பீர்க்கங்காய் துவையல் : இனி பீர்க்கங்காய் தோலை தூக்கி வீசாதீர்கள், அதில் சுவையான துவையல் செய்யலாம்!
பீர்க்கங்காய் தோல் துவையல் : இதை ரசம் சாதத்துடன் சேர்த்து சாப்பிடும்போது கூடுதல் சுவையைத் தருகிறது. குறிப்பாக எலுமிச்சை சாதம் அல்லது மற்ற வெரைட்டி சாதத்துடனும் சேர்த்து சாப்பிட சுவை அள்ளும். இதைச் செய்வது எப்படி என்று பாருங்கள்.

பீர்க்கங்காய் துவையல் ஒரு பிரபலமான துவையல் ரெசிபியாகும். பொதுவாக பீர்க்கங்காயை சாப்பிட்டுவிட்டு, நாம் தோலை தூக்கி வீசக்கூடாது. அதை சட்னி வெய்ய முடியும். இதை சாதத்துடன் தொட்டுக்கொண்டு சாப்பிடலாம். எந்த ரசம் சாதத்துடனும் தொட்டுக்கொண்டு சாப்பிடலாம். இதை ரசம் சாதத்துடன் சேர்த்து சாப்பிடும்போது கூடுதல் சுவையைத் தருகிறது. குறிப்பாக எலுமிச்சை சாதம் அல்லது மற்ற வெரைட்டி சாதத்துடனும் சேர்த்து சாப்பிட சுவை அள்ளும். இதைச் செய்வது எப்படி என்று பாருங்கள்.
தேவையான பொருட்கள்
• பீர்க்கங்காய் – 1
• வரமிளகாய் – 2
• தேங்காய்த் துருவல் – 2 டேபிள் ஸ்பூன்
• உளுந்து – ஒரு டேபிள் ஸ்பூன்
• புளி – எலுமிச்சை அளவு
• பெருங்காயத் தூள் – ஒரு சிட்டிகை
• எண்ணெய் – ஒரு ஸ்பூன்
• உப்பு – தேவையான அளவு
மேலும் வாசிக்க - பொட்டுக்கடலை சட்னியை எளிதாக செய்யக்கூடியது; இது இருந்தால் போதும்!
செய்முறை
1. பீர்க்கங்காயை நன்றாக அலசி அதன் தோலை மட்டும் உறித்து எடுத்துக்கொள்ளவேண்டும். பீர்க்கங்காயை மஞ்சள் மற்றும் உப்பு கலந்த தண்ணீரில் அலச வேண்டும்.
2. ஒரு பீலரை வைத்து நன்றாக தோலை உறித்துக்கொள்ளவேண்டும்.
3. ஒரு கெட்டியான கடாயில் எண்ணெய் சேர்த்து அது சூடானவுடன், அதில் உளுந்து, வர மிளகாய், புளி மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து நன்றாக வதக்கவேண்டும். உளுந்து பொன்னிறமானவுடன் ஆறவிட்டு, ஒரு மிக்ஸியில் அனைத்து பொருட்களையும் சேர்த்து அரைத்துக்கொள்ளவேண்டும்.
4. ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து அது சூடானவுடன், அதில் பீர்க்கங்காய் தோல் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ளவேண்டும். அது நல்ல மிருதுவானவுடன் ஆறவைத்துக்கொள்ளவேண்டும்.
5. இப்போது ஏற்கனவே அரைத்து வைத்துள்ள பொருட்களுடன் இதையும் சேர்த்துக்கொள்ளவேண்டும். தேங்காய்த் துருவலை நேரடியாக சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அரைத்துக்கொள்ளவேண்டும்.
6. துவையல் பதத்துக்கு கொஞ்சம் கொரகொரப்பாக அரைக்கவேண்டும் என்பதால், இதில் தண்ணீர் அளவாக சேர்த்து, பல்ஸ் மோடில் அரைத்து எடுக்கவேண்டும்.
மேலும் வாசிக்க - மொறு மொறு கிரிஸ்பியான வடையை இன்ஸ்டன்ட்டாக செய்யலாம்! இதோ ரெசிபி!
7. பீர்க்கங்காய் துவையல் தயார். இதை சாதத்துடன் சேர்த்து சாப்பிட சுவை அள்ளும் அல்லது சாதத்துக்கு தொட்டுக்கொண்டு சாப்பிடலாம். இட்லி, தோசை, பூரி, சப்பாத்தியுடனும் தொட்டுக்கொண்டு சாப்பிடலாம்.

டாபிக்ஸ்