தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  Pollution Level Where Is India Among The Countries With The Worst Air Quality Shocking Report

Pollution Level : காற்றின் தரம் மோசமான நாடுகளில் இந்தியாவுக்கு எந்த இடம்? – அதிர்ச்சி அறிக்கை!

Priyadarshini R HT Tamil
Mar 26, 2024 02:54 PM IST

Pollution Level in India : சுற்றுச்சூழல் சீர்கேடு காரணமாக எழும் சுகாதார பிரச்னைகளை அரசியல் கட்சிகள் கையில் எடுக்க, மக்கள் அழுத்தம் தர முன்வர வேண்டாமா? என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Pollution Level : காற்றின் தரம் மோசமான நாடுகளில் இந்தியாவுக்கு எந்த இடம்? – அதிர்ச்சி அறிக்கை!
Pollution Level : காற்றின் தரம் மோசமான நாடுகளில் இந்தியாவுக்கு எந்த இடம்? – அதிர்ச்சி அறிக்கை!

ட்ரெண்டிங் செய்திகள்

இந்தியாவில் நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டோ அல்லது நீரின் தரம் குறைந்தோ வருவதும் அதிகமாகி வருகிறது. சுற்றுச்சூழல் மாசடைவது புவிவெப்பமடைதல் பிரச்னையையும் அதிகமாக்கி வருகிறது.

உலக அளவில் சுவாசிக்கும் காற்றின் தரத்தை அளந்து வெளியிடும் IQAir தனது சமீபத்திய அறிக்கையில், தலைநகரங்களில், புதுடெல்லியில் தான் காற்று மாசுப்பாடு மிகவும் அதிகமாக உள்ளதென்றும், நாடுகளில் மிகவும் மோசமான பாதிப்பிற்கு உள்ளான நாடுகளின் பட்டியலில் இந்தியா 3ம் இடத்தில் உள்ளதென்றும் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்திய பாராளுமன்ற நிலைக்குழு, வேளாண் துறையில், இயற்கை உரங்களை பயன்படுத்துவதற்குப் பதில், செயற்கை வேதி உரங்கள், பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்துவதால், மண்ணின் தரம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது என அறிக்கை சமர்ப்பித்துள்ளது.

அக்குழு செயற்கை நைட்ரஜன்-பாஸ்பரஸ்-பொட்டாசியம்-NPK-உரங்கள் வழக்கமாக 4:2:1 என்ற விகிதத்தில் பயன்படுத்த வேண்டும் என இருந்தும், களத்தில் அவை 31:4.8:0.1 என்ற விகிதத்தில் பயன்படுத்தப்படுவதாலும், மண்ணின் தரத்தை ஆய்வுசெய்து உறுதிசெய்யும் பரிசோதனை மையங்கள் இந்தியாவில் குறைவாக இருப்பதாலும், நைட்ரஜன் மிகு செயற்கை வேதி உரங்களை கட்டுபாடுகளின்றி அதிகமாக நாம் பயன்படுத்துவதாலும், விவசாயிகள் மத்தியில் போதிய விழிப்புணர்வு இல்லாமல் இருப்பதாலும், மண்ணின் தரமும், ஒட்டுமொத்த சுற்றுச்சூழலின் தரமும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது என அறிக்கையில் கூறுகிறது.

மத்திய அரசின் கொள்கை முடிவில் ஆலோசனை வழங்கும், NITI Aayog மையமும், நீர் மேலாண்மையில், இந்தியாவின் நிலை மோசமாக உள்ளதென தெரிவித்துள்ளது.

இந்தியாவில், கேரளாவைத் தவிர (நீர்தேக்கங்களில் 50 சதவீதம் நீர் நிரம்பியுள்ளது.) தென் இந்தியாவில் உள்ள நீர்தேக்கங்களில் 23 சதவீதம் நீர் மட்டுமே நிரம்பியுள்ளது என்றும், ஒட்டுமொத்த இந்தியாவில் நீர்தேக்கங்களில் 2023ல் 38 சதவீதம் நீர் மட்டுமே நிரம்பியுள்ளது என மத்திய நீர் கமிஷனின் சமீபத்திய அறிக்கை கூறுகிறது.

தமிழகத்தின் மேட்டூரில் முழுக்கொள்ளளவான 2.65 லட்சம் கோடி லிட்டரில் 28 சதவீதம் மட்டுமே நீர் நிரம்பியுள்ளது.

மேற்சொல்லப்பட்ட சுற்றுச்சூழல் பிரச்னைகளை இந்திய அரசியல் கட்சிகள் பெருமளவு கண்டுகொள்வதில்லை. தற்போதைய தேர்தலின் போது கூட அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கையில் சுற்றுச்சுழல் பிரச்னை குறித்து பெருமளவு எதுவும் இல்லை.

ஆனால் ஜெர்மனியில், சுற்றுச்சூழல் குறித்து அதிக அக்கறை செலுத்தும், பசுமைக்கட்சி ஆளும் கட்சியுடன் இணைந்து கூட்டணி ஆட்சியில் உள்ளது.

ஐரோப்பிய நாடுகளில் உள்ள அரை டஜன் அரசியல் கட்சிகள் சுற்றுச்சூழலைக் காப்பதில் அதிக அக்கறையுடன் செயல்பட்டு வருகிறது.

இந்தியாவிலும் தேர்தலில் சுற்றுச்சூழல் பிரச்னைகள் மைய இடத்தில் இடம்பெற வேண்டும். பொதுமக்களிடம் இருந்தே, அதற்கான அழுத்தம் வரவேண்டும்.

கடந்த ஆண்டு பிரதமர், டெல்லியில் நடைபெற்ற G20 உச்சிமாநாட்டில்,"ஒரு பூமி-ஒரு குடும்பம்-ஒரு எதிர்காலம்-"One Earth, One Family,One Future" எனப் பேசியது வரவேற்பை பெற்றாலும், இந்திய வாக்காளர்கள்,எதிர்கால சந்ததியினரின் நலன்கள் மற்றும் சுகாதாரம் காக்க, அரசியல் கட்சிகள் தனது தேர்தல் அறிக்கையில் சுற்றுச்சூழலுக்கு உரிய முக்கியத்துவம் கொடுப்பதை உறுதிசெய்ய அழுத்தம் கொடுக்க வேண்டும். .

சுற்றுச்சுழலை காத்து புவிவெப்பமடைதல் பிரச்னையை குறைப்பதில் சிறுதானியங்களின் பங்கு மிகவும் முக்கியமானது.

மக்கள் உடனடியாக பயன்படுத்தும் (Ready to use) சிறுதானிய உணவை கூழாக தயாரித்து குடித்தால் சக்கரையின் அளவு சட்டென உயரும் வாய்ப்புள்ளதால், முழுதானியங்களை (Whole grain) பயன்படுத்தியோ, அல்லது உடனடியாக பயன்படுத்தும் சிறுதானிய தயாரிப்புகளோடு, பயிறு வகைகள் (Pulses), பட்டாணி வகைகள் (Legumes), வெந்தயம், (Fenugreek) அதிக நார்சத்துள்ள காய்கறிகளை இணைத்து பயன்படுத்தினால், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு சட்டென உயராது.

அரசியல் கட்சிகளும் அரிசி அல்லது கோதுமையோடு, சிறுதானியங்களையும், பொதுவிநியோகத் திட்டத்தில் (PDS) மக்களுக்கு கொடுப்பதை ஊக்குவிக்கவேண்டும்.

சுத்தமான நீர், காற்று, உணவு மக்களுக்கு கிடைப்பதை உறுதிசெய்தும், மண்ணைக் காக்கவும், உரிய அழுத்தத்தை அரசியல் கட்சிகளுக்கு கொடுக்க மக்கள் முன்வருவது சிறப்பாக இருக்கும்.

சுற்றுச்சூழல் காக்கப்படுவதோடு, மக்களின் சுகாதாரமும் இதனால் மேம்படும்.

நன்றி – மருத்துவர். புகழேந்தி.

WhatsApp channel

டாபிக்ஸ்