Health Tips: இந்த உணவுகளை இரவில் தப்பிதவறியும் எடுத்துகாதிங்க! அப்புறம் தூக்கம் வராமல் விடிய விடிய சிவராத்திரி தான்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Health Tips: இந்த உணவுகளை இரவில் தப்பிதவறியும் எடுத்துகாதிங்க! அப்புறம் தூக்கம் வராமல் விடிய விடிய சிவராத்திரி தான்

Health Tips: இந்த உணவுகளை இரவில் தப்பிதவறியும் எடுத்துகாதிங்க! அப்புறம் தூக்கம் வராமல் விடிய விடிய சிவராத்திரி தான்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Published May 23, 2024 07:20 PM IST

Health Tips: இரவில் தப்பிதவறியும் எடுத்துக்க கூடாத உணவுகள் சில இருக்கின்றன. இதை செய்ய தவறும்பட்சத்தில் தூக்கம் வராமல், அன்றைய இரவு விடிய விடிய சிவராத்திரி தான். எனவே இரவு டின்னர் எடுக்கும்போது தவிர்க்க வேண்டிய உணவுகள் எவை என்பது பற்றி தெரிந்து கொள்ளலாம்

இந்த உணவுகளை இரவில் தப்பிதவறியும் எடுத்துகாதிங்க
இந்த உணவுகளை இரவில் தப்பிதவறியும் எடுத்துகாதிங்க

நீங்கள் லேசான இரவு உணவை உண்ண வேண்டும்”,

நாள்தோறும் உறங்க செல்வதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாகவே இரவு உணவை சாப்பிட்டு முடித்து விட வேண்டும். அதேபோல் இரவு உணவை தவிர்க்க கூடாது. வயிறு முழுமையாக நிரம்பும் விதமாக இல்லாமல் லேசான உணவாகவோ கூட எடுத்துக்கொள்ளலாம். உடல் எடையை குறைக்க வேண்டும் என முயற்சிப்பவர்கள், ஆரோக்கியான உணவுகளை சாப்பிட வேண்டும்.

குறிப்பாக அதிக கலோரி கொண்ட கனமான உணவுகளை தவிர்க்க வேண்டும். துரித உணவுகளை இரவு நேரத்தில் எடுத்துக்கொள்ள கூடாது. அவை உங்கள் ஆரோக்கியத்தையும், தூக்கத்தையும் பாதிக்கிறது. இரவு உணவாக தவிர்க்க வேண்டியவை எவை என்பதை தெரிந்து கொள்ளலாம்

கொழுப்பு உணவுகள்

இரவு உணவின் போது, அதிக கொழுப்புள்ள உணவுகளை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். ஏனென்றால் இது ஜீரணிக்க அதிக நேரம் எடுக்கும். அத்துடன் உடலில் கொழுப்புகள் படிவதற்கு முக்கிய பங்களிக்கிறது.

வறுத்த உணவுகள்

ஆழமாக வறுத்த உணவுகளான சிக்கன் பாப்கார்ன், வறுத்த பனீர் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். இவை உடலில் அமில வீக்கத்துக்கு வழிவகுக்கும். இதனால் நெஞ்சு எரிச்சல், அசெளகர்ய உணர்வு ஏற்படலாம்

மாவுச்சத்து உணவுகள்

அனைத்து மாவுச்சத்து உணவுகளையும் தவிர்க்கவும். குறிப்பாக நீரிழிவு நோயாளிகள் மாவு உணவுகள் தவிப்பது நலம். இந்த உணவுப் பொருள்களை இரவில் உட்கொள்வதால் ரத்தத்தில் சர்க்கரை மற்றும் இன்சுலின் அளவு அதிகமாகும். இந்த உணவுகள் சர்க்கரையாக வளர்சிதை மாற்றமடைந்து, ஆற்றலுக்காக எரிக்கப்படுகின்றன. இதனால் உடல் எடை அதிகரிக்க வழிவகுக்கும்.

காரமான உணவுகள்

பிரியாணி போன்ற காரமான உணவுகளை தவிர்க்கவும், முக்கியமாக இரைப்பை பிரச்னைகள் மற்றும் இதய பிரச்னைகள் உள்ள நோயாளிகள் இரவில் காரமான உணவுகளை சாப்பிடுவதால் நெஞ்செரிச்சல் ஏற்படலாம். இது வாயில் அமில சுவை, வயிற்றில் அஜீரண வலி போன்றவற்றை ஏற்படுத்தலாம்.

அதிக புரதம்

புரதம் நன்மை என்றாலும் இரவு நேரத்தில் அதிகமாக சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். மீன், சோயா பொருள்கள் போன்ற உயர் புரத உணவுகள் தவிர்க்கப்பட வேண்டும். இந்த உணவுகள் காரணமாக சில சமயங்களில் வாயு பிரச்னை ஏற்படும்.

கார்போஹைட்ரேட்டுகள்

கார்போஹைட்ரேட்டுகள் ஆற்றலுக்கு இன்றியமையாதவை, ஆனால் அதிக கிளைசெமிக் குறியீடு கொண்ட கார்ப்போஹைட்ரேட் இரவில் உட்கொண்டால், ரத்த ஓட்டத்தில் வேகமாக உறிஞ்சப்படும்.

இனிப்புகள்

சிறு குழந்தைகளுக்கு இரவு நேரங்களில் இனிப்புகள், சாக்லேட்டுகள் போன்றவற்றை வழங்குவதை தவிர்க்கவும், ஏனெனில் அவை பற்கள் சார்ந்த பிரச்னைகளை ஏற்படுத்தும். மேலும், சாக்லேட்டுகளில் காஃபின் இருப்பதால் தூக்கம் தொந்தரவு அல்லது சிரமம் ஏற்படுகிறது.

தாமத இரவு உணவால் வரும் பக்க விளைவுகள்:

இரவில் உடலின் வளர்சிதை மாற்றம் குறைவதால், தாமதமாக இரவு உணவு சாப்பிடுவதால் எடை அதிகரிப்பு மற்றும் உயர் ரத்த சர்க்கரை அளவுகள் உயரக்கூடும்

தூங்குவதற்கு சற்று முன் தாமதமாக மற்றும் அதிக அளவு உணவை உண்பது அமில ரிஃப்ளக்ஸ் திசையில் சிக்கல்கள் மற்றும் பற்களில் அரிப்புகளை ஏற்படுத்தும்

இரவு உணவில் கனமான மற்றும் ஆரோக்கியமற்ற உணவுகள் தூக்கத்தை சீர்குலைக்கும். அதே வேளையில், தாமதமாக சாப்பிடுவது உங்கள் தூக்கத்தின் தரத்தையும் காலத்தையும் பாதிக்கும்

தூங்கும் முன் உணவு உட்கொள்வதால் உடல் பருமன், இதய நோய்கள் மற்றும் நீரிழிவு போன்ற வேறு சில உடல்நல பாதிப்புகள் ஏற்படும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.