Periods Pain : படாய்படுத்தும் மாதவிடாய் வலி! இந்த ஒரு கசாயம் போதும்! மேலும் என்ன நன்மைகள் செய்கிறது பாருங்க!
Periods Pain : படாய்படுத்தும் மாதவிடாய் வலிக்கு புதினாவில் தயாரிக்கப்படும், இந்த ஒரு கசாயம் மட்டும் போதும். இந்த கசாயம் மேலும் என்ன நன்மைகள் செய்கிறது என்று பாருங்கள்.

மாறிவரும் வாழ்க்கைமுறை மற்றும் உணவுப்பழக்கம் ஆகியவற்றால் நாம் இன்று பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாக நேரிடுகிறது.
இதனால், 30 முதல் 40 வயதை கடந்தவுடனே, பல்வேறு நோய்களுக்கு ஆளாகிறோம். நம் வாழ்க்கை முறையில் மாற்றம் ஏற்பட ஏற்பட நமக்கு ஏற்படும் நோய்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
அதற்கு நாம் மருத்துவர்களை நாடி, மருந்துகள் எடுத்துக்கொள்கிறோம். ஆனால் அவை பக்கவிளைவை ஏற்படுத்தக்கூடியவை.
ஆனால் பிரச்னைகள் சிறிய அளவில் இருக்கும்போதே நாம் வீட்டிலே சிலவற்றை செய்தால், எளிய பிரச்னைகளில் இருந்து குணமாகி, அவை மேலும் அதிகரிக்காமல் தடுக்க முடியும். அவ்வாறு இன்று நீங்கள் தெரிந்துகொள்ளப்போவது என்ன?
மாதவிடாய் வலி அல்லது டிஸ்மெனோரா
மாதவிடாய் காலத்தில் உங்கள் இடுப்பு பகுதிகள், வயிறு, பின்புறம் மற்றும் கால்கள் ஆகியவற்றில் தொடர் வலி ஏற்படுவது ஆகும். உங்கள் உடலில் அதிகளவில் இயற்கை வேதிக்பொருட்கள் இருந்தால், மாதவிடாய் வலி உருவாகும். இது கருப்பை, குடல் மற்றும் ரத்த நாளங்களுடன் வினைபுரிந்து இந்த வலியை ஏற்படுத்துகிறது. கருப்பையின் தசைகள் இறுகுவதாலும் மாதவிடாய் வலி ஏற்படுகிறது. குறைவான அளவு வலி இயல்பான ஒன்றுதான்.
எப்போது துவங்கும்?
உங்களுக்கு மாதவிடாய் ஏற்படுவதற்கு 2 நாட்களுக்கு முன்னரே துவங்கி மூன்று நாட்கள் வரை மாதவிடாய் வலி இருக்கும். வலி நிவாரணிகளை உட்கொண்டால் வலி அதிகரிக்கும். அது அதிகமாகும்போது மருத்துவரை அணுகவேண்டும்.
மாதவிடாய் வலி அறிகுறிகள்
இடுப்பில் வலி
வயிற்றில் வலி, பின்புறம், கால்களில் வலி
தொடர் வலி
முதல் நாளில் வலி அதிகரித்தாலோ அல்லது உதிரப்போக்கு கட்டியாக வந்தாலோ, மேலும் சில அறிகுறிகள் தோன்றும். அவை
தலைவலி
காய்ச்சல்
மார்பகங்களில் வலி மற்றும் வயிறு சுருக்கம்
மாதவிடாயின் மூன்று நாட்களும் விடாமல் வலி
செரிமான கோளறுகள்
சிகிச்சை
மருத்துவர் பரிந்துரையின்பேரில் மாத்திரைகள்.
உடற்பயிற்சிகள், எண்டோர்ஃபின்களை வெளியேற்றி உங்கள் வலியைக் குறைக்கும்.
சுடுதண்ணீர் ஒத்தடம்.
இவையெல்லாம் தீவிரமாகும்போது உடனடியாக மருத்துவரிடம் செல்வது கட்டாயம். ஆனால் மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலிகளைப்போக்க வீட்டிலே சில எளிய தீர்வுகளும் உண்டு. அவற்றையும் முயற்சிக்கலாம். அதில் ஒன்று உங்களுக்கு இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
தேவையான பொருட்கள்
ஓமம் – ஒரு ஸ்பூன்
இஞ்சி – ஒரு சிறிய துண்டு
புதினா – 3 கைப்பிடியளவு
கருப்பட்டி – சிறிதளவு
செய்முறை
ஓமம், இஞ்சி, புதினா மூன்றையும் மிக்ஸி ஜாரில் சேர்த்து அடித்து, கருப்பட்டியை கலந்து அப்படியே பருகிவிடவேண்டும். ஆனால் இதுபோல் பருகுவது மாதவிடாய் காலத்தில் வயிற்றில் ஏற்கனவே குமட்டல் போன்ற பிரச்னைகளால் அவதிப்படுபவர்களுக்கு மேலும் குமட்டலைத்தான் ஏற்படுத்தும்.
எனவே இதை அப்படியே பருக விரும்பாதவர்கள், இவை மூன்றையும் கொதிக்க வைத்து டீயாக்கி அதில் கருப்பட்டி கலந்து இளஞ்சூட்டில் பருகலாம். ஆனால், அப்படியே பருகும்போதுதான், இதன் பலன் இருமடங்கு அதிகரிக்கும். இந்த பானத்தை உங்களுக்கு மாதவிடாய் துவங்கிய முதல் நாளில் இருந்து 5 நாட்கள் வரை எடுத்துக்கொள்ளவேண்டும்.
ஓமம்
ஓமம் கருப்பைக்குள்ளிருந்து வெளியேறு வாயுக்களால்தான் மாதவிடாய் காலங்களில் வலி ஏற்படுகிறது. எனவே அதை சரிசெய்ய ஓமம் உதவுகிறது. அந்த வாயுவை முழுமையாக வெளியேற்றிவிடும்.
இஞ்சி
கருப்பையில் உள்ள கழிவுகளை முழுமையாக நீக்குகிறது.
புதினா
புதினாவில் உள்ள அதிகப்படியான கால்சியச் சத்துக்கள், கருப்பையில் உள்ள தசைகளை வலுவடையடையச்செய்து, கருப்பையை நன்றாக சுருங்கி விரியச் செய்து ரத்த ஓட்டத்தை சீர்ப்படுத்தி, மாதவிடாய் கழிவுகள் முழுமையாக வெளியே உதவுகிறது.
கருப்பட்டி
இரும்புச்சத்து நிறைந்தது. கருப்பைக்கு தேவையான சத்துக்களை வழங்கி, மாதவிடாய் கழிவுகள் முற்றிலும் வெளியேற உதவுகிறது.
பொறுப்பு துறப்பு
இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.
எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9

டாபிக்ஸ்