Pomegranate Poriyal : என்ன மாதுளை பழத்தில் பொரியல் செய்யலாமா? இதோ ரெசிபி! செஞ்சு அசத்துங்க!
Pomegranate Poriyal : மாதுளை பழத்தில் பொரியல் செய்வது எப்படி?
மாதுளையை நாம் பழமாக மட்டுமே சாப்பிட்டு இருப்போம் அல்லது சாறு பிழிந்து பருகியிருப்போம். ஆனால் மாதுளையில் பொரியல் செய்யமுடியுமா? அது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்
எண்ணெய் – 2 ஸ்பூன்
கடுகு – கால் ஸ்பூன்
உளுந்து – கால் ஸ்பூன்
சீரகம் – கால் ஸ்பூன்
கடலை பருப்பு – கால் ஸ்பூன்
வரமிளகாய் – 2
குடை மிளகாய் – கால் பகுதி ( சிறிதாக நறுக்கியது)
கறிவேப்பிலை – 2 கொத்து
மாதுளை பழம் – ஒரு கப் (முத்துக்களை மட்டும் உதிர்த்து எடுத்துக்கொள்ளவேண்டும்)
தேங்காய் துருவல் – அரை கப்
மல்லித்தழை – சிறிதளவு
சின்ன வெங்காயம் – அரை கப் (பொடியாக நறுக்கியது)
உப்பு – தேவையான அளவு
செய்முறை
கடாயை சூடாக்கி, அதில் எண்ணெயை சேர்க்கவேண்டும். பின்னர் கடுகு, உளுந்து, கடலைபருப்பு மற்றும் சீரகம் சேர்த்து பொரியவிடவேண்டும்.
இவையனைத்தும் பொரிந்துவுடன், அதில் கறிவேப்பிலை, வர மிளகாய் சேர்க்கவேண்டும்.
பின்னர் நறுக்கிய வெங்காயம் மற்றும் குடை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவேண்டும்.
அடுத்து மாதுளையை சேர்த்து நன்றாக கிளறிவிட்டு, தேங்காய் துருவல் மற்றும் மல்லித்தழை சேர்த்து இறக்கவேண்டும்.
சட்டுன்னு ரெடியாகிவிடும மாதுளை பொரியல். இது விருந்துகளில் பரிமாற ஏற்ற வித்யாசமான சைட் டிஷ்.
விருந்துகளில் பொதுவாக 4 அல்லது 5 சைட் டிஷ்கள் பரிமாறப்படும், இந்த வித்யாசமான சைட் டிஷ் அளவாக விருந்தில் பரிமாறப்படும்போது விருந்தின் சுவையை அதிகரிக்கும். அதனால் விருந்தில் நிறைவாக சாப்பிட்ட திருப்தி கிடைக்கும்.
பழம் இனிப்பு சுவை நிறைந்தது என்பதால், பொரியலும் இனிப்பு, உவர்ப்பு, காரம் என பல்வேறு சுவைகள் நிரம்பியதாக இருக்கும்.
மாதுளை பழத்தின் நன்மைகள்
மாதுளையில் அதிகளவில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளது. பனிகாலாஜின்கள் மற்றும் ஆந்தோசியானின்களை உள்ளடக்கியது. இந்த ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், செல் உடைவதை தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இவை மனஅழுத்ததுக்கு எதிரான மருந்து.
பல்வேறு வியாதிகளுக்கும் நாள்பட்ட அலர்ஜிதான் காரணமாகிறது. சில புற்றுநோய்கள், இதய நோய்கள் ஏற்படுவதற்கு கூட காரணமாகிறது. மாதுளையில் அலர்ஜிக்கு எதிரான பொருட்கள் உள்ளன. அது அலர்ஜியை போக்க உதவுகிறது.
தய ஆரோக்கியத்தில் இது முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் ரத்த அழுத்தத்தை குறைத்து, ரத்த நாளங்கள் சரியாக இயங்கவும், தமனியில் உள்ள இறுக்கத்தையும் குறைக்கிறது.
நல்ல மற்றும் கெட்ட கொழுப்புக்களிடடையே சமநிலையை பாராமரிக்கிறது. மாதுளையை வழக்கமாக எடுத்துக்கொண்டால், அது எல்டிஎல் கொழுப்பு அளவை குறைக்கிறது. ஹெச்டிஎல் கொழுப்பை அதிகரிக்கிறது.
மாதுளையில் உள்ள உயிரி வேதிப்பொருட்கள் ஆதிரோசிலோரிடிக்குக்கு எதிரானது. இது தமனியில் ப்ளேக் உருவாவதை தடுக்க உதவி, ஆதிரோசிலோரிசிஸ் ஏற்படும் ஆபத்தை குறைக்கிறது.
புற்றுநோய் தடுப்பில் மாதுளைகள் முக்கிய பங்கு வகிப்பதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன. இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் செல்கள் சேதமடைவதை தடுக்கிறது. கேன்சர் செல்கள் வளர்வதை தடுக்கிறது.
மாதுளையின் நியுரோப்ரொடக்டிவ் திறன்கள் குறித்து ஆரம்ப கட்ட ஆய்வுகள் சுட்டிக்காட்டியுள்ளன. இந்த பழத்தில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், நினைவாற்றலை பெருக்கி, ஞாபக சக்தியை அதிகரிக்கச் செய்கிறது.
மாதுளை ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது மட்டுமல்ல, உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களும் நிறைந்ததும் ஆகும். இதில் வைட்டமின் சி, கே, பொட்டாசியம் ஆகிய சத்துக்கள் உள்ளன.
எலும்பு ஆரோக்கியம், நோய் எதிர்ப்பு என ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்துக்கும் மாதுளை உதவுகிறது.
மாதுளையில் உள்ள அதிக நார்ச்சத்து செரிமான மண்டலத்துக்கு உதவுகிறது. மலச்சிக்கலை போக்குகிறது.
இத்தனை ஆரோக்கிய நன்மைகள் நிறைந்த இந்தப்பழத்தை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்வது உங்கள் உடல் ஆரோக்கியம் மேம்பட உதவுகிறது. உங்கள் தினசரி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டிய ஒரு சுவையான பழம்.
டாபிக்ஸ்