அன்னாசிப் பழத் தேநீர் : அன்னாசிப்பழத்தில் தேநீர் தயாரிப்பது எப்படி? அதில் என்ன உள்ளது? ஊட்டச்சத்து நிபுணர் விளக்கம்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  அன்னாசிப் பழத் தேநீர் : அன்னாசிப்பழத்தில் தேநீர் தயாரிப்பது எப்படி? அதில் என்ன உள்ளது? ஊட்டச்சத்து நிபுணர் விளக்கம்!

அன்னாசிப் பழத் தேநீர் : அன்னாசிப்பழத்தில் தேநீர் தயாரிப்பது எப்படி? அதில் என்ன உள்ளது? ஊட்டச்சத்து நிபுணர் விளக்கம்!

Priyadarshini R HT Tamil
Published Apr 15, 2025 06:00 AM IST

அன்னாசிப்பழத் தேநீர் : இந்த கோடைக்காலத்துக்கு ஏற்ற பானமாக அன்னாசிப்பழத் தேநீர் உள்ளது. அதைப் பருகுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து ஊட்டச்சத்து நிபுணர் ஃபியோனா சம்பத் கூறுகிறார்.

அன்னாசிப் பழத் தேநீர் : அன்னாசிப்பழத்தில் தேநீர் தயாரிப்பது எப்படி? அதில் என்ன உள்ளது? ஊட்டச்சத்து நிபுணர் விளக்கம்!
அன்னாசிப் பழத் தேநீர் : அன்னாசிப்பழத்தில் தேநீர் தயாரிப்பது எப்படி? அதில் என்ன உள்ளது? ஊட்டச்சத்து நிபுணர் விளக்கம்!

அன்னாசிப்பழ தேநீர் என்றால் என்ன?

அன்னாசிப்பழத்தை ஊறவைத்த தயாரிக்கப்படுவது, இந்த கோடைக்கால பானத்தை தயாரிக்க அன்னாசிப் பழத்தின் தோல், சதை என அனைத்தையும் பயன்படுத்தவேண்டும். அன்னாசிப்பழத்தோலில் அதிகளவில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் ப்ரோமெலின் உள்ளது. இதன் தோலைத்தான் பயன்படுத்தி இந்த தேநீர் தயாரிக்கப்படுகிறது. இதனுடன் இஞ்சி, பட்டை போன்ற மசாலாக்களும் சேர்க்கப்படுகிறது.

அன்னாசிப் பழத் தேநீரின் நன்மைகள்

ப்ரோமெலின்

அன்னாசிப்பழத்தில் உள்ள ப்ரோமெலின் என்ற எண்சைம்கள் உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. அதன் தோலில் 0.23 சதவீத ப்ரோமெலின் செயல்பாடுகள் உள்ளது. இது எலும்பு புரை நோய் உள்ளவர்களுக்கு சிறந்தது.

மேலும் இந்த ப்ரோமேலைன் என்ற ப்ரோடியோலிடிக் எண்சைம், புரதச்சத்துக்களை உடைத்து, செரிமான ஆரோக்கியத்துக்கு உதவுகிறது. இது செரிமானத்தை சீராக்கி, வயிறு உப்புசம் மற்றும் வாயுத் தொல்லை போன்றவற்றையும் குணப்படுத்துகிறது. இதன் ஆன்டி பாக்டீரியல் உட்பொருட்கள் குடலை பாதுகாக்கிறது. தோலில் இந்த ப்ரோமெலின் அதிகம் உள்ளது. இதனால் தோலைக்கொண்டு தயாரிக்கப்படும் தேநீரை செரிமான ஆரோக்கியத்துக்கு ஏற்றதாக மாற்றுகிறது.

முக்கிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது

இந்தப் பழத்தின் தோலில் முக்கிய ஊட்டச்சத்துக்கள் உள்ளது. இதில் வைட்டமின் சி, கால்சியம், பொட்டாசியம், கார்போஹைட்ரேட்கள், நார்ச்சத்துக்கள் மற்றும் தண்ணீர் சத்துக்கள் உள்ளது. இதில் உள்ள வைட்டமின் சி சத்துக்கள் உடலின் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கிறது. உடலில் உள்ள செல்களை சேதப்படுத்தும் ஃப்ரீ ராடிக்கல்களை குறைக்கிறது.

ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது

அன்னாசிப்பழத் தேநீரில் ஃப்ளாவனாய்ட்கள், ஃபினோலிக் ஆசிட் மற்றும் வைட்டமின் சி சத்துக்கள் உள்ளது. இவையனைத்தும் சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் ஆகும். இவை ஆக்ஸிடேட்டிவ் அழுத்தத்தைப் போக்க உதவுகின்றன. இந்த தோலில் அதிகம் உள்ள அடர்த்தியான ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் இந்த தேநீரை மேலும் சிறப்பானதாக்குகிறது.

அஸ்கார்பிக் அமிலம்

இதில் உள்ள அஸ்கார்பிக் அமிலம், கொலாஜென் சின்தெசிஸ்களுக்கு சிறந்தது. இது சருமத்துக்கும் சிறந்தது. இது சரும ஆரோக்கியத்தை அதிகரித்து, வயோதிக தோற்றத்தை குறைக்கிறது. இது முகம் மற்றும் மற்ற பாகங்களின் சருமத்தின் பொலிவைக் கூட்டுகிறது.

வைட்டமின் சி

அன்னாசிப்பழத்தில் உள்ள வைட்டமின் சி சத்துக்கள், உங்களுக்கு நோய் எதிர்ப்பு மற்றும் ஆரோக்கிய சருமத்தை மட்டும் கொடுக்கவில்லை, உங்கள் உடலுக்குத் தேவையான ஆற்றலையும் கொடுக்கிறது. உடலில் உள்ள சோர்வைப் போக்குகிறது. ப்ரோமெலின் மற்றும் வைட்டமின் சி சத்துக்கள் புரதத்தை உடைத்து, குளுக்கோசாக மாற்றுகிறது. உடலின் ஆற்றல் அளவை அதிகரிக்கிறது.

இவ்வாறு ஊட்டச்சத்து நிபுணர் ஃபியோனா சம்பத் தெரிவித்தார்.

இந்த தேநீரை அதிகம் அதன் தோலைக்கொண்டு தயாரிப்பதால், அதில் சர்க்கரை அளவு மற்றும் கலோரிகள் குறைவாகவும் இருப்பதால், உடல் எடையைக் குறைக்க இந்த தேநீர் உதவுகிறது.

அன்னாசிப்பழத் தேநீரை தயாரிப்பது எப்படி?

தேவையான பொருட்கள்

• அன்னாசிப் பழத்தின் தோல் – 1 பழத்தின் தோல்

• தண்ணீர் – 4 கப்

• இஞ்சி – கால் இன்ச் (தட்டியது)

• பட்டை – ஒரு துண்டு

• எலுமிச்சை பழச்சாறு – 4 டேபிள் ஸ்பூன்

செய்முறை

1. தண்ணீரை கொதிக்கவைத்து, அதில் கழுவி சுத்தம் செய்த அன்னாசிப் பழத்தின் தோல்களை சேர்த்து கொதிக்கவிடவேண்டும். அன்னாசிப்பழத்தின் துண்டுகளையும் சேர்க்கலாம். இஞ்சி, பட்டை சேர்த்து 10 முதல் 15 நிமிடங்கள் குறைவான தீயில் கொதிக்கவிடவேண்டும்.

2. அடுப்பை அணைத்துவிட்டு, எலுமிச்சை பழத்தின் சாற்றை சேர்க்கவேண்டும். சில நொடிகள் கழித்து வடிகட்டிக்கொள்ளவேண்டும். அன்னாசிப்பழத் தேநீர் தயார்.

இதை அப்படியேவும் பருகலாம். தேன் கலந்தும் பருகலாம். மேலும் ஃபிரிட்ஜில் வைத்து ஐஸ்ட் தேநீராகவும் பருகலாம்.

Priyadarshini R

TwittereMail
பிரியதர்ஷினி. ஆர். திருச்சியைச் சேர்ந்தவர். திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வு மாணவி. 2005ம் ஆண்டு முதல் ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். தினமலர், சன் நியூஸ், விஜய் டிவி என அச்சு மற்றும் காட்சி ஊடகங்களில் பணிபுரிந்துவிட்டு, 2023ம் ஆண்டு முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் பணியாற்றி வருகிறார். இவர் கல்வி, வேலைவாய்ப்பு, லைஃப்ஸ்டைல் மற்றும் சிறப்பு செய்திகளை வழங்கி வருகிறார்.
Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.