Podi : வறுத்த வேர்க்கடலை மட்டும் போதும்! ஓரிரு நிமிடங்களில் சுவையான பொடி செய்யலாம் – இட்லி, சாதம் இரண்டுக்கும் ஏற்றது!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Podi : வறுத்த வேர்க்கடலை மட்டும் போதும்! ஓரிரு நிமிடங்களில் சுவையான பொடி செய்யலாம் – இட்லி, சாதம் இரண்டுக்கும் ஏற்றது!

Podi : வறுத்த வேர்க்கடலை மட்டும் போதும்! ஓரிரு நிமிடங்களில் சுவையான பொடி செய்யலாம் – இட்லி, சாதம் இரண்டுக்கும் ஏற்றது!

Priyadarshini R HT Tamil
Jan 27, 2025 01:19 PM IST

Podi : வறுத்த வேர்க்கடலை மட்டும் போதும் சூப்பர் சுவையான இட்லி மற்றும் சாதம் இரண்டுக்கும் பயன்படுத்தக்கூடிய பொடியைச் செய்யலாம்.

Podi : வறுத்த வேர்க்கடலை மட்டும் போதும்! ஓரிரு நிமிடங்களில் சுவையான பொடி செய்யலாம் – இட்லி, சாதம் இரண்டுக்கும் ஏற்றது!
Podi : வறுத்த வேர்க்கடலை மட்டும் போதும்! ஓரிரு நிமிடங்களில் சுவையான பொடி செய்யலாம் – இட்லி, சாதம் இரண்டுக்கும் ஏற்றது!

பூண்டு – தோலுடன் 10 பல்

புளி – சிறிய அளவு

கறிவேப்பிலை – 2 கொத்து

மிளகாய்த் தூள் – 2 டேபிள் ஸ்பூன்

(உங்கள் கார அளவுக்கு ஏற்ப சரிசெய்துகொள்ளலாம்)

உப்பு – தேவையான அளவு

செய்முறை

ஒரு மிக்ஸி ஜாரில் வறுத்த வேர்க்கடலை சேர்த்துக்கொள்ளவேண்டும். அதில் தோலுடனே பூண்டு, சிறிது புளி, கறிவேப்பிலை, பாதாம், மிளகு மற்றும் மிளகாய்த் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து பொடித்துக்கொள்ளவேண்டும். பொடி மிகவும் மையாகவோ அல்லது மிகவும் கொரகொரப்பாகவோ இருக்கக்கூடாது. மீடியம் பதத்தில் இருக்கவேண்டும்.

அதில் நல்லெண்ணெய் ஊற்றிக் கொள்ளவேண்டும். இதை இட்லி அல்லது தோசைக்கு சூப்பர் சுவையானதாக இருக்கும். சாதத்தில் சேர்த்து சாப்பிடும்போது நெய் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

மேலும் ஒரு ரெசிபியை தெரிந்துகொள்ளுங்கள்

மஸ்ரூம் கிரேவி செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்

காளான் – 200 கிராம்

தக்காளிப் பழம் – 2

பெரிய வெங்காயம் – 2

பட்டை – 1

கிராம்பு – 2

ஏலக்காய் – 2

மிளகு – ஒரு ஸ்பூன்

முந்திரி – 10

கஷ்மீரி மிளகாய்த் தூள் – ஒரு ஸ்பூன்

மல்லித்தூள் – ஒன்றரை ஸ்பூன்

கரம் மசாலா – ஒரு ஸ்பூன்

மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்

வெண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன்

எண்ணெய் – 6 ஸ்பூன்

கசூரி மேத்தி – சிறிதளவு

செய்முறை

முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் தக்காளி, முந்திரி, பட்டை, கிராம்பு, ஏலக்காய், மிளகு, பச்சை மிளகாய் சேர்த்து விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு கடாயில் வெண்ணெய் சேர்த்து சூடானவுடன், நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவேண்டும். அடுத்து அதில் நறுக்கி வைத்திருந்த காளானை சேர்த்து நன்றாக வதக்கி தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவேண்டும். பின்னர் அரைத்த விழுதை சேர்த்து மேலும் வதக்கவேண்டும்.

பின்னர் அதில் மிளகாய்த்தூள், மல்லித்தூள், கரம் மசாலாத் தூள், மஞ்சள் தூள் சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவேண்டும். அதில் வதக்கி வைத்திருந்த காளாளை அதில் சேர்த்து மேலும் சிறிது தண்ணீர் தெளித்து கொதிக்க விடவேண்டும்.

கடைசியாக வெண்ணெய் மற்றும் கசூரி மேத்தி தூவி இறக்கினால், சூப்பர் சுவையான மஸ்ரூம் கிரேவி தயார். இதை சப்பாத்தி, பூரி, தோசை, இட்வி என எதனுடன் வேண்டுமானாலும் தொட்டுக்கொண்டு சாப்பிட சுவை அள்ளும். இதை ஒருமுறை ருசித்தால் மீண்டும், மீண்டும் வேண்டும் என்று எண்ணுவீர்கள். இதை உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.