தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  Pineapple Pachadi Recipe The Taste Of Pineapple Pachadi Sweet Salty And Sour Taste Is Amazing

Pineapple Pachadi: டேஸ்ட்டான பைனாப்பிள் பச்சடி.. இனிப்பு, காரம், புளிப்பு எல்லாம் சேர்ந்த சுவையில் அட்டகாசமாக இருக்கும்!

Pandeeswari Gurusamy HT Tamil
Mar 13, 2024 01:10 PM IST

Pineapple: அன்னாசிப்பழத்தில் அதிகம் உள்ள மாங்கனீஸ், உங்கள் எலும்புகளை கட்டமைக்க உதவுகிறது. ஆரோக்கியமான உடலை பராமரிக்கவும், உங்கள் எலும்புகளை ஆரோக்கியமாகவும் வலுவாகவும் வைத்திருக்க பைனாப்பிள் உதவும். இப்படி ஏராளமான நலன் கொண்ட பைனாப்பிளை வைத்து ருசியான பைனாப்பிள் பச்சடி எப்படி செய்வது என பார்க்கலாம்.

டேஸ்ட்டான பைனாப்பிள் பச்சடி
டேஸ்ட்டான பைனாப்பிள் பச்சடி

ட்ரெண்டிங் செய்திகள்

பைனாப்பிள் பச்சடி செய்ய தேவையான பொருட்கள் 

அன்னாச்சி பழம் - 1 கப்

தேங்காய் - 1 கப்

தயிர் -1 கப்

பச்சை மிளகாய் - 2

சீரகம் - ஒரு ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

கடுகு - 1/2 ஸ்பூன்

உளுந்தம்பருப்பு - 1/2 ஸ்பூன்

மஞ்சள் பொடி - 1/2 ஸ்பூன்

சர்க்கரை - 1 ஸ்பூன்

இஞ்சி - 1 டீஸ்பூன்

கறிவேப்பிலை - ஒரு கொத்து

பைனாப்பிள் பச்சடி செய்ய செய்முறை

அன்னாச்சி பழத்தை தோல் சீவி சிறிய துண்டுகளாக நறுக்கி எடுத்து கொள்ள வேண்டும். அதை ஒரு பாத்திரத்தில் சேர்த்து கொஞ்சமாக தண்ணீர் ஒரு கரண்டி எண்ணெய் சேர்த்து வேக விட வேண்டும்.

இடையில் ஒரு கப் தேங்காய் 1 பச்சை மிளகாய் கால் ஸ்பூன் கடுகு அரைஸ்பூன் சீரகம் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்து கொள்ள வேண்டும்.

பைனாப்பிள் 10 நிமிடம் வரை வெந்த பிறகு அதில் அரை ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்க்க வேண்டும். இப்போது ஏற்கனவே அரைத்து வைத்திருந்த தேங்காயையும் சேர்த்து கொள்ள வேண்டும். 

அடுப்பை மிதமான தீயில் வைத்து வேக விட வேண்டும். 5 நிமிடம் தேங்காய் வெந்த பிறகு கடைசியாக அரை கப் தயிரை சேர்த்து நன்றாக கலந்து விட்டு அடுப்பை அணைத்து விட வேண்டும். அதில் ஒரு ஸ்பூன் சர்க்கரையை கலந்து கொள்ள வேண்டும். (சர்க்கரை சேர்க்க பிடிக்காதவர்கள் தவிர்த்து விடலாம்) 

இப்போது ஒரு தாளிப்பு கரண்டியில் இரண்டு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து கொள்ள வேண்டும். அதில் கடுகு உளுந்தம்பருப்பு சேர்த்து தாளிக்க வேண்டும். கடுகு வெடிக்கும் போது ஒரு ஸ்பூன் துருவிய இஞ்சி, நறுக்கிய ஒரு பச்சை மிளகாய், ஒரு கொத்து கறிவேப்பிலையை சேர்த்து கொள்ள வேண்டும். 

இந்த தாளிப்பை பைனாப்பிளுடன் சேர்த்தால் ருசியான பைனாப்பிள் பச்சடி ரெடி. இதன் சுவை மிகவும் அருமையாக இருக்கும். இந்த பச்சடி லேசாக இனிப்பு காரம், புளிப்பு கலந்த சுவையில் இருக்கும். ஒரு முறை செய்து குடுங்கள் உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கும் பிடிக்கும்.

அன்னாச்சி பழத்தின் நன்மைகள்

அன்னாசிப்பழத்தில் அதிகம் உள்ள மாங்கனீஸ், உங்கள் எலும்புகளை கட்டமைக்க உதவுகிறது. ஆரோக்கியமான உடலை பராமரிக்கவும், உங்கள் எலும்புகளை ஆரோக்கியமாகவும் வலுவாகவும் வைத்திருக்க பைனாப்பிள் உதவும். துத்தநாகம், தாமிரம் மற்றும் கால்சியம் ஆகியவற்றுடன் இணைந்தால், மாங்கனீசு மிகவும் ஆரோக்கியமானது மற்றும் வலுவான எலும்புகளைப் பாதுகாக்கும்.  அன்னாசிப்பழத்தில் காணப்படும் ப்ரோமைலைன், உணவு நார்ச்சத்து மற்றும் வைட்டமின் சி ஆகியவை ஏராளமாக உள்ளன மற்றும் ஆரோக்கியமான செரிமானத்திற்கு உதவுகின்றன. இரத்த அழுத்தத்தை பராமரிக்க உதவுகிறது.

உங்கள் ஹார்மோன்கள் மற்றும் நரம்புகளை எளிதாக வைத்திருக்கும் இயற்கையான மன அழுத்த நிவாரணியான செரோடோனின் அன்னாசிப்பழத்தில் உள்ளது. இது மன அழுத்தத்தை குறைக்க உதவும்.

வைட்டமின் சி நிறைந்த அன்னாசி முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. உங்கள் உடலை ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்திலிருந்து பாதுகாக்கிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்