Peanut : எச்சரிக்கை.. இந்த 5 பிரச்சனை இருக்கா.. வேர்க்கடலையை தொடாதீங்க.. ஒருவர் தினமும் எவ்வளவு வேர்க்கடலை சாப்பிடலாம்?
Peanut : ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் என்றாலும், சிலர் வேர்க்கடலை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியுமா? வேர்க்கடலையை உட்கொள்வது நன்மைகளுக்கு பதிலாக அவர்களின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.
Peanut : தேநீருடன் பரிமாறப்படும் சிற்றுண்டியாக இருந்தாலும் அல்லது லேசான குளிர்காலத்தில் இதமான சூரிய வெளிச்சம் இந்தாலும் பலரும் ரசித்து அனுபவிக்கும் உணவாக வேர்க்கடலை எல்லா வகையிலும் விரும்பப்படுகிறது. வேர்க்கடலையில் உள்ள புரதம், நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உங்கள் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, சுவைக்கும் அது சிறந்த ஒன்று. குழந்தைகளுக்கு வேர்க்கடலை கொடுப்பது மிகவும் நல்லது. வேர்க்கடலையை பச்சையாக, வேகவைத்து, வறுத்து, பவுடராக ஆக்கி என பல வகைகளில் எடுத்துக்கொள்ளலாம். கடலை மிட்டாய், சட்னி என ரக ரகமான சுவைக்க கடலை சிறந்தது. இப்படி பல வகைகளில் அன்றாட உணவுகளில் வேர்க்கடலையை சேர்த்து சமைக்கலாம். குக்கீகள், பிஸ்கட்டுகளில் கூட வைத்து சாப்பிடலாம். சாலட் வகை உணவுகளில் சேர்த்து சாப்பிடலாம். இருந்தாலும், சிலர் வேர்க்கடலை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியுமா? வேர்கடலையில் எத்தனை நன்மைகள் இருந்தாலும், அளவுக்கு மிஞ்சினாள் அமுதமும் நஞ்சு என்ற பழமொழிக்கு ஏற்ப இதில் சில தீமைகளும் உள்ளன.
ஒரு சிலருக்கு வேர்க்கடலை ஒவ்வாமை ஏற்படுத்தக்கூடியதாக அமைந்து விடுகிறது. குமட்டல், முகத்தில் வீக்கம் போன்றவை ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. இவ்வாறு நிகழ்ந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி உரிய சிகிச்சை எடுத்துக்கொள்வது அவசியமாகும். ஆம், வேர்க்கடலையை அதிகம் உட்கொள்வது ஒரு சிலருக்கு நன்மைகளுக்கு பதிலாக ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். இது எப்படி என்பதை அறியலாம்.
எவ்வளவு வேர்க்கடலை சாப்பிடலாம்
ஒருவர் ஒரு நாளைக்கு ஒரு கைபிடி அளவு வேர்க்கடலை சார்ப்பிட்டால் போதுமானது. அதே சமயம் வேர்கடலை வெண்ணெய் சாப்பிட்டால் இரண்டு டேபிள் ஸ்பூன் எடுத்துக்கொண்டால் போதும் இதற்கு மேல் சாப்பிட்டால் பிரச்சனைதான்.
வேர்க்கடலையை யார் சாப்பிடக்கூடாது?
அமிலத்தன்மை
அடிக்கடி அசிடிட்டி பிரச்சனை உள்ளவர்கள் வேர்க்கடலை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அத்தகையவர்களுக்கு, வேர்க்கடலை சாப்பிடுவது வயிற்றில் மலச்சிக்கலை ஏற்படுத்தும் கூறுகளைத் தூண்டுகிறது. இதன் காரணமாக வயிற்று வலி, வாயு, அஜீரணம் மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற வயிறு தொடர்பான பிரச்சனைகளின் புகார்கள் அதிகரிக்கின்றன.
யூரிக் அமில பிரச்சனை
வேர்க்கடலையில் உள்ள அதிக புரதச்சத்து உடலில் யூரிக் அமிலத்தின் அளவை அதிகரிக்கும். அத்தகைய சூழ்நிலையில், ஏற்கனவே மூட்டுவலி அல்லது ஹைப்பர்யூரிசிமியா பிரச்சனை உள்ளவர்கள் வேர்க்கடலையை குறைந்த அளவில் உட்கொள்ள வேண்டும் அல்லது சாப்பிடவே கூடாது. வேர்க்கடலையை உட்கொள்வது அவர்களின் நிலையை மோசமாக்கும்.
உயர் இரத்த அழுத்தம்
உங்களுக்கு உயர் இரத்த அழுத்தம் பிரச்சனை இருந்தால், வேர்க்கடலையை மிகவும் கவனமாக சாப்பிடுங்கள். இப்போதெல்லாம், வேர்க்கடலையில் சுவையை சேர்க்க சோடியத்தின் அளவை அதிகரிக்கிறார்கள். வறுத்த வேர்க்கடலை அல்லது உப்பு சேர்க்கப்பட்ட வேர்க்கடலை வெண்ணெய் சாப்பிடுவது உங்கள் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும். அத்தகைய சூழ்நிலையில், எப்போதும் உப்பு இல்லாமல் வேர்க்கடலை சாப்பிட முயற்சி செய்யுங்கள்.
எடை இழப்பு
உடல் எடையை குறைக்க நினைத்தாலும், வேர்க்கடலை சாப்பிடுவதை தவிர்க்கவும். வேர்க்கடலையில் கொழுப்பு மற்றும் கலோரிகள் அதிகம். இது உங்கள் எடையை அதிகரிக்கச் செய்யும்.
ஒவ்வாமை
பலருக்கு வேர்க்கடலை என்றால் அலர்ஜி. அத்தகையவர்கள் வேர்க்கடலையை உட்கொண்டால், அரிப்பு, வீக்கம், சுவாசிப்பதில் சிரமம் மற்றும் அனாபிலாக்ஸிஸ் போன்ற நிலைமைகளை உருவாக்கலாம். உங்களுக்கும் வேர்க்கடலை ஒவ்வாமை இருந்தால் அதை சாப்பிடவே கூடாது.
பொறுப்பு துறப்பு
இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்த ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.
எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும்.
உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்