People Safety : அச்சுறுத்தும் அரசின் நடவடிக்கைகள்! கேள்விக்குறியாகும் மக்கள் பாதுகாப்பு! சமூக ஆர்வலர்கள் விமர்சனம்!
People Safety : அச்சுறுத்தும் அரசின் நடவடிக்கைகள்! கேள்விக்குறியாகும் மக்கள் பாதுகாப்பு! சமூக ஆர்வலர்கள் விமர்சனம்!
கடந்த 10 ஆண்டுகளில் அரசால் செய்யப்பட்ட ஆய்வில், போலி மருந்துகள் 4.5 சதவீதம் எனவும், தரம் குறைந்த மருந்துகள் (Sub-standard) 3.4 சதவீதம் எனவும் தெரியவந்ததிலிருந்து, மனிதர்களின் உயிரோடு விளையாடும் போக்கு இந்தியாவில் உள்ளதை நாம் அறிந்துகொள்ள முடியும்.
ட்ரெண்டிங் செய்திகள்
உயிர் காக்கும் மருந்துகளில் 5 சதவீதம் போலியானவை என இருந்தாலே, அவற்றை எடுத்துக்கொள்ளும் மக்களின் கதி என்னாவது? அரசு அத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்க தவறியது ஏன்?
சத்தீஸ்கரில் 2010லேயே செய்த ஆய்வில், குழந்தைகளுக்கு தேவையான அத்தியாவசிய மருந்து பட்டியலில் 90 சதவீதம் சந்தையில் இருக்க வேண்டும் என்பது விதியாக இருக்க, வெறும் 17 சதவீதம் மட்டுமே சந்தையில் இருந்தது. வணிக நோக்கில் மட்டுமே மருந்து விற்பனை நடைபெறுவதை வெளிச்சம் போட்டு காட்டுவதாக உள்ளது. (அத்தியாவசிய மருந்துகளின் லாபம் அதிகம் இல்லை என்பதால் சந்தையில் அவை குறைவான அளவில் மட்டுமே கிடைக்கிறது)
அதேசமயம் பயன் தராத, அறிவியல் விதிகளுக்கு முரணான கூட்டுக்கலவை மருந்துகள் சில்லறை வர்த்தகத்தில் 40 சதவீதம் வரை இந்தியாவில் விற்பனையாகிறது. இதிலிருந்து இந்தியாவில் மருந்து பாதுகாப்பு கலாச்சாரம் (Safety) மோசமாக இருப்பதை தெரிந்துகொள்ள முடியும்.
மற்றும் ஒரு மோசமான பாதுகாப்பு விதிமுறை மீறல்களையே சமீபத்திய உத்தரகாண்ட் சுரங்கப்பாதை விபத்து எடுத்துக்காட்டுவதாக உள்ளது.
150 மணி நேரம் கழிந்தும், விபத்தில் சிக்கிய 40 பேரை மீட்கும் பணியில் தொய்வே காணப்படுகிறது.
P.C.Nawani-Former Director of Geological Survey of India, கூறுகையில், ‘இத்தகைய நீண்ட சுரங்கப்பாதைகள் கட்டமைக்கும் போதே, பாதுகாப்பு கருதி தப்பிக்கும் வழி Escape Channel உருவாக்கப்பட வேண்டும் என்பது விதியாக இருக்க, அது முற்றிலும் மீறப்பட்டுள்ளது‘ என்று கூறியுள்ளார்.
4.5 கி.மீ. தொலைவுள்ள சுரங்கப் பாதையின் பலம் குறைந்த பகுதிகளில் (கற்கள் இன்றி மண் அதிகம் இருக்கும் பகுதி) கூடுதல் பலப்படுத்தும் (Reinforcements) முயற்சிகள் மேற்கொள்ளப் படவேண்டும் என்பது விதியாக இருக்க அதுவும் மீறப்பட்டுள்ளது.
அரசும், சுரங்கப்பாதையை கட்டமைக்கும் நிறுவனங்களும், புவியியலாளர்களின் பாதுகாப்பு தொடர்பான அறிவுரைகளை துளியும் மதிப்பதில்லை.
பாதுகாப்பை உறுதிசெய்யும், ‘Principles of New Australian Tunnelling Method’ விதிகளை இந்தியாவில் சுரங்கப்பாதைகளை கட்டமைக்கும்போது கடைபிடிப்பதில்லை.
S.P.Sati எனும் புவியியலாளர், முதற்கண், பலமற்ற,உறுதியில்லாத (Fragile Zone) பகுதியில் சுரங்கப்பாதை அமைத்ததே தவறு என காட்டமாகக் கூறியுள்ளார். Himalaya பகுதி பாதுகாப்பற்ற பகுதி என அவர் கூறுகிறார்.
உறுதியற்ற பாறைகள் நிறைந்த சில்க்யாரா சுரங்கப்பிதையில், விபத்தின்போதும் பாறைகள் உடையும்போதும் வெளியேறும் தீய வாயுக்களை வெளியேற்றும் தடங்கள் (Channels) அங்கு இல்லை என்பதோடு, விபத்தின்போது தப்பிக்கும் வழிகள் இல்லாதிருப்பதும் மிகப்பெரிய குறைபாடாகும் என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
மிரிட்யின்ஜெய்குமார் எனும் பீகாரைச் சேர்ந்த சுரங்கப் பணியாளர் கூறுகையில், ‘தற்போது நடந்த விபத்து போன்ற சிறு விபத்துகள் இதே பகுதியில் ஏற்கனவே நடந்துள்ளதை தான் சுட்டிக்காட்டியும், முறையான நடவடிக்கைகள் இல்லை என்றும், பாதுகாப்பற்ற சில பகுதிகளில் தப்பித்துச் செல்ல Hume Pipes அமைக்கப்பட்டன என்றாலும்,வேலை முடியுமுன்னரே அவை நீக்கப்பட்டு விட்டன என்றும், சுரங்கப்பாதையின் முக்கிய பாதைக்கு (Main tunnel) பக்கவாட்டில் தப்பிக்கும் வழி இருக்க வேண்டும் என்பது விதியாக இருக்க அது முற்றிலும் மீறப்பட்டுள்ளது’ என்றும் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பான சூழலில் வேலை செய்யும் அடிப்படை உரிமை இந்தியாவில் இல்லை.
(தமிழகத்தில் கூட, வளமான விவசாய நிலங்களை (திருவண்ணாமலை-"மெல்மா") அரசு தொழிற் நிறுவனங்கள் கொண்டுவர கையகப்படுத்த முனையும்போது, அதை எதிர்த்து கருத்து தெரிவிப்பதற்கு உரிமை இருந்தும், அமைதி வழியில் எதிர்ப்பைத் தெரிவித்த விவசாயிகள் மீது குண்டர் சட்டத்தை தமிழக அரசு ஏவி, அவர்களை அச்சுறுத்தியுள்ளது.
மொத்தத்தில், இந்தியா மற்றும் தமிழகத்தில் மக்கள் உரிமை மற்றும் பாதுகாப்பு கேள்விக்கு உள்ளாகியுள்ளதை மக்கள் உணர்ந்து, அதை மீட்க முன்வந்தால் மட்டுமே ஜனநாயகம் நிலைக்கும் என்று மருத்துவர் புகழேந்தி ஆதங்கம் தெரிவித்துள்ளார்.
டாபிக்ஸ்