Peerkangai Skin Thuvayal : பீர்க்கங்காய் தோலை குப்பையில் போடாதீர்கள்! சத்தான துவையல் செய்ய முடியும்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Peerkangai Skin Thuvayal : பீர்க்கங்காய் தோலை குப்பையில் போடாதீர்கள்! சத்தான துவையல் செய்ய முடியும்!

Peerkangai Skin Thuvayal : பீர்க்கங்காய் தோலை குப்பையில் போடாதீர்கள்! சத்தான துவையல் செய்ய முடியும்!

Priyadarshini R HT Tamil
Published Sep 03, 2023 02:30 PM IST

Peerkangai Skin Thuvayal : பீர்க்கங்காய் தோலை குப்பையில் போடாமல் துவையல் செய்வது எப்படி? இதோ ரெசிபி.

பீர்க்கங்காய் துவையல் செய்வது எப்படி?
பீர்க்கங்காய் துவையல் செய்வது எப்படி?

கடலை பருப்பு – 1 ஸ்பூன்

உளுத்தம் பருப்பு – 1 ஸ்பூன்

எள்ளு – 1 ஸ்பூன்

தேங்காய் – 1 கப் (துருவியது)

வர மிளகாய் – 6

தாளிக்க தேவையான பொருட்கள்

எண்ணெய் – 1 ஸ்பூன்

கடுகு – கால் ஸ்பூன்

உளுந்து – கால் ஸ்பூன்

கறிவேப்பிலை – ஒரு கொத்து

மிளகாய் – 2

செய்முறை

பீர்க்கங்காய் தோலை நன்றாக உரித்து எடுத்துக்கொள்ள வேண்டும். பீர்க்கங்காயை தனியாக கூட்டோ, சாம்பாரோ செய்துகொள்ளலாம்.

பீர்க்கங்காய் தோலை உரித்து நன்றாக அலசி சுத்தப்படுத்திக்கொள்ள வேண்டும்.

அடுப்பில் கடாயை சூடாக்கி சிறிது எண்ணெய் சேர்த்து உளுந்து, கடலை பருப்பு, எள்ளு ஆகியவற்றை தனித்தனியாக பொன்னிறமாக வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் தேங்காயையும் நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும். அனைத்தையும் நன்றாக ஆறவைக்க வேண்டும்.

பீர்க்கங்காய் தோலையும் நன்றாக வதக்கி, அனைத்தும் ஆறியதும், ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து துவையலாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

இப்போது ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து, காய்ந்த பின் கடுகு, உளுந்து பொரிந்தவுடன் கறிவேப்பிலை, மிளகாய் சேர்த்து தாளித்து துவையலில் சேர்த்துவிட வேண்டும்.

இப்போது பீர்க்கங்காய் துவையல் சாப்பிட தயாராக உள்ளது. இதை சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிடலாம் அல்லது இட்லி, தோசைக்கு தொட்டுக்கொள்ளலாம் அல்லது ஏதேனும் வெரைட்டி ரைஸ்க்கும் தொட்டுக்கொள்ளலாம்.

பீர்க்கங்காய் தோலில் பல்வேறு நன்மைகள் உள்ளன. அவை உடலுக்கு பல்வேறு நன்மை அளிக்கின்றன.

சொறி, சிரங்கு, புண், காய்ச்சல் உள்ளவர்கள், பீர்க்கங்காய் சேர்த்துக் கொள்ளலாம். புண்கள், சொறி, சிரங்கு உள்ள இடங்களில் பீர்க்கங்காய் இலைச் சாற்றைத் தடவினால் நிவாரணம் கிடைக்கும். பீர்க்கங்காய் விதைகளில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் தோல் நோய், தொழுநோய் முதலியவற்றுக்கு மேல் பூச்சு எண்ணெயாக பயன்படுகிறது.

கண் பார்வை நன்றாய் தெரியவும், நோய் எதிர்ப்புச் சக்தியுடன் மேம்படவும் பீர்க்கங்காயை சமையலில் சேர்த்துக்கொள்ள வேண்டும். தோல் நோயாளிகள் தவறாமல் இதைச் சேர்த்துக்கொண்டால் தோல் நோய்களில் இருந்து விரைந்து குணம் கிடைக்கும். வயிற்றில் அமிலச் சுரப்பு அதிகமாவதைத் தடுத்து, வயிற்றில் புண்கள் வராமல் காக்கும், மேலும் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும்.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.