பெருமாள் கோயில் புளியோதரை; இனி வீட்டிலே செய்யலாம்! ஈசியான ரெசிபியை கட்டாயம் முயன்று பாருங்கள்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  பெருமாள் கோயில் புளியோதரை; இனி வீட்டிலே செய்யலாம்! ஈசியான ரெசிபியை கட்டாயம் முயன்று பாருங்கள்!

பெருமாள் கோயில் புளியோதரை; இனி வீட்டிலே செய்யலாம்! ஈசியான ரெசிபியை கட்டாயம் முயன்று பாருங்கள்!

Priyadarshini R HT Tamil
Dec 24, 2024 02:16 PM IST

பெருமாள் கோயில் புளியோதரையை வீட்டிலே செய்யலாம். அது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

பெருமாள் கோயில் புளியோதரை; இனி வீட்டிலே செய்யலாம்! ஈசியான ரெசிபியை கட்டாயம் முயன்று பாருங்கள்!
பெருமாள் கோயில் புளியோதரை; இனி வீட்டிலே செய்யலாம்! ஈசியான ரெசிபியை கட்டாயம் முயன்று பாருங்கள்!

புளியோதரைப் பொடி தயாரிக்க தேவையான பொருட்கள்

வர மிளகாய் – 4

உளுந்து – ஒரு டேபிள் ஸ்பூன்

கடலை பருப்பு – ஒரு டேபிள் ஸ்பூன்

வெந்தயம் – அரை டேபிள் ஸ்பூன்

வர மல்லி – ஒரு டேபிள் ஸ்பூன்

எள் – ஒரு டேபிள் ஸ்பூன்

மிளகு – ஒரு டேபிள் ஸ்பூன்

கடுகு – கால் ஸ்பூன்

சீரகம் – ஒரு ஸ்பூன்

தாளிக்க தேவையான பொருட்கள்

நல்லெண்ணெய் – ஒரு கப்

கடுகு – அரை ஸ்பூன்

உளுந்து – ஒரு ஸ்பூன்

கடலை பருப்பு – ஒரு ஸ்பூன்

வர மிளகாய் – 2

கறிவேப்பிலை – ஒரு காத்து

பெருங்காயத் தூள் – கால் ஸ்பூன்

(பெருங்காயத்தை தூளாக வாங்கக் கூடாது. கட்டிப் பெருங்காயத்தை வாங்கி, சிறு உருண்டைகளாக உருட்டி, காயவைத்து, கடாயில் சேர்த்து வறுத்து, பொடி செய்து வைத்துக்கொள்ளவேண்டும்)

மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை

உப்பு – தேவையான அளவு

புளி – 50 கிராம்

(இளஞ்சூடான தண்ணீரில் இந்த புளியை ஊறவைத்து, கரைத்துக்கொள்ளவேண்டும். அந்த தண்ணீரை வடிகட்டி வைத்துக்கொள்ளவேண்டும்)

முந்திரி – கைப்பிடியளவு

செய்முறை

ஒரு கடாயில் 2 டேபிள் ஸபூன் எண்ணெயை சூடாக்கி, வர மிளகாய், உளுந்து, கடலை பருப்பு, வெந்தயம், வர மல்லி, எள், மிளகு, கடுகு, சீரகம் என அனைத்தையும் ஒவ்வொன்றாக நல்ல மனம் அல்லது பொன்னிறமாகும் வரை வறுத்துக்கொள்ளவேண்டும். அதை ஒரு தட்டில் சேர்த்து ஆறவைத்துவிடவேண்டும். பின்னர் ஒரு காய்ந்த மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடித்து வைத்துக்கொள்ளவேண்டும்.

கடாயில் கால் கப் எண்ணெய் சேர்த்து அது சூடானவுடன், முந்திரியையும், வேர்க்கடலையையும் வறுத்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவேண்டும்.

அதே எண்ணெயில் கடுகு, உளுந்து, கடலை பருப்பு சேர்த்து பொன்னிறமானவுடன், வர மிளகாய், கறிவேப்பிலையைச் சேர்த்து தாளிக்கவேண்டும். அடுத்து உப்பு, சீரகம், மஞ்சள் தூள், பெருங்காயத் தூள் என அனைத்தும் சேர்த்து புளித்தண்ணீரை சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை கொதிக்கவிடவேண்டும்.

உதிரியாக வடித்த சாதத்தில் இந்த கரைசல், அரைத்த மசாலாப்பொடி, வறுத்த முந்திரி மற்றும் வேர்க்கடலை என அனைத்தையும் சேர்த்து கலந்து வைத்துவிட்டால் சூப்பர் சுவையான கோயில் புளியோதரை தயார். இதற்கு தொட்டுக்கொள்ள சுட்ட அப்பளம், வத்தல், தேங்காய் துவையல் என எது இருந்தாலும் போதும்.

இதுபோன்ற எண்ணற்ற தகவல்கள், ஜோக்குள், வித்யாசமான ரெசிபிக்கள், குழந்தைகளின் பெயர்கள், தோட்டக்கலை பராமரிப்பு குறிப்புகள், பண்டிகைக் கால சிறப்பு உணவுகள், பழக்கங்கள், மரபுகள், குழந்தைகளுக்கு அர்த்தமுள்ள பெயர்கள், அழகு குறிப்புகள் மற்றும் ஆரோக்கிய குறிப்புக்கள் தேர்ந்தெடுத்து வழங்கப்பட்டு வருகிறது. எனவே தகவல்களை தொடர்ந்து பெற்று ஆரோக்கியமான வாழ்வு வாழ வாழ்த்துக்கள்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.