மிளகு சாதம் : சட்டுன்னு செய்யக்கூடிய லன்ச் பாக்ஸ் ரெசிபி! மிளகு சாதம்; அனைவரும் பிடிக்கும், ஆரோக்கியமும் நிறைந்தது!
மிளகு சாதம் : இதை நீங்கள் குழந்தைகள முதல் பெரியவர்கள் வரை யாருடைய லன்ச் பாக்ஸில் வேண்டுமானாலும் கொடுத்துவிடலாம். அவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள். 15 நிமிடத்திலே இதை செய்துவிட முடியும். இதற்கு பெரிதாக நீங்கள் மெனக்கெடவே தேவையில்லை.

மிளகு சாதம் செய்வது எப்படி என்று பாருங்கள். இந்த சாதத்தை நீங்கள் ஒருமுறை ருசித்தால் மீண்டும் கட்டாயம் செய்வீர்கள். இதை செய்வதும் மிக எளிது. வடித்த சாதம் ஒரு கப் இருந்தால் போதும், வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே இந்த சாதத்தை தயாரித்துவிடலாம். இதை நீங்கள் குழந்தைகள முதல் பெரியவர்கள் வரை யாருடைய லன்ச் பாக்ஸில் வேண்டுமானாலும் கொடுத்துவிடலாம். அவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள். 15 நிமிடத்திலே இதை செய்துவிட முடியும். இதற்கு பெரிதாக நீங்கள் மெனக்கெடவே தேவையில்லை.
தேவையான பொருட்கள்
• மிளகு – ஒரு டேபிள் ஸ்பூன்
• சீரகம் – ஒரு ஸ்பூன்
• எண்ணெய் – 2 ஸ்பூன்
• நெய் – 2 ஸ்பூன்
• கடலை பருப்பு – ஒரு ஸ்பூன்
• உளுந்து – ஒரு ஸ்பூன்
• கடுகு – ஒரு ஸ்பூன்
• முந்திரி – 15
• பெருங்காயத் தூள் – கால் ஸ்பூன்
• பூண்டு – 8 பல் (பொடியாக நறுக்கியது)
• சின்ன வெங்காயம் – கால் கப் (பொடியாக நறுக்கியது)
• பச்சை மிளகாய் – 4 (கீறியது)
• கறிவேப்பிலை – ஒரு கொத்து
• உப்பு – தேவையான அளவு
• வடித்த சாதம் – ஒரு கப்
செய்முறை
1. ஒரு சிறிய உரலில் மிளகு மற்றும் சீரகத்தைச் சேர்த்து நன்றாக பொடித்து எடுத்துக்கொள்ளவேண்டும்.
2. ஒரு கடாயில் எண்ணெய் மற்றும் நெய் சேர்த்து அது சூடானவுடன் கடுகு, உளுந்து, கடலை பருப்பு மற்றும் சில முந்திரிகளை சேர்த்து வறுத்துக்கொள்ளவேண்டும்.
3. அடுத்து பொடியாக நறுக்கிய பூண்டு மற்றும் வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்கவேண்டும்.
4. அடுத்து கீறிய பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலையை சேர்த்து நன்றாக வதக்கவேண்டும். அடுத்து பெருங்காயத்தூள் சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ளவேண்டும்.
5. தேவையான அளவு உப்பு மற்றும் பொடித்து வைத்துள்ள மிளகு, சீரகத் தூள் சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ளவேண்டும்.
6. அடுத்து வடித்த சாதத்தை சேர்த்து கிளறிவிட்டு, இன்னும் சிறிது மிளகு – சீரகத்தூளை சேர்த்து கிளறவேண்டும். சூப்பர் சுவையான மிளகு சாதம் தயார்.
காலையில் லன்ச் பாக்ஸ்க்கு வேறு செய்ய நேரம் இல்லாதபோது, இந்த சாதத்தை செய்து கொடுத்துவிடலாம். இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைவருக்கும் பிடிக்கும். இதை நீங்கள் ஒருமுறை ருசித்தால் மீண்டும் வேண்டும் என்று நினைப்பீர்கள். இதில் வெங்காயம் தேவைப்பட்டால் சேர்க்கலாம். இல்லாவிட்டால் விட்டுவிடலாம். அதை சேர்க்காவிட்டாலும் சாதம் நன்றாக இருக்கும்.

டாபிக்ஸ்