Pink Sauce Pasta : பிங்க் சாஸ் பாஸ்தா! குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்!
Pink Sauce Pasta : பிங்க் சாஸ் பாஸ்தா! குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்!
தேவையான பொருட்கள்
பென்னே பாஸ்தா - 3 கப்
தக்காளி - 8
உப்பில்லாத வெண்ணெய் - 75 கிராம்
எண்ணெய் – ஒரு ஸ்பூன்
பூண்டு - 10 பற்கள்
வெங்காயம் - 1 பொடியாக நறுக்கியது
பச்சை குடைமிளகாய் - 1 கப் பொடியாக நறுக்கியது
சிவப்பு குடைமிளகாய் - 1 கப் பொடியாக நறுக்கியது
ஸ்வீட் சோளம் - 1 கப் வேகவைத்தது
உப்பு – தேவையான அளவு
மிளகு தூள் – ஒரு ஸ்பூன்
சில்லி பிளேக்ஸ் – ஒரு ஸ்பூன்
இட்டாலியன் சீசனிங் – 2 ஸ்பூன்
மைதா – 2 டேபிள் ஸ்பூன்
பால் - ஒரு கப் காய்ச்சி ஆறவைத்தது
தக்காளி கெட்சப் – ஒரு டேபிள் ஸ்பூன் (விரும்பினால்)
பேப்ரிக்கா பவுடர் – ஒரு ஸ்பூன் (விரும்பினால்)
சீஸ் துண்டுகள் - 4
பேசில் இலை – சிறிது
செய்முறை -
பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவேண்டும். பின்னர் அதில் உப்பு மற்றும் பென்னே பாஸ்தா சேர்த்து கலந்து 90 சதவீதம் வேகவிடவேண்டும். பின்னர் தண்ணீரை வடித்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
மற்றொரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவேண்டும். பின்னர் தக்காளியை இரண்டாக கீறி சேர்த்து வேகவிடவேண்டும். பின்னர் தோல் நீக்கி, நறுக்கி விழுதாக அரைத்து கொள்ளவேண்டும்.
கடாயில் வெண்ணெய் சேர்த்து உருகியதும் அதில் எண்ணெய் சேர்க்கவேண்டும்.
பின்னர் நறுக்கிய பூண்டு, வெங்காயம் சேர்த்து 2 நிமிடம் வதக்கவேண்டும். பின்னர் நறுக்கிய பச்சை குடைமிளகாய், சிவப்பு குடைமிளகாய் சேர்த்து கலந்து வேகவைத்த ஸ்வீட் சோளம் சேர்த்து கலந்துவிடவேண்டும்.
பின்பு உப்பு, மிளகு தூள், சில்லி பிளேக்ஸ், இட்டாலியன் சீசனிங் சேர்த்து கலந்துவிடவேண்டும்.
பிறகு மைதா சேர்த்து கலந்து, அடுத்தாக பால் ஊற்றி கலந்துவிடவேண்டும்.
அரைத்த தக்காளி விழுதை சேர்த்து கலக்கவேண்டும்.
பின்னர் தக்காளி கெட்சப், பேப்ரிக்கா பவுடர் சேர்த்து கலந்து, சீஸ் துண்டுகளை சேர்த்து கலந்துவிடவேண்டும்.
அடுத்து வேகவைத்த பாஸ்தாவை சேர்த்து கலந்து கடைசியாக பேசில் இலை சேர்த்து கலந்து இறக்கவேண்டும். சுவையான பிங்க் சாஸ் பாஸ்தா தயார்.
வெள்ளை சாஸ் மற்றும் அரபயாட்டா சாஸ் சேர்த்து கலந்துகொள்ள வேண்டும். இதை செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.
டாபிக்ஸ்