Pirandai Oil and its Benefits : உடைந்த எலும்பைக் கூட ஒட்டவைக்கும்! இந்த எண்ணெயில் இத்தனை நன்மைகளா? 2 வாரத்தில் பலன்!
Pirandai Oil Benefits : பிரண்டையை வாரத்தில் ஒருமுறை கட்டாயம் உணவில் சேர்க்க வேண்டும். இதை துவையலாகவோ அல்லது பொடியாகவோ உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
இடுப்பு வலி, கை-கால் வலி, மூட்டு வலி, நரம்பு இழுத்தல், பாத வலி, பாத எரிச்சல் அனைத்தையும் நிரந்தரமாக சரிசெய்யும் பிரண்டை எண்ணெயை தயாரிப்பது குறித்து தெரிந்துகொள்ளுங்கள்.
உடைந்த எலும்பையும் ஒட்ட வைக்கக்கூடிய தன்மை இந்த எண்ணெய்க்கு உள்ளது.
தேவையான பொருட்கள்
பிரண்டை – ஒரு கப் (சுத்தம் செய்து பொடியாக நறுக்கியது)
(பிரண்டை, கீரை கடைகளில் கிடைக்கும். இதை தொட்டியில் அப்படியே நட்டு வைத்து வீட்டிலே வளர்க்கலாம். இதில் அதிகளவில் பிரண்டை உள்ளது. எலும்புகளுக்கு வலு சேர்க்கும். உடைந்த எலும்பைக்கூட ஒட்டவைக்கும் தன்மை பிரண்டைக்கு உள்ளது. அதனால்தான் பிரண்டை துவையல், பிரண்டை பொடி என மக்கள் செய்து சாப்பிடுகிறார்கள். இதை சாப்பிடுவதால் எவ்வித பிரச்னையும் வராது. இதை சுத்தம் செய்யும்போது கைகளில் அரிப்பை ஏற்படுத்தும். எனவே கைகளில் சிறிதளவு எண்ணெய் தடவிவிட்டு இதை சுத்தம் செய்ய வேண்டும். இதை சாப்பிடுவதற்கு சமைக்கும்போது தோலை நீக்கிவிட்டு சுத்தம் செய்ய வேண்டும். வெளிப்புற பயன்பாட்டுக்கு தோளுடனே சேர்த்துக்கொள்ளலாம்)
புளி – எலுமிச்சை பழ அளவு
எலுமிச்சை பழம் – கால்
(எண்ணெயை தெளியவைக்கும்)
பூண்டு – 10 பல் (தட்டியது)
ஓமம் – ஒரு ஸ்பூன்
பிரண்டையின் இலை – கைப்பிடியளவு
நல்லெண்ணெய் – கால் லிட்டர்
பச்சை கற்பூரம் – 10
(நாட்டு மருந்து கடைகளில் மட்டுமே வாங்க வேண்டும். வலியை போக்கும்)
செய்முறை
இரும்பு கடாயில் பிரண்டையை சேர்த்து நன்றாக ஈரப்பதம் போகுமளவு வதக்க வேண்டும்.
பின்னர் எண்ணெய் சேர்த்து மிதமான தீயில் நன்றாக காய்ச்ச வேண்டும். ஒவ்வொரு பொருளையும் தொடர்ந்து சேர்த்து நன்றாக காய்ச்ச வேண்டும்.
எலுமிச்சை பழத்தை மட்டும் கடைசியாக சேர்க்க வேண்டும். அனைத்து பொருட்களும் நன்றாக நிறம் மாறும் வரை காய்ச்ச வேண்டும்.
நன்றாக அனைத்தும் நிறம் மாறியதும் அடுப்பை அணைத்துவிட்டு, 10 பச்சை கற்பூரத்தை சேர்க்க வேண்டும்.
எண்ணெயில் கற்பூரம் கரைந்துவிடும். ஆறியவுடன் அந்த எண்ணெயை வடிகட்டி வைத்துக்கொள்ள வேண்டும்.
பயன்படுத்தும் முறை
இதை இரவில் உறங்கச்செல்லும் முன் பயன்படுத்த வேண்டும் அல்லது வலி ஏற்படும்போது அந்த இடத்தில் தடவவேண்டும்.
நரம்பு வலி, நரம்பு இழுக்கும் பிரச்னை, பாத வலி, பாத எரிச்சல், கை-கால் வலி, குத்தல், தசைப்பிடிப்பு, வாயுப்பிடிப்பு அதுபோன்ற அனைத்து வலிகளையும் போக்கும்.
தொடர்ந்து இரண்டு வாரம் தடவ பலன் கிட்டும். ஒரு வாரம் முதலே நீங்கள் உணர துவங்குவீர்கள்.
பிரண்டையை வாரத்தில் ஒருமுறை கட்டாயம் உணவில் சேர்க்க வேண்டும். இதை துவையலாகவோ அல்லது பொடியாகவோ உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
இதை உணவில் எடுத்துக்கொள்ளும்போது உடலுக்கு தேவையான கால்சியம், மெக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் சத்துக்கள் கிடைக்கும்.
எனவே பிரண்டையை நீங்கள் உணவிலும் சேர்த்துக்கொண்டு அனைத்து வலிகளில் இருந்தும் நிவாரணம் பெறுங்கள்.
பொறுப்பு துறப்பு
இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.
எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்