Piles Problems : மூல நோயை முற்றிலும் குணப்படுத்த வேண்டுமா? ஒரு வாரம் மட்டும் இதை செய்யுங்கள்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Piles Problems : மூல நோயை முற்றிலும் குணப்படுத்த வேண்டுமா? ஒரு வாரம் மட்டும் இதை செய்யுங்கள்!

Piles Problems : மூல நோயை முற்றிலும் குணப்படுத்த வேண்டுமா? ஒரு வாரம் மட்டும் இதை செய்யுங்கள்!

Priyadarshini R HT Tamil
Apr 30, 2024 12:00 PM IST

Piles Problems : நம் வாழ்க்கை முறையில் மாற்றம் ஏற்பட ஏற்பட நமக்கு ஏற்படும் நோய்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

Piles Problems : மூல நோயை முற்றிலும் குணப்படுத்த வேண்டுமா? ஒரு வாரம் மட்டும் இதை செய்யுங்கள்!
Piles Problems : மூல நோயை முற்றிலும் குணப்படுத்த வேண்டுமா? ஒரு வாரம் மட்டும் இதை செய்யுங்கள்!

நம் வாழ்க்கை முறையில் மாற்றம் ஏற்பட ஏற்பட நமக்கு ஏற்படும் நோய்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

அதற்கு நாம் மருத்துவர்களை நாடி, மருந்துகள் எடுத்துக்கொள்கிறோம். ஆனால் அவை பக்கவிளைவை ஏற்படுத்தக்கூடியவை. ஆனால் பிரச்னைகள் சிறிய அளவில் இருக்கும்போதே நாம் வீட்டிலே சிலவற்றை செய்தால், எளிய பிரச்னைகளில் இருந்து குணமாகி, அவை மேலும் அதிகரிக்காமல் தடுக்க முடியும். அவ்வாறு இன்று நீங்கள் தெரிந்துகொள்ளப்போவது என்ன?

உள் மூலம், வெளி மூலம், ரத்த மூலம் என பல்வேறு வகைகள் உள்ளது. மூலம் என்றாலே அதற்கு அறுவைசிகிச்சை மட்டும்தான் தீர்வா? இயற்கை தீர்வுகளும் உள்ளது. அது என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்

கடுக்காய்

கடுக்காயை உரலில் வைத்து தட்டினால், உள்ளே ஒரு பருப்பு இருக்கும். அதை தூக்கியெறிந்துவிட்டு, தோலை மட்டும் தட்டி எடுத்து மிக்ஸியில் சேர்த்து பொடித்து பயன்படுத்தவேண்டும் அல்லது கடுக்காய்ப் பொடி என நாட்டு மருந்து கடைகளிலே கிடைக்கும். அதை வாங்கியும் பயன்படுத்தலாம். கடுக்காயை தொடர்ந்து பயன்படுத்தும்போது மலச்சிக்கலையும், அனைத்து வகை மூலத்தையும் சரிசெய்யும்.

கடுக்காய்ப் பொடி – கால் ஸ்பூன்

துத்திஇலைப்பொடி – ஒரு ஸ்பூன்

(மூலத்துக்கு மிகச்சிறந்த நிவாரணம் தரக்கூடியது துத்தி இலைப்பொடி, துத்தி இலை மற்றும் கடுக்காய்ப் பொடியும் சேரும்போது மூலம் ஒரு வாரத்தில் குணமாகும்)

தயிர் – ஒரு ஸ்பூன்

உப்பு – சிறிதளவு

செய்முறை

தயிர், கடுக்காய்ப்பொடி, துத்தி இலைப்பொடி ஆகிய அனைத்தையும் டம்ளரில் சேர்த்து நன்றாக அடித்துக்கொள்ள வேண்டும். பின்னர் அதில் சாதாரண தண்ணீர் சேர்க்கவேண்டும். சூடான தண்ணீர் சேர்க்கக்கூடாது. உப்பையும் சேர்த்து கலக்க வேண்டும். உப்பு வேண்டாம் என்றாலும் விட்டுவிடலாம். 

மூலம் உள்ளவர்கள் தயிர் அதிகளவில் சேர்த்துக்கொள்ளக்கூடாது. ஆனால் மோராக அதிகம் எடுக்கலாம். கடுக்காய் மற்றும் துத்தி இலையை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும். இவையிரண்டையும் மோரில் கலந்து பருகும்போது, மலச்சிக்கல் பிரச்னைக்கு தீர்வு தரும். மலச்சிக்கலால் ஏற்படக்கூடிய மூலத்தை போக்கும்.

உடல் சூடு மற்றும் நார்ச்சத்துக்கள் அதிகம் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ளாதபோதும் மாவுச்சத்து உணவுகள் அதிகம் எடுத்துக்கொள்ளும்போதும் மூலம் உருவாகும். மோரில் உள்ள நார்ச்சத்துக்கள் அதை போக்க உதவும். உடல் சூட்டையும் மோர் குறைக்கும். இதுபோல் எடுத்துக்கொள்ளும்போது மலச்சிக்கல் தொடர்பான பிரச்னைகள் அனைத்தும் குணமாகும்.

இதை ஒரு வாரம் பருகினாலே போதும். அது மூலநோயை அடித்து விரட்டும். காலையில் வெறும் வயிற்றில் இதை பருகவேண்டும். இதை பருகிய பின்னர் ஒரு மணி நேரம் ஒன்றும் உட்கொள்ளக்கூடாது. பின்னர் நீங்கள் நேரடியாக காலை உணவு சாப்பிடலாம். அதுவும் எளிதில் செரிமானம் ஆகக்கூடியதாக இருக்கவேண்டும்.

மூலநோயாளிகளுக்கு மலம் கழிக்கும்போது ஆசனவாயில் எரிச்சல், ரத்தம், புண், வலி ஆகியவை ஏற்படும். அதை தீர்க்க என்ன செய்யலாம்.

தேவையான பொருட்கள்

வறுத்து அரைத்த சீரகப்பொடி – ஒரு ஸ்பூன்

தண்ணீர் அல்லது கற்றாழை ஜெல் – ஒரு ஸ்பூன்

செய்முறை

சீரகப்பொடி மற்றும் கற்றாழை ஜெல் இரண்டையும் ஒன்றாக கலந்து, மூலம் உள்ள இடத்தில் தடவவேண்டும். அப்போது அந்த இடத்தில் உள்ள வலி, புண், எரிச்சல் ஆகியவை நீங்கும்.

இந்த இரண்டு குறிப்புகளையும் ஒருவாரம் தொடர்ந்து செய்து வரும்போது உங்கள் உடலில் ஏற்படும் மாற்றத்தை நன்றாக உணரமுடியும். உங்கள் மூலநோய் முற்றிலும் குணமாகும்.

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.

எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.