Pepper Omlate Kulambu : ஆம்லேட் மிளகு குழம்பு செய்வது எப்படி என்று பாருங்கள்; வைத்தவுடனே காலியாகிவிடும் சுவை கொண்டது!
Pepper Omlate Kulambu: ஆம்லேட் மிளகு குழம்பு செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்
வறுத்து அரைக்க
எண்ணெய் – 4 ஸ்பூன்
கொத்தமல்லி விதைகள் – ஒரு ஸ்பூன்
சீரகம் – ஒரு ஸ்பூன்
மிளகு – ஒரு ஸ்பூன்
பட்டை – 1
கிராம்பு – 4
வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
தக்காளி – 2 (பொடியாக நறுக்கியது)
இஞ்சி – சிறிய துண்டு
பூண்டு – 6 பல்
கறிவேப்பிலை – ஒரு கொத்து
மல்லித்தழை – சிறிதளவு
மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
மிளகாய்த் தூள் – ஒரு ஸ்பூன்
குழம்பு மிளகாய்த் தூள் – ஒரு டேபிள் ஸ்பூன்
தேங்காய்த் துருவல் – கால் கப்
(ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து கொத்தமல்லி விதைகள், சீரகம், மிளகு, பட்டை, கிராம்பு, பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு, கறிவேப்பிலை, மல்லித்தழை, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், குழம்பு மிளகாய்த் தூள், தேங்காய்த் துருவல் என அனைத்தையும் நன்றாக வதக்கவேண்டும். வதக்கியவற்றை ஆறவைத்து, ஒரு மிக்ஸி ஜாரில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைத்துக்கொள்ளவேண்டும். இதை தனியாக வைத்துவிடவேண்டும்)
எண்ணெய் – 4 ஸ்பூன்
கடுகு – கால் ஸ்பூன்
சீரகம் – கால் ஸ்பூன்
சின்ன வெங்காயம் – 10
வரமிளகாய் – 2
கறிவேப்பிலை – ஒரு கொத்து
கரம் மசாலாத்தூள் – ஒரு ஸ்பூன்
மிளகாய்த் தூள் – ஒரு ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
மல்லித்தழை – சிறிதளவு
ஆம்லேட் – 4
(முட்டையை தனியாக ஆம்லேட்களாக செய்து வைத்துக்கொள்ளவேண்டும்)
செய்முறை
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு, சீரகம், சின்ன வெங்காயம், வரமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவேண்டும். அடுத்து அரைத்த மசாலா விழுது மற்றும் தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்கவிடவேண்டும். கரம் மசாலாத்தூள், உப்பு, மிளகாய்த் தூள் சேர்த்து நன்றாக எண்ணெய் பிரிந்து வரும் அளவுக்கு கொதிக்கவிடவேண்டும்.
அடுத்து அதில் தயாரித்து வைத்துள்ள ஆம்லேட்களை சேர்த்து மல்லித்தழை தூவி இறக்கினால் சூப்பர் சுவையான ஆம்லேட் குழம்பு தயார். இதற்கு தொட்டுக்கொள்ள எதுவும் தேவையில்லை. ஆம்லேட் குழம்பிலே உள்ளது.
இதை உங்கள் வீட்டில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். ஒருமுறை ருசித்தால் மீண்டும், மீண்டும் வேண்டும் என்று கேட்பீர்கள். எனவே கட்டாயம் ஒருமுறை ருசித்துப் பாருங்கள். இதை செய்வது எளிது. ஒருமுறை இதை செய்துவிட்டு, இரவுக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று நினைக்க முடியாது.
ஏனென்றால், இதை மதியம் வைத்தால் அப்போதே காலியாகிவிடும். அத்தனை சுவையானதாகும். ஆம்லேட்களை கரண்டியில் செய்துகொள்வது நல்லது. தோசைக்கல்லில் செய்தால் குழம்பில் போடும்போது படர்ந்து இருக்கும். எனவே கரண்டியில் செய்யும்போது கச்சிதமாக குழம்புக்குள் அடங்கிவிடும்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்