Piles Remedy : மூலநோயை குணப்படுத்தும் அருமருந்து! வாரத்தில் 3 நாள் ஒரு டம்ளர்! இந்த பானம் மட்டும் போதும்!
Piles Remedy : மூலநோயை குணப்படுத்தும் அருமருந்து! வாரத்தில் 3 நாள் ஒரு டம்ளர்! இந்த பானம் மட்டும் போதும்!
ஹீமோகுளோபின் குறைபாட்டை சரிசெய்யும் அருமருந்து. நாம் வேண்டாம் என்று தூக்கிப்போடும் பொருளில் இருந்து கிடைக்கும் இந்தப்பொடியை நாம் பயன்படுத்தினாலே போதும்.
ஹீமோகுளோபின் குறைபாட்டை முற்றிலும் சரிசெய்து உடலில் சிவப்பணுக்களின் எண்ணியை இயற்கையான முறையில் அதிகரிக்கச்செய்யும். ரத்தத்தில் இருக்கக்கூடிய நச்சுக்களை வெளியேற்றி ரத்தத்தை நன்றாக சுத்தம் செய்யும். நரம்புகளில் இருக்கக்கூடிய அடைப்புகளையும் சரிசெய்யும். நரம்பு மண்டலத்தை சீர் செய்யும்.
கால்சியம், இரும்புச்சத்து வைட்டமின் டி, பி12 சத்து குறைபாடு ஆகியவற்றால் ஏற்படக்கூடிய உடல் சோர்வு, உடல் அசதி, நியாபக மறதி, கை-கால் மரத்துப்போதல், கண் பார்வை குறைபாடு, முடி உதிர்வு, இளநரை போன்ற பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு கொடுக்கிறது.
நமக்கு இயற்கையில் கிடைக்கக்கூடிய பொருட்களை வைத்தே நாம் ஆரோக்கியத்தை பேண முடியும்.
உடலை ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் வைத்திருக்கக்கூடிய ஒரு பொடியை குறித்து நாம் இதில் தெரிந்துகொள்ளலாம்.
மாம்பழத்தை சாப்பிட்டுவிட்டு, அதன் கொட்டையை நாம் தூக்கி விசிவிடுவோம். ஆனால், அந்த விதைக்குள் இருக்கும் பருப்பில்தான் இத்தனை ஆரோக்கிய நன்மைகளும் நிறைந்துள்ளன.
மாம்பருப்பில் வைட்டமின் பி12 சத்து அதிகம் உள்ளது. வயோதிக்கத்தால் வைட்டமின் பி12, இரும்பு, கால்சியம் குறைபாடு ஆகியவை ஏற்படுகிறது. அந்த காலத்தில் நமது முன்னோர்கள், அதிகளவில் மாம்பருப்பு விதையை பயன்படுத்தி வந்துள்ளனர்.
மாங்கொட்டையை காயவைத்து, அதனுள் இருக்கும் பருப்புக்களை எடுத்துவிட்டு, அதன் தோலை நீக்கிவிட்டு, சிறுசிறு துண்டுகளாக நறுக்கி வெளியில் நன்றாக காய வைத்து வறுத்து பொடி செய்து வைத்துக்கொள்ளலாம்.
இல்லாவிட்டால் நாட்டு மருந்து கடைகளில் மாம்பருப்பு பொடிகள் கிடைக்கும். அதை காலையில் வெறும் வயிற்றில் பச்சை தண்ணீரில் ஒரு ஸ்பூன் கலந்து தேனுடன் சேர்த்து பருகலாம். நீரிழிவு நோயாளிகள் தேனை பயன்படுத்தக்கூடாது.
எப்போது வேண்டுமானாலும் குடிக்கலாம். இதனை பருகுவதால் உடலுக்கு கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, பி, பி12, சி ஆகிய அனைத்துசத்துக்களும் கிடைக்கும். பொதுவாக இவை இறைச்சிகளில்தான் அதிகம் கிடைக்கும். அவையனைத்தும் இதில் கிடைக்கக்கூடியது. கை-கால் மரத்துபோவது, உடல் வலி, சோர்வு, தலைவலி என அனைத்து பிரச்னைகளையும் நீக்கக்கூடிய தன்மை கொண்டது. நரம்பு, இழுத்தல், நரம்பு வலி, நரம்புகளில் அடைப்பு என அனைத்து பிரச்னைக்கும் தீர்வு கொடுக்கிறது.
இதயத்துக்கு செல்லக்கூடிய ரத்த நாளங்களில் ஏற்படும் அடைப்பை சரிசெய்யக்கூடிய தன்மை இந்தப்பொடிக்கு உள்ளது. இளநரையை போக்கும். மூலம் தொடர்பான பிரச்னைகளால் அவதிப்படுபவர்களுக்கு நல்ல தீர்வு கொடுக்கும்.
இந்த தண்ணீரை பருகும்போது கட்டாயம் ஒரு கீரையை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். புளி, கார அளவை குறைத்துக்கொள்ள வேண்டும்.
ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கும், இதை வாரத்தில் 2 அல்லது மூன்று முறை சாப்பிடலாம். ஹீமோகுளோபின் குறைபாடு அதிகம் இருந்தால் ஒரு வாரம் தொடர்ந்து பருகவேண்டும். வைட்டமின் பி12ஐ அதிகரிக்க இது உதவும். நீங்கள் மருந்து, மாத்திரைகளே பயன்படுத்த தேவையில்லை. ஆரோக்கியமான முறையில் உடலுக்கு ஊட்டச்சத்துகள் அளித்து உடல் ஆரோக்கியத்துக்கு வழிவகுக்கிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
https://www.facebook.com/HTTamilNews
https://www.youtube.com/@httamil
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்