தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Pcos Remedy : கருத்தரிக்க முடியாமல் அவதியா? இந்த ஒரு சாறு மட்டும் தினமும் பருகவேண்டும்!

PCOS Remedy : கருத்தரிக்க முடியாமல் அவதியா? இந்த ஒரு சாறு மட்டும் தினமும் பருகவேண்டும்!

Priyadarshini R HT Tamil
May 24, 2024 12:24 AM IST

PCOS Remedy : கருப்பையில் நீர்க்கட்டிகளால் கருத்தரிக்க முடியாமல் அவதிப்படுகிறீர்களா? இந்த வாழைப்பூவை கீழே கொடுக்கப்பட்டுள்ள முறையில் சாறாக்கி பருகுங்கள். மேலும் பல நன்மைகளும் கிடைக்கிறது.

PCOS Remedy : கருத்தரிக்க முடியாமல் அவதியா? இந்த ஒரு சாறு மட்டும் தினமும் பருகவேண்டும்!
PCOS Remedy : கருத்தரிக்க முடியாமல் அவதியா? இந்த ஒரு சாறு மட்டும் தினமும் பருகவேண்டும்!

ட்ரெண்டிங் செய்திகள்

பனங்கற்கண்டு – ஒரு ஸ்பூன்

செய்முறை

வாழைப்பூவை சுத்தம் செய்து அலசிவிட்டு, நறுக்கிக்கொள்ள வேண்டும். அதை அடுப்பில் இட்லி பாத்திரத்தில் வெள்ளைத்துணியில் வைத்து வேகவைக்கவேண்டும்.

பின்னர் அதை எடுத்து அப்படியே கையில் சாறாக பிழிந்து வடித்துக்கொள்ள வேண்டும்.

அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து தினமும் பருகவேண்டும்.

இதை பருகினால் படிப்படியாக மாதவிடாய் சுழற்சி சீராகும். மேலும் எஃப்எஸ்ஹெச், எல்ஹெச் ஆகியவற்றின் சமமின்மைதான் சினைப்பையில் நீர்க்கட்டி என்று அழைக்கப்படும் பிசிஓஎஸ் ஏற்படுவதற்கு காரணமாகிறது.

எஃப்எஸ்ஹெச் மற்றும் எல்ஹெச் என்பது ஃபாலிசில் ஸ்டுமுலேட்டிங் ஹார்மோன் மற்றும் லியூட்டினைசிங் ஹார்மோன் என்ற இரண்டு ஹார்மோன்களும், பெண்களின் பாலியல் வளர்ச்சியில் பெரும்பங்கு வகிக்கின்றன. இவை கருப்பை மற்றும் டெஸ்டிஸ் ஆகியவற்றின் இயக்கங்களில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

அதை சீர்படுத்தக்கூடிய தன்மை நிறைந்தது வாழைப்பூ. கருமுட்டையின் வளர்ச்சி சீராகும். உணவு செரிமானத்தை மேம்படுத்தும். ஹார்மோன்களை சமப்படுத்துவதன் மூலம் கருத்தரிக்க உதவியாக இருக்கும். அதிகப்படியான வெள்ளைப்படுதலையும் குறைக்கும்.

வாழைப்பூவில் உள்ள சத்துக்கள்

100 கிராம் வாழைப்பூவில், 51 கிலோ சக்தி உள்ளது. புரதம் 1.6 கிராம், கொழுப்பு 0.6 கிராம், கார்போஹைட்ரேட் 9.9 கிராம், நார்ச்சத்துக்கள் 5.7 கிராம், கால்சியம் 56 மில்லி கிராம், பாஸ்பரஸ் 73.3 மில்லி கிராம், இரும்புச்சத்து 56.4 மில்லி கிராம், காப்பர் 13 மில்லி கிராம், பொட்டாசியம் 553.3 மில்லி கிராம், மெக்னீசியம் 48.7 மில்லி கிராம், வைட்டமின் இ 1.07 மில்லி கிராம் ஆகியவை உள்ளது.

வாழைப்பூவின் நன்மைகள்

வாழைப்பூ இயற்கை வழிகளில் தொற்றுக்களை அகற்றுவதில் சிறந்தது. வாழைப்பூவில் உள்ள எத்தனால், பேத்தோஜெனிக் பாக்டீரியாக்களின் வளர்ச்சியைத் தடுக்க உதவுகிறது.

மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு ஏற்படும் அதிகப்படியான உதிரப்போக்கை குறைக்கவும், வயிற்று வலியை போக்கவும் சமைத்த வாழைப்பூ உதவுகிறது. இதை தயிருடன் சேர்த்து சாப்பிடலாம். வாழைப்பூக்கள், புரொஜெஸ்ட்ரோன் என்ற ஹார்மோன்கள் உடலில் அதிகரிக்க உதவி, உதிரப்போக்கை குறைக்கிறது.

வாழைப்பூ ரத்தச்சர்க்கரை அளவை குறைக்க உதவுகிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன.

பதற்றத்தை குறைத்து, மனஅழுத்தத்தைப் போக்குகிறது. இதில் உள்ள மெக்னீசியச் சத்துக்கள் நல்ல மனநிலையைக் கொடுக்கிறது.

வாழைப்பூவில் ஃபினோலிக் அமிலம், டானின்கள், ஃப்ளேவனாய்ட்கள் மற்றும் பல்வேறு ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இந்த ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உடலில் உள்ள ஃப்ரி ராடிக்கல்களை சமப்படுத்துகிறது. ஆக்ஸிடேடிவ் சேதத்தை தடுக்கிறது. இதய நோய் மற்றும் புற்றுநோயை ஆபத்தை குறைக்கிறது.

பாலூட்டும் தாய்மார்களுக்கு தாய்ப்பால் சுரப்பதை அதிகரிப்பதற்கு வாழைப்பூ உதவுகிறது. இது கருப்பை மற்றும் கர்ப்பத்துக்கு பின்னரான உதிரப்போக்கை கட்டுப்படுத்த உதவுகிறது.

வாழைப்பூவில் வைட்டமின் சி சத்துக்கள் அதிகம் உள்ளது. இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் அவசியம். இவை செல்களில் அழுத்தத்தை குறைக்கிறது மற்றும் வயோதிகத்தை தாமதப்படுத்துகிறது.

வாழைப்பூவில் உள்ள எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள், சிறுநீரகம் ஆரோக்கியமாக செயல்பட உதவுகிறது. வலியை ஏற்படுத்தும் சிறுநீரகக் கற்களை கரைக்க இயற்கையான முறையில் உதவுகிறது. சிறுநீரகத்தில் வீக்கம் மற்றும் சிறுநீரக பிரச்னைகளை குணப்படுத்துகிறது.

வாழைப்பூவில் உள்ள அதிகப்படியான இரும்புச்சத்துக்கள், உடலுக்கு தேவையான இரும்புச்சத்துக்களை வழங்கி, அனீமியாவின் அறிகுறிகளான சோர்வு, மயக்கம், முறையற்ற இதயத்துடிப்பு, வறண்ட சருமம், குளிர்ந்த பாதங்கள் மற்றும் கைகள் ஆகியவற்றை சரிசெய்கிறது.

எனவே வாழைப்பூவை அடிக்கடி உங்கள் உணவில் சேர்த்துக்கொள்வது ரத்த சிவப்பணுக்களின் அளவை அதிகரிக்கிறது. இரும்புச்சத்து குறைபாட்டால் ஏற்படும் அனீமியாவைப் போக்குகிறது.

WhatsApp channel

டாபிக்ஸ்