Period Cramps : மாதவிடாய் வலியால் அவதியா? இந்த பானங்கள் உங்களுக்கு கட்டாயம் பலன் கொடுக்கும்!-period cramps suffering from menstrual cramps these drinks will surely give you results - HT Tamil ,லைஃப்ஸ்டைல் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Period Cramps : மாதவிடாய் வலியால் அவதியா? இந்த பானங்கள் உங்களுக்கு கட்டாயம் பலன் கொடுக்கும்!

Period Cramps : மாதவிடாய் வலியால் அவதியா? இந்த பானங்கள் உங்களுக்கு கட்டாயம் பலன் கொடுக்கும்!

Priyadarshini R HT Tamil
Mar 10, 2024 05:30 PM IST

Period Cramps : மாதவிடாய் காலங்களில் உடல் உபாதைகள் மற்றும் மனநிலை மாற்றங்கள் ஏற்படும். அதில் இருந்து ஆறுதல் பெறுவதற்கு உதவும் பானங்கள் யாவை என்று தெரிந்துகொள்ளுங்கள்.

Period Cramps : மாதவிடாய் வலியால் அவதியா? இந்த பானங்கள் உங்களுக்கு கட்டாயம் பலன் கொடுக்கும்!
Period Cramps : மாதவிடாய் வலியால் அவதியா? இந்த பானங்கள் உங்களுக்கு கட்டாயம் பலன் கொடுக்கும்!

மூலிகை தேநீர்

மூலிகை தேநீர் உங்கள் உடலுக்கு புத்துணர்வைக் கொடுக்கிறது. சீமை சாமந்திப்பூவில் தயாரிக்கப்படும் தேநீர், உங்கள் தசைகளை ரிலாக்ஸ் ஆக்குகிறது. வீக்கத்தை குறைக்கிறது. மிளகு, புதினா டீயும், வலியை போக்குகிறது. தசைகளை ரிலாக்ஸ் ஆக்குகிறது.

இஞ்சி டீ

இஞ்சி டீ, பெண்களுக்கு டிஸ்மோனெரியா எனப்படும் மாதவிடாய் வயிற்றுவலிக்கு நிவாரணம் கொடுக்கிறது. 2019ம் ஆண்டு ஆய்வில், இஞ்சியில் உள்ள அழற்சிக்கு எதிரான உட்பொருட்கள், மாதவிடாய் வலிகளை போக்குவதாக கூறுகிறது. அது கருப்பை பிரச்னைகளுக்கு தீர்வு கொடுக்கிறது.

இளஞ்சூடான எலுமிச்சை தண்ணீர்

இளஞ்சூடான எலுமிச்சை சாறு, உடலில் உள்ள அமில சமநிலையை உறுதிப்படுத்துகிறது. மேலும் உடலில் நீர்ச்சத்தை அதிகரிக்கிறது. இதில் உள்ள வைட்டமின் சி, அழற்சிக்கு எதிரான உட்பொருட்கள் ஆகியவை வயிறு உப்புசத்தை குறைக்க உதவுகிறது.

மஞ்சள் பால்

மஞ்சளில் குர்குமின் உள்ளது. அழற்சிக்கு எதிரான திறன்கொண்ட உட்பொருள் இது. மஞ்சள் கலந்த பாலை பருகுவது, அழற்சியை குறைத்து, மாதவிடாய் வலிகளை குறைக்கிறது.

சூடான பால்

பாலில் வைட்டமின் டி மற்றும் கால்சியம் உள்ளது. அது எலும்பு ஆரோக்கியத்துக்கு நல்லது. எனவே சூடான பால் குடிக்ம்போது அது உங்கள் தசைகளை ரிலாக்ஸ் செய்து, நல்ல மனநிலையைக் கொடுக்கிறது.

செரி சாறு

செரியில் ஆன்டி – ஆக்ஸிடன்ட்கள் மற்றும் அழற்சிக்கு எதிரான உட்பொருட்கள் உள்ளது. இதில் உள்ள ஆந்தோசினின் போன்றவை வீக்கம், அழற்சியை குறைத்து மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலியை குறைக்க உதவுகிறது.

கிரீன் டீ

உடல் எடை குறைக்க விரும்புபவர்களின் முதல் தேர்வில் இருப்பது கிரீன் டீ. கிரீன் டீ பருகுவதால், உடலில் அழற்சி மற்றும் வீக்கம் குறைகிறது. அது மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வயிற்று வலி மற்றும் சிரமங்களை குறைக்கிறது. இதில் உள்ள கேத்தின்கள், அழற்சிக்கு எதிரான உட்பொருள்

பட்டை டீ

பட்டை டீ பருகுவதும், மாதவிடாய் பிரச்னைகளை சரிபடுத்துகிறது. இதில் உள்ள அழற்சிக்கு எதிரான குணங்கள், அழற்சி மற்றும் வீக்கத்தை குறைத்து தசைகளின் இறுக்கத்தை தளர்த்தி உடலுக்கு ஆறுதல் கொடுக்கிறது.

இந்த பானங்களை நாள் முழுவதும் உங்களுக்கு தேவைப்படும்போது எடுத்துக்கொள்ளலாம். குறிப்பாக மாதவிடாய் காலங்களில் அது உங்களுக்கு மிகவும் நல்லது. உங்கள் உடலுக்கு என்ன தேவையோ அதை செய்துகொள்ளுங்கள்.

இந்த பானங்கள் உங்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஆறுதல் கொடுத்தாலும், ஒவ்வொருவருக்கும் ஒருவிதமாக செயல்படும். எனவே உங்களுக்கு மாதவிடாய் காலங்களில் வழக்கத்தைவிட அதிக வலி போன்றவை ஏற்பட்டால், உங்கள் மருத்துவரை அணுகுவதுதான் சிறந்தது. 

மேலும் அவர்களிடம் இந்த பானங்கள் உங்களுக்கு உகந்ததா என்பதையும் தெரிந்துகொள்ளுங்கள். உங்களுக்கு வேறு உடல் உபாதைகள் எதாவது இருந்தால், இந்த பானங்கள் அவற்றை அதிகரிக்கச்செய்வதாக இருக்கக்கூடாது. எனவே மிகவும் கவனமுடன் செயல்படுவது அவசியம்.

எடுத்துக்காட்டாக மிளகு, புதினா டீ உங்களுக்கு வாயு பிரச்னைகள் இருந்தால், அதை அதிகரிக்கும். இஞ்சி டீ நெஞ்செரிச்சலை அதிகரிக்கும். வயிறு உபாதைகள் மற்றும் வயிற்றுப்போக்கு ஆகியவற்றை ஏற்படுத்தும். எனவே இவற்றை எடுக்கும்முன் கவனம் தேவை.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குக ள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

Google News: https://bit.ly/3onGqm9 

 

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.