Pepper Kulambu : மிளகுக் குழம்பு; 2 வகையான செய்முறை, 3 வகையான மிளகுக் குழம்புகள்! சுவைத்து மகிழுங்கள்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Pepper Kulambu : மிளகுக் குழம்பு; 2 வகையான செய்முறை, 3 வகையான மிளகுக் குழம்புகள்! சுவைத்து மகிழுங்கள்!

Pepper Kulambu : மிளகுக் குழம்பு; 2 வகையான செய்முறை, 3 வகையான மிளகுக் குழம்புகள்! சுவைத்து மகிழுங்கள்!

Priyadarshini R HT Tamil
Feb 03, 2025 01:12 PM IST

Pepper Kulambu : மிளகுக் குழம்பு செய்வது எப்படி என்று நம்புங்கள்.

Pepper Kulambu : மிளகுக் குழம்பு; 2 வகையான செய்முறை, 3 வகையான மிளகுக் குழம்புகள்! சுவைத்து மகிழுங்கள்!
Pepper Kulambu : மிளகுக் குழம்பு; 2 வகையான செய்முறை, 3 வகையான மிளகுக் குழம்புகள்! சுவைத்து மகிழுங்கள்!

தாளிக்க தேவையான பொருட்கள்

வரமிளகாய் – 4

உளுந்து, மல்லி – 4 டேபிள் ஸ்பூன்

சீரகம் – 4 டேபிள் ஸ்பூன்

கடுகு – ஒரு ஸ்பூன்

கறிவேப்பிலை – ஒரு கொத்து

பெருங்காயத் தூள் – ஒரு சிட்டிகை

எண்ணெய் – தேவையான அளவு

இதர தேவையான பொருட்கள்

புளி - எலுமிச்சை அளவு

மஞ்சள் தூள் – அரை ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

செய்முறை

கடாயில் கொஞ்சம் விட்டு, அது சூடானவுடன், மிளகோடு தாளிக்கும் பொருட்கள் கடுகு தவிர அனைத்தும் சேர்த்து அதை நன்றாக வறுக்க வேண்டும்.

வறுத்ததை நன்றாக ஆற விட்டு மிக்ஸியில் போட்டு அதோடு புளியை அப்படியே சேர்த்து 2 டம்ளர் தண்ணீர் விட்டு அனைத்தையும் மை போல அரைத்துக் கொள்ள வேண்டும்.

மீண்டும் கடாயில் கொஞ்சம் விட்டு, சூடாக்கி கடுகை வெடிக்கத் தாளித்து அதில் அரைத்த மசாலாவை சேர்த்து மஞ்சள் தூள், தேவையான உப்பு போட்டு கிளறவேண்டும்.

இதை நன்றாக கொதிக்கவிடவேண்டும். குழம்பு திக்காகி அதில் உள்ள எண்ணெய் பிரிந்து வரும்போது குழம்பை இறக்கி வைக்க வேண்டும்.

ருசியான மிளகு மணக்கும் மிளகுக் குழம்பு ரெடி. இதை சூடான சோற்றில் மட்டுமே பிசைந்து சாப்பிட வேண்டும்.

அப்பள வகைகள், வடகங்கள், காரமில்லாத கூட்டு, பொரியல், அவியல் போன்றவை இதற்கு தொட்டுக் கொள்ள மிக அருமையாக இருக்கும்.

மிளகு பூண்டுக் குழம்பு

குழம்பு பாதி கொதி வரும்போது 15 பூண்டு பற்களை தனியாக எண்ணெயில் வதக்கிச் சேர்த்து நன்றாக கொதிக்க விட்டு சமைத்தால் மிளகு பூண்டு குழம்பு ரெடி.

பூண்டுக்கு பதில் கத்திரிக்காய் அல்லது முருங்கையும் நன்றாக வதக்கி இதில் சேர்த்தால் மிளகு கத்திரி அல்லது முருங்கைக் குழம்பு தயார்.

செய்முறை குறிப்புகள்

உளுந்து சேர்த்தால் மல்லி மற்றும் சீரகம் இரண்டும் சேர்க்கத் தேவையில்லை.

வறுக்கும்போது முதலில் பெருங்காயம் பின்னர், மல்லி, சீரகம் (அ) உளுந்து, வரமிளகாய், கடைசியாக மிளகு, கறிவேப்பிலை, இந்த வரிசையில் தான் வறுக்க வேண்டும்.

மல்லி, சீரகம் சேர்த்தால் வறுத்ததை அரைக்கும்போது புளியைக் கரைத்து கரைசலாக சேர்க்கவேண்டும்.

உளுந்து சேர்த்தால் வறுக்கும்போது மிளகு வெடித்து பொரியும்போது புளியையும் சேர்த்து வறுக்கலாம். அப்படி வறுப்பது தான் மிக ருசியாக இருக்கும்.

மிக்ஸியில் அரைக்கும்போது விட்ட 2 டம்ளர் நீரே போதும். அதிக நீர் சேர்க்கக்கூடாது.

மல்லி, சீரகம் சேர்த்து ஒருமுறை, உளுத்தம் பருப்போடு ஒருமுறை செய்து பாருங்கள்.

இந்தக் குழம்பே தயிர் சாதத்திற்கு ரகளையான ஜோடியாகும். மிளகு - பூண்டு குழம்பு எனில் நெய் விட்டு பிசைந்த பருப்பு சாதத்திற்கு தொட்டுக்கொள்ளவேண்டும். ருசியில் சொக்கிவிடுவீர்கள்.

நன்றி – வெங்கடேஷ் ஆறுமுகம், ஷ்யாம் ப்ரேம்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.