Peas Masala : பட்டாணி மசாலா! தெருவே மணக்கும், சுவையில் சிறக்கும் வகையில் செய்வது எப்படி தெரியுமா?
Peas Masala : இதில் மக்னீசியச்சத்து அதிகம் உள்ளது. சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படுவது தள்ளிப்போகிறது. உலர்ந்த பட்டாணியைவிட பச்சைப்பட்டாணியே சத்துக்கள் நிறைந்தது.
தேவையான பொருட்கள்
பச்சை பட்டாணி – ஒரு கப்
பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
தக்காளி – 1 (அரைத்தது)
மஞ்சள்தூள் – கால் ஸ்பூன்
மிளகாய்த்தூள் – ஒரு ஸ்பூன்
மல்லித்தூள் – ஒன்றரை ஸ்பூன்
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
நெய் – 2 ஸ்பூன்
கொத்தமல்லிதழை – கைப்பிடியளவு
வெண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
மசாலா அரைக்க தேவையான பொருட்கள்
பட்டை – 2 சிறிய துண்டு
கிராம்பு – 3
ஏலக்காய் – 2
சோம்பு – ஒரு ஸ்பூன்
பெரிய வெங்காயம் – பாதி
பூண்டு – 7 பற்கள்
இஞ்சி – ஒரு ஸ்பூன்
முந்திரிப் பருப்பு – 7
தேங்காய்த்துருவல் – 4 டேபிள் ஸ்பூன்
செய்முறை
காய்ந்த பட்டாணியை கழுவி ஓரிரவு அல்லது 8 மணி நேரம் ஊறவைத்துக்கொள்ளவேண்டும். பின்னர், குக்கரில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து 5 முதல் 7 விசில் வரும் வரை வேகவைத்துக் கொள்ளவேண்டும்.
கடாயில் ஒரு ஸ்பூன் நெய்விட்டு சூடானதும், அதில் சோம்பு, பட்டை, கிராம்பு மற்றும் ஏலக்காய் சேர்த்து வாசனை வந்ததும், இஞ்சி - பூண்டு சேர்த்து வதக்கிய பின் முந்திரி மற்றும் வெங்காயத்தையும் சேர்த்து வதக்கவேண்டும்.
கடைசியான தேங்காய்த் துருவல் சேர்த்து மசாலா பொருட்களோடு சேர்த்து ஒரு நிமிடம் வறுத்தால் போதும். இவை நன்றாக ஆறியதும் சிறிய மிக்ஸி ஜாரில் தண்ணீர் ஊற்றி விழுது போல் நைசாக அரைத்துக் கொள்ளவேண்டும்.
கடாயில் நெய் மற்றும் எண்ணெய்விட்டு சூடானதும், அதில் நீளமாக நறுக்கிய வெங்காயம் சிறிது சேர்த்து வதக்கவேண்டும். வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவேண்டும். பின்னர் வேகவைத்த பட்டாணியை சேர்த்துக் கொள்ளவேண்டும்.
அதனுடன் மசாலாவுக்கு தேவையான அளவு உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் மற்றும் மல்லித்தூள் சேர்த்து கலந்து அரைத்து வைத்துள்ள மசாலாவையும் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கலந்து மூடி வைத்து மசாலாவை கொதிக்க வைக்கவேண்டும்.
மசாலா நன்றாக கொதித்ததும் சிறிது வெண்ணெய் சேர்த்து பொடியாக நறுக்கிய கொத்தமல்லிதழையை தூவி இறக்கவேண்டும்.
சூப்பர் சுவையில் பட்டாணி மசாலா தயார். இதை சப்பாத்தி, பூரி, இட்லி, தோசை, இடியாப்பம் என அனைத்துக்கும் தொட்டுக்கொள்ளலாம். இதை வெரைட்டி சாதங்களுக்கும் தொட்டுக்கொள்ளலாம். அனைத்துக்கும் தொட்டுக்கொள்ள நன்றாக இருக்கும்.
நன்றி - விருந்தோம்பல்.
பட்டாணியின் நன்மைகள்
வளரும் குழந்தைகள் தினமும் 3 ஸ்பூன் பட்டாணி சாப்பிட மூளை வலுப்பெறும். ஞாபக சத்தி அதிகரிக்கும்.
பச்சைப்பட்டாணில் வெண்டைக்காயைவிட அதிகளவில் பாஸ்பரஸ் சத்து உள்ளது. இது குழந்தைகளின் புத்திக்கூர்மையை அதிகரிக்க உதவுகிறது.
ஒல்லியானவர்கள் தினமும் உணவில் பட்டாணி சேர்த்துவந்தால் அவர்கள் உடல் பருமனாகும். உடலுக்கு தேவையான ஆற்றலை கொடுக்கும் வல்லமையும் கொண்டது பச்சைபட்டாணி.
பச்சைப்பட்டாணியை தினமும் சுண்டல் செய்து சாப்பிட்டால் அதில் உள்ள பாஸ்பரஸ் சத்துக்கள் மனநல பாதிப்புக்களுக்கு குணமளிக்கிறது. பீட்டா குலுக்கன் சத்துக்கள் உடலில் கொழுப்பு படிவதை தடுக்கிறது. உடல் பருமன் அதிகமாவதை தடுக்கிறது.
இதில் மக்னீசியச்சத்து அதிகம் உள்ளது. சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படுவது தள்ளிப்போகிறது. உலர்ந்த பட்டாணியைவிட பச்சைப்பட்டாணியே சத்துக்கள் நிறைந்தது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்