Pepper Rice : நிமிஷத்துல செஞ்சிடலாம் மிளகு சாதம்; லன்ச்பாக்ஸ் மிச்சம் வெக்காம காலியாகணும்னா செஞ்சிடுங்க இப்டி!
Pepper Rice : நிமிஷத்துல செஞ்சிடலாம் மிளகு சாதம்; லன்ச்பாக்ஸ் மிச்சம் வெக்காம காலியாகணும்னா இப்படி செய்து கொடுத்து விடுங்கள்.

தேவையான பொருட்கள்
வேகவைத்த சாதம் – ஒரு கப்
கடுகு – கால் ஸ்பூன்
உளுத்தம் பருப்பு – கால் ஸ்பூன்
நெய் – கால் கப்
வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
மிளகு – 2 ஸ்பூன்
சீரகம் – 2 ஸ்பூன்
கறிவேப்பிலை – ஒரு கொத்து
உப்பு – தேவையான அளவு
முந்திரி பருப்பு – ஒரு கைப்பிடியளவு
செய்முறை
கடாயில் நெய் ஊற்றி, கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து, பொரிந்தவுடன், அதில் முந்திரி பருப்பு, வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவேண்டும்.
மிளகு மற்றும் சீரகத்தை சேர்த்து ஒன்றாக தட்டவேண்டும். வேகவைத்த அரிசியை சேர்த்து கிளறவேண்டும். அதில் தட்டிய மிளகு, சீரகம் சேர்த்து நன்றாக கலந்துவிடவேணடும். தேவையான அளவு உப்பு தூவி இறக்கினால் சூப்பரான மிளகு சாதம் தயார். இதற்கு தொட்டுக்கொள்ள, கூட்டுபோன்ற காய்கறிகள் நன்றாக இருக்கும். உருளைக்கிழங்கு அல்லது வாழைக்காய் வறுவல் கூட சிறப்புதான்.
மிளகு
கருப்பு தங்கம் என்று அழைக்கப்படும் மிளகு உடலுக்கு பல்வேறு நன்மைகளைத்தருகிறது. வரலாற்று சிறப்புமிக்க மசாலாக்களுள் ஒன்று. இது உணவுகளுக்கு பிரிசர்வேட்டிவாகவும், சுவையை கொடுப்பதாகவும் உள்ளது. இது சூடான உணவுடன் சேர்த்து உட்கொள்ளப்படுகிறது.
தென்னிந்தியாவில் கேரளா, கோவா மற்றும் கர்நாடகாவில் அதிகம் விளைகிறது. ரோம், கிரீஸிலும் உள்ளது. மத்திய காலங்களில் இது பிரபலமானது. உலகின் 39 சதவீத மிளகு உற்பத்தி வியட்நாமில் இருந்து கிடைக்கப்படுகிறது. இந்தியா மற்றும் பிரேசில் 10 சதவீத உற்பத்தியையும், இந்தோனேஷியா 15 சதவீத உற்பத்தியையும் கொண்டுள்ளது.
சுவைக்கு பயன்படுத்தப்படுவது மட்டுமல்ல எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது. இதில் உள்ள பயோஆக்டிவ் உட்பொருட்கள் மற்றும் பைப்பெரின் ஆகியவை மிகவும் முக்கியமானது.
பைப்பரின் இயற்கை ஆல்கலைட் ஆகிறது. இதுதான் கார சுவையை மிளகுக்கு தருகிறது. இதுதான் முக்கிய உட்பொருளும் ஆகிறது. இதில்தான் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகள் குவிந்துள்ளன.
பைப்பெரின் என்ற ஆன்டி ஆக்ஸிடன்ட், நாள்பட்ட நோய்களான இதய நோய்கள், நரம்புக்கோளாறுகள் ஆகியவை ஏற்படாமல் தடுக்கிறது. மிளகை அதிகம் உணவில் சேர்த்துக்கொள்ளும்போது அது உங்களுக்கு ரத்தத்தில் ஊட்டச்சத்துக்கள் சரியான அளவில் உறிஞ்சப்படுவதற்கு உதவுகிறது.
செரிமான ஆரோக்கியம் மறறும் குடல் நலனுக்கு உதவுகிறது
மிளகு, வயிற்றில் ஹைட்ரோகுளோரிக் அமிலத்தை சுரக்கும். இதனால் உங்களுக்கு நல்ல செரிமானம் நடைபெறும். உடல் சாப்பிடும் உணவுகளில் உள்ள சத்துக்களை நன்றா உறிஞ்சும். வாயுவை நீக்கி, வயிறு உப்புசம் மற்றும் அசவுகர்யங்களைக் குறைத்து, வயிற்றில் வாயுக்கள் உருவாகாமல் பாதுகாக்கும்.
உடலின் நோய் எதிர்ப்புத்திறனை அதிகரிக்கிறது
உடலில் வலுவான நோய் எதிர்ப்புத்திறன் இருக்கவேண்டும். அப்போதுதான் நோய்கள் பறந்தோடும். அதற்கு மிளகு உதவும். இதன் உட்பொருட்கள், வெள்ளை அணுக்களுக்கு ஊட்டத்தைக் கொடுத்து, உங்கள் உடல் பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றுகளில் இருந்து தப்பிக்க உதவும்.
மிளகில் பைபெரின் மற்றும் சாவின்சின் போன்ற ஒலியோரெசின்ஸ் மற்றும் ஆல்கலைட்கள் உள்ளன. இதில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், ஃப்ளேவனாய்ட்கள் உள்ளன. இது உங்கள் உடலில் உள்ள செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது.
மிளகில், வைட்டமின்கள் கே, ஈ, ஏ, தியாமின், ரிபோஃப்ளாவின், பேண்டோதெனிக் அமிலம், வைட்டமின் பி6, காப்பர், மாங்கனீஸ், இரும்புச்சத்துக்கள், கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், செலினியம், சிங்க், குரோமியம் ஆகிய சத்துக்கள் உள்ளன.
மிளகில் உள்ள மாங்கனீஸ், எலும்பு ஆரோக்கியத்துக்கு உதவுகிறது. காயங்களை ஆற்றுகிறது. உடலின் வளர்சிதையை ஊக்குவிக்கிறது. ஒரு ஸ்பூன் மிளகில், உங்களுக்கு தினசரி தேவையில் 13 சதவீத மாங்கனீஸ் மற்றும் 3 சதவீதம் வைட்டமின் கேவும் உள்ளது.
ஒரு ஸ்பூன் மிளகில் 6 கலோரிகள், 0 கிராம் புரதம், 0 கிராம் கொழுப்பு, ஒரு கிராம் கார்போஹைட்ரேட், ஒரு கிராம் நார்ச்சத்துக்கள், சர்க்கரை 0 கிராம், கொலஸ்ட்ரால் 0 மில்லிகிராம், சோடியம் 0 மில்லிகிராம் உள்ளது.
கவனிக்க வேண்டியது என்ன?
மிளகில் உள்ள பைப்பரின் என்ற உட்பொருள், சில மருந்துகளுடன் வினைபுரியும் தன்மை கொண்டது. மருத்துகளுடன் சில வேதிவினைகளை ஏற்படுததும். எனவே நீங்கள் மருந்து உட்கொள்ளும்போது, அதில் மட்டும் கவனம் தேவை.
சளி, இருமலை விரட்டும் பிரதான மருந்தாக சித்த மருத்துவத்திலும், வீடடு மருத்துவத்திலும் மிளகு உள்ளது. உடலுக்கு சூட்டை வழங்கி சளியை விரட்யடிக்கிறது. இந்த மிளகை அன்றாட வாழ்வில் பயன்படுத்தி அதன் பயன்களை முற்றிலும் பெறலாம்.

டாபிக்ஸ்