தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  Periods Problem Even If You Have Missed Periods For Months Drink This And It Will Come Right Away Here Are 2 Tips

Periods Problem : மாதக்கணக்கில் வராத மாதவிடாயும் இதை குடித்தால் உடனே வரும்! இதோ 2 டிப்ஸ்கள்

Priyadarshini R HT Tamil
Feb 24, 2024 01:02 PM IST

Periods Problem : மாதக்கணக்கில் வராத மாதவிடாயும் இதை குடித்தால் உடனே வரும்! இதோ 2 டிப்ஸ்கள்

Periods Problem : மாதக்கணக்கில் வராத மாதவிடாயும் இதை குடித்தால் உடனே வரும்! இதோ 2 டிப்ஸ்கள்
Periods Problem : மாதக்கணக்கில் வராத மாதவிடாயும் இதை குடித்தால் உடனே வரும்! இதோ 2 டிப்ஸ்கள்

ட்ரெண்டிங் செய்திகள்

தேவையான பொருட்கள்

சீரகம் – 1 ஸ்பூன்

ஓமம் – 1 ஸ்பூன்

ஓமம் பெண்களின் கர்ப்பப்பையில் தங்கியிருக்கக்கூடிய, நாள்பட்ட கட்டி, கட்டியாக தங்கியிருக்கக்கூடிய அழுக்குகளை அடித்து வெளியேற்றும். கர்ப்பப்பைய வலுவாக்கும். எனவே பெண்கள் கட்டாயம் அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டிய ஒன்று ஓமம்.

தண்ணீர் – ஒரு டம்ளர்

இஞ்சி – ஒரு துண்டு

கருப்பட்டி – ஒரு ஸ்பூன் (பொடித்தது)

அல்லது வெல்லம், நாட்டுச்சர்க்கரை, தேன் என பயன்படுத்திக்கொள்ளலாம். வெள்ளை சர்க்கரை மட்டும் எடுத்துக்கொள்ளக்கூடாது.

செய்முறை

ஒரு கடாயில் சீரகத்தை சேர்த்து வெடிக்கும் வரை வறுக்க வேண்டும். அடுப்பு மிதமான தீயில் இருக்க வேண்டும். பின்னர் அடுப்பை குறைவான தீயில் வைத்து ஓமத்தை சேர்த்து சிறிது சூடானவுடன், அதில் ஒரு டம்ளர் தண்ணீரை சேர்த்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். தண்ணீர் 200 மி.லி. இருக்க வேண்டும்.

அடுத்தது இஞ்சியை நசுக்கி சேர்க்க வேண்டும். தண்ணீர் நன்றாக வற்றி ஒரு 50 மில்லியாக வரவேண்டும். இதை வடிகட்டி, அதில் கருப்பட்டி சேர்த்து பருகவேண்டும்.

கருப்பட்டி கர்ப்பபைக்கு நல்லது. கர்ப்பப்பையில் உள்ள அழுக்குகளை நீக்கும். இந்த தேநீரை மிதமான சூட்டில் பருகவேண்டும்.

இதை காலை வெறும் வயிற்றில் பருகவேண்டும். அப்படி குடித்தால், இரவே மாதவிடாய் வரும். மிகவும் நாள்பட்ட பிரச்னையாக இருந்தால், 2 நாள் இரு வேளை பருகலாம். உடனே வரும்.

குறிப்பு – 2

ஹார்மோன் சமமின்மை, கர்ப்பபையில் நீர்கோர்த்தல், கர்ப்பப்பையில் கட்டி, மாதவிடாய் கோளாறு, தைராய்ட் உள்ளிட்ட அனைத்து பிரச்னைகளுக்கும் மலைவேம்பு அருமருந்தாகும்.

மலைவேம்பை அரைத்து அதை வடிகட்டி அதில் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து, காலையில் வெறும் வயிற்றில் பருகினால் உங்கள் கருப்பை தொடர்பான அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு கிடைக்கும். இதை 3 நாட்கள் தொடர்ந்து பருகவேண்டும்.

இதை பருகும்போது காரம், புளி, உப்பு, எண்ணெய், அசைவ உணவுகளை தவிர்க்க வேண்டும். எளிதில் ஜீரணமாகக் கூடிய உணவுகளை மட்டும் சேர்த்துக்கொள்ளவேண்டும். அதை பொடியாகவும் எடுத்துக்கொள்ளலாம்.

கொதிக்கவைத்த தண்ணீரில் அந்தப்பொடியயை கலந்துவிடவேண்டும். அடுப்பை உடனே நிறுத்திவிட்டு, அந்தச்சாறு அதில் இறங்க சிறிது நேரம் வைத்திருந்துவிட்டு, அதை அப்படியே வடிகட்டி பருகலாம். இதையும் காலையல் வெறும் வயிற்றில் 3 நாட்கள் தொடர்ந்து பருகினால் கருப்பை பிரச்னைகள் அனைத்துக்கும் தீர்வு கிடைக்கும்.

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம். எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel

டாபிக்ஸ்