Pineapple Pachadi : அன்னாசி பழத்தில் பச்சடி செய்ய முடியுமா? இதோ ரெசிபி! செஞ்சு அசத்துங்க! இத்தனை நன்மைகள் நிறைந்தா?
Pineapple Pachadi : இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உங்கள் உடலில் வீக்கம் ஏற்படுவதை தடுக்கிறது. அதன் மூலம் புற்றுநோயை தடுக்கிறது. உடல் வளர்சிதை மாற்றத்துக்கு உதவுகிறது.
தேவையான பொருட்கள்
அன்னாசிப்பழம் – 1 (மீடியம் பழம், நன்றாக பழுத்தது எடுக்கக்கூடாது)
சுத்தம் செய்து க்யூப் வடிவில் சிறியதாக வெட்டிக்கொள்ள வேண்டும்.
மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
மிளகாய் தூள் – கால் ஸ்பூன்
உப்பு – ஒரு ஸ்பூன்
தயிர் – ஒரு கப்
வெல்லம் – ஒரு ஸ்பூன் (பொடித்தது)
மசாலா அரைக்க தேவையான பொருட்கள்
தேங்காய் – ஒரு கப்
வர மிளகாய் – 2 (உங்களின் கார அளவுக்கு ஏற்ப அதிகரித்துக்கொள்ளலாம்)
சீரகம் – ஒரு ஸ்பூன்
(இந்த மூன்றையும் மட்டும் மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்துக்கொள்ள வேண்டும்)
தாளிக்க தேவையான பொருட்கள்
தேங்காய் எண்ணெய் – ஒரு ஸ்பூன் ‘
கடுகு- கால் ஸ்பூன்
உளுந்து – கால் ஸ்பூன்
கறிவேப்பிலை – ஒரு கொத்து
வரமிளகாய் – 2
செய்முறை
கடாயை சூடாக்கி அதில் நறுக்கிய அன்னாசி பழங்களை சேர்த்து குறைவான தீயில் வதக்க வேண்டும்.
அதில் வெல்லம், மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து ஒரு நிமிடம் வேகவிடவேண்டும்.
பின்னர் அரைத்த மசாலா மற்றும் தயிர் சேர்த்து 2 நிமிடம் வேகவிடவேண்டும்.
அடுத்து ஒரு கடாயில் எண்ணெய் காயவைத்து, கடுகு, உளுந்து, வர மிளகாய், கறிவேப்பிலை தாளித்து இந்த அன்னாசிப்பழ கலவையில் சேர்க்க வேண்டும்.
இது இனிப்பு, காரம் கலந்த ஒரு கலவையில் வித்யாசமான சுவையில் இருக்கும் ஒரு பச்சடி ஆகும்.
விருந்துகளில் பரிமாற ஏற்ற சைட் டிஷ்.
அன்னாசிப்பழத்தின் நன்மைகள்
சளி மற்றும் இருமலை குணப்படுத்துகிறது.
எலும்பை வலுப்படுத்துகிறது.
பற்களுக்கு வலு சேர்க்கிறது.
புற்றுநோயை தடுக்கிறது.
செரிமானத்துக்கு உதவுகிறது.
கண்களுக்கு நல்லது.
ஆர்த்ரடிஸ் நோயின் அறிகுறிகளை குறைக்கிறது.
உயர் ரத்த அழுத்தத்தை தடுக்கிறது.
ரத்தக்கட்டு ஏற்படும் ஆபத்தை குறைக்கிறது.
ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது.
சோர்வை தடுக்கிறது.
உடலுக்கு இயற்கையான ஆற்றலை அளிக்கிறது.
மனஅழுத்தத்தை போக்குகிறது.
முகப்பருக்களை நீக்குகிறது.
சருமத்தில் பளபளப்பை ஏற்படுத்துகிறது.
வயோதிகத்தை தாமதப்படுத்துகிறது.
கரும்புள்ளிகளை போக்குகிறது.
தலைமுடி ஆரோக்கியத்துக்கு உதவுகிறது.
பளபளக்கும், மிருதுவான தலைமுடியைப் பெற உதவுகிறது.
தலைமுடி அடர்த்தியாக வளர உதவுகிறது.
வீக்கத்தை சரிசெய்கிறது.
ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது.
தசைகளை வலுப்படுத்துகிறது.
எடை குறைக்க உதவுகிறது.
அறுவைசிகிச்சையிலிருந்து விரைவில் மீள உதவுகிறது.
அன்னாசிப்பழத்தில் உள்ள சத்துக்கள்
ஒரு கப் அன்னாசிப்பழத்தில் 82.5 கலோரிகள் உள்ளது. கொழுப்பு 0.198 கிராம், புரதச்சத்து 0.891 கிராம், கார்போஹைட்ரேட் 21.6 கிராம், நார்ச்சத்து 2.31 கிராம், வைட்டமின் சி 78.9 மில்லி கிராம், மாங்கனீஸ் 1.53 மில்லி கிராம், வைட்டமின் பி 6 0.185 மில்லி கிராம், காப்பர் 0.181 மில்லி கிராம், தியாமைன் 0.13 மில்லி கிராம், ஃபோலேட் 29.7 மைக்ரோ கிராம், பொட்டாசியம் 180 மில்லி கிராம், மெக்னீசியம் 19.8 மில்லி கிராம், நியாசின் 0.825 மில்லி கிராம், பேன்டோதெனிக் அமிலம் 0.351 மில்லி கிராம், ரிபோஃப்ளாவின் 0.053 மில்லி கிராம், இரும்பு 0.478 மில்லி கிராம் உள்ளது.
மேலும் அன்னாசிப்பழத்தில் குறிப்பிட்ட அளவு பாஸ்பரஸ், சிங்க், கால்சியம் மற்றும் வைட்டமின் ஏ மற்றும் கே ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளது.
அன்னாசிப்பழத்தில் குறிப்பாக வைட்டமின் சி மற்றும் மாங்கனீஸ் சத்துக்கள் நிறைந்துள்ளது. வைட்டமின் சி சத்து நோய் எதிர்ப்பு, இரும்பு உறிஞ்சுவது, வளர்ச்சிக்கு மிகவும் அவசியம். மாங்கனீசில் ஆன்டி ஆக்ஸிடன்ட் சத்துக்கள் நிறைந்துள்ளது. இது வளர்சிதை மாற்றம் மற்றும் உடல் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.
இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உங்கள் உடலில் வீக்கம் ஏற்படுவதை தடுக்கிறது. அதன் மூலம் புற்றுநோயை தடுக்கிறது. உடல் வளர்சிதை மாற்றத்துக்கு உதவுகிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9