தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  Plastic Water Bottle Are You Drinking Water In A Plastic Bottle Oh Look At This Research

Plastic Water Bottle : பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் குடிப்பவரா நீங்கள்? அச்சச்சோ இந்த ஆராய்ச்சிய கொஞ்சம் பாருங்க!

Priyadarshini R HT Tamil
Jan 23, 2024 07:20 AM IST

Plastic Water Bottle : பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் குடிப்பவரா நீங்கள்? அச்சச்சோ இந்த ஆராய்ச்சிய கொஞ்சம் பாருங்க!

Plastic Water Bottle : பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் குடிப்பவரா நீங்கள்? அச்சச்சோ இந்த ஆராய்ச்சிய கொஞ்சம் பாருங்க!
Plastic Water Bottle : பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் குடிப்பவரா நீங்கள்? அச்சச்சோ இந்த ஆராய்ச்சிய கொஞ்சம் பாருங்க!

ட்ரெண்டிங் செய்திகள்

சமீபத்தில், அமெரிக்காவில் குடிநீர் உள்ள நெகிழிக் குடுவைகளில், நானோ நெகிழித் துகள்கள் அதிகம் இருப்பது கண்டறியப்பட்டு, National Academy of Sciences (NAS) அதை அறிக்கையாக வெளியிட்டுள்ளது.

ஒரு லிட்டர் குடிநீர் குடுவையில் (PET Bottles) 2,40,000 சிறு மற்றும் நானோ நெகிழித் துகள்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

நானோ நெகிழித் துகள்களை கண்டறிவதில் சிரமம் இருந்தது புதிய கண்டுபிடிப்பான Hyperspectoral Stimulated Raman Scattering imaging platform மூலம் தீர்த்துவைக்கப்பட்டு, Microsscopy மூலம் நானோ நெகிழித் துகள்கள் எளிதாக எண்ணப்படுவது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. நவீன Infrared Spectroscopy மூலமும் அவற்றை எண்ணுவது எளிது.

ஒரு லிட்டர் குடிநீரில் 2,40,000 சிறு நானோ நெகிழித் துகள்கள் இருப்பது கண்டறியப்பட்டு அவற்றில் 90% நானோ நெகிழித் துகள்களாக இருப்பது தெரியவந்துள்ளது.

புதியதொழில்நுட்பம் மூலம் 100 நானோமீட்டர் அளவுள்ள நெகிழித் துகள்களையும் எளிதாக கண்டறிந்து எண்ண முடியும்.

புதிய தொழில்நுட்ப நுண்ணோக்கி மூலம், ஒரு பார்வை வட்டத்தில் (Field Of View-FOV) 78-103 சிறு நெகிழித் துகள்களைக் காண முடிந்தது. 3 பிராண்ட் நெகிழிக் குடுவைகள் ஆய்விற்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

நானோ நெகிழித் துகள்கள் எளிதில் செல்களில், திசுக்களில் உட்புகுந்து சுகாதார சீர்கேடுகளை எளிதில் எற்படுத்த முடியும்.

முதலில் அவை உணவுச் சங்கிலியின் அடிமட்டத்தில் உள்ள சிறு தாவரங்கள், சிறு விலங்கினங்கள், மீன்கள் வழியாக உள்ளே நுழைந்து பின்னர் மனிதனை வந்தடைகின்றன.

எனவே, நெகிழிக் குடுவையில் இருந்து ஒரு லிட்டர் குடிநீர் ஒருவர் அருந்தும்போது, 2,40,000 நானோ நெகிழித் துகள்கள் உடம்பினுள் சென்று பாதிப்பை ஏற்படுத்த முடியும்.

பெரிய நெகிழித் துகள்கள் புறஊதாக் கதிர்களின் மூலம் (Ultraviolet Radiation) சிறு துகள்களாக உடைகிறது.

நானோ நெகிழித் துகள்களால் ஏற்படும் சுகாதார சீர்கேடுகள் தற்போது தான் ஆராயப்பட்டு வருகின்றன.

2022-23 ல் வெளிவந்த ஆய்வுக் குறிப்புகளின் படி,

இனப்பெருக்க உறுப்புகளின் பாதிப்பு

ஆக்ஸிடேடிவ் அழுத்தம் (Oxidative Stress)

ஜீரண உறுப்புகளின் பாதிப்பு

வளர்ச்சிக் குறைவு

ஈரல் பாதிப்பு

நரம்பு மண்டல பாதிப்பு

நோய் எதிர்ப்புசக்தி குறைவு

நுரையீரல் பாதிப்பு

முன்கூட்டிய உயிரிழப்பு

போன்ற பாதிப்புகள் விலங்குகள் மத்தியில் பரிசோதித்ததில் தெரியவந்துள்ளது. பாலிஸ்டீரீன் -நானோ நெகிழித் துகள்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, மேற்சொன்ன பாதிப்புகள் ஏற்படுவது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

ஒரு கிராம் பெரிய நெகிழித் துகள்களில் இருந்து பில்லியன்கள் அளவில் நானோ நெகிழித் துகள்கள் வெளியாகின்றன.

இவ்வளவு மோசமான பாதிப்பை நெகிழிக் குடுவைகளும், சிறு நெகிழித் துகள்கள் மற்றும் நானோ நெகிழித் துகள்கள் எற்படுத்த முடியும் என்பதால் மக்கள் அனைவரும் பழங்காலத்தில் பயன்படுத்தப்பட்ட மண் குடுவையில் நீரை சேமித்து அருந்துவது சிறந்தது.

தமிழகத்தில் நடக்கும் அனைத்து விழாக்கள் மற்றும் மாநாடுகளில் மண் குடுவையில் உள்ள குடிநீரை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என சட்டம் இயற்றி அதை நடைமுறைப்படுத்த வேண்டும்.

வீட்டிலும் மண்பாண்டங்களில் தண்ணீரை ஊற்றி பயன்படுத்தலாம். உள்ளூர் மண்பாண்ட தொழிலாளர்கள் இதன் மூலம் பயனடைவதுடன் நமக்கு ஆரோக்கியமும் மேம்படும்.  

நெகிழி பயன்பாட்டை குறைப்பதோடு, சுற்றுச்சூழலையும் மேற்கூறிய நடவடிக்கை பாதுகாத்து புவிவெப்பமடைதல் பிரச்னையையும் ஓரளவிற்கு கட்டுக்குள் கொண்டுவர உதவும்.

நன்றி – மருத்துவர் புகழேந்தி.

WhatsApp channel

டாபிக்ஸ்