற பட்டங்கள் வானில் பறக்கவிடப்படும். பல ஆயிரக்கனக்காண பட்டங்கள் பறப்பதைப் பார்க்க அழகாக இருக்கும். ஜனவரி 14ம் தேதி சர்வதேச பட்டங்கள் விடும் திருவிழா தலைநகர் அகமதாபாத்தில் நடைபெறும். இந்தப்பண்டிகை உத்தராயன் அல்லது மகர் சங்கராந்தி என்று அழைக்கப்படுகிறது. பெரும் உற்சாகத்துடன் பொங்கல் பண்டிகைக் கொண்டாடப்படுகிறது. மற்ற வேலைகளுக்கு 4 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டு இந்தப் பண்டிகை சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

உத்ரபிரதேசம்

உத்ரபிரதேசத்தில், பொங்கல் பண்டிகை மகர் சங்கராந்தியாகக் கொண்டாடப்படுகிறது. இது கிச்சரி என்று அழைக்கப்படுகிறது. இன்று புனித நீராடப்படுகிறது. கங்கா, யமுனா மற்றும் சரஸ்வதி சங்கமத்தில் எண்ணற்ற பக்தர்கள் குவிந்து புனித நீராடுகின்றனர். இங்கு ஒரு மாதம் கும்பமேளா கொண்டாடப்படுகிறது. இன்றைய நாளில் புனிதநீராடாதவர்கள் அடுத்த ஜென்மத்தில் கழுதையாகப் பிறப்பார்கள் என்று இங்குள்ள மலைபிரதேசங்களில் நம்பிக்கை நிலவுகிறது. அலகாபாத் திரிவேணி சங்கமத்தில் பெரிய கண்காட்சி நடக்கிறது. இதற்கு மெகா மேளா என்று பெயர். திரிவேணி சங்கமம் தவிரி ஹரித்வார் மற்றும் கார் முக்தேஸ்வரிலும் புனித நீராடுவது நடக்கிறது. பட்டமும் விடப்படுகிறது.

ஆந்திரா

ஆந்திராவில் ஒரு மாதம் முன்னதாகவே பொங்கல் கொண்டாட்டங்கள் துவங்கிவிடுகின்றன. போகியில் துவங்கி காணும் பொங்கலில் கொண்டாட்டங்கள் முடிவடைகின்றன. போகியன்று அதிகாலையில் தேவையற்ற பொருட்கள் எரிக்கப்படுகின்றன. பாரம்பரிய குளியல், பொங்கலிடுதல், அதிரசம் செய்தல் என கொண்டாடப்படுகிறது. காணும் பொங்கலன்று கால்நடைகள் அலங்கரிக்கப்பட்டு, அவற்வை வைத்து ரேஸ்கள் மற்றும் சண்டைகள் நடத்தப்படுகின்றன. சூரியன், மகாபலி (திராவிட அரசன்) மற்றும் கோடாதேவி ஆகிய தெய்ங்கள் இந்த நாளில் வழிபடப்படுகின்றன.

கேரளா

கேரளாவிலும் இந்தப்பண்டிகை மகர சங்கராந்தியாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் சபரிமலையில் மகரஜோதி ஏற்றப்படுகிறது. சபரிமலை அய்யப்பனுக்கு திருவாம்பாரம் சாற்றப்படுகிறது. திருவாம்பாரம் என்றால் சிறப்பு நகைகள். இந்த நகைகள் பந்தளம் மகாராஜாவால் அய்யப்பனுக்கு வழங்கப்பட்டவை.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.