Pathiya Rasam : பத்திய ரசம்! அதிகமாக சாப்பிட்ட வயிற்றை காக்கும் அமிர்தம்!
Pathiya Rasam : பத்திய ரசம். அதிகமாக சாப்பிட்ட வயிற்றை காக்கும் அமிர்தம்.
தேவையான பொருட்கள்
பொடி செய்ய
துவரம் பருப்பு – 1 ஸ்பூன்
மிளகு – 1 ஸ்பூன்
சீரகம் – 1 ஸ்பூன்
ரசம் வைக்க
புளித்தண்ணீர் – ஒரு கப்
(எலுமிச்சை அளவு புளியை ஒரு கப் சூடான தண்ணீரில் அரை மணி நேரம் ஊறவைத்து கரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்)
மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
பெருங்காயத்தூள் – 2 சிட்டிகை
மல்லித்தழை – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
தாளிக்க
நெய் – ஒரு ஸ்பூன்
வெந்தயம் – கால் ஸ்பூன்
கடுகு – அரை ஸ்பூன்
ஓமம் – கால் ஸ்பூன்
சீரகம் – 1 ஸ்பூன்
பூண்டு – 4 பல் (தோலுடன் தட்டி எடுத்துக்கொள்ள வேண்டும்)
கறிவேப்பிலை – ஒரு கொத்து
செய்முறை
ஒரு காய்ந்த மிக்ஸி ஜாரில் மிளகு, சீரகம் மற்றும் துவரம் பருப்பு ஆகிய அனைத்தையும் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.
புளித்தண்ணீரில், ஒரு கப் தண்ணீர், உப்பு, பெருங்காயத்தூள், மஞ்சள் தூள் என அனைத்தும் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.
மல்லித்தழையும், கொஞ்சம் தண்ணீரும் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.
பின்னர் ஒரு தாளிப்பு கரண்டியில் நெய் சூடாக்கி, கடுகு, வெந்தயம், ஓமம், சீரகம், கறிவேப்பிலை சேர்த்துஅனைத்தும் பொரிந்து வந்தவுடன், அதில் இடித்து வைத்த பூண்டை சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுத்து கொதித்துக்கொண்டிருக்கும் ரசத்தில் சேர்த்து, அடுப்பை அணைத்து மூடி வைக்க வேண்டும்.
சிறிது நேரம் கழித்து திறந்து பார்த்தால், கமகம மணத்துடன் பத்திய ரசம் சாப்பிட தயார்.
இதை நீங்கள் யாருக்காவது விருந்து வைத்தீர்கள் என்றால் அன்று செய்து வைத்துக்கொள்ளுங்கள். நல்ல விருந்து சாப்பிட்டுவிட்டு, இந்த ரசத்தையும் சாப்பிட்டால் அவர்களின் வயிற்றுக்கு ஒன்றும் பிரச்னைகள் ஏற்படாது.
இதை அஜீரண கோளாறால் வயிறு உபாதைகள் ஏற்படும்போது செய்து சாப்பிடலாம். ஜீரணத்துக்கு நல்லது. இதை குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு சரியான இரண்டு நாளில் செய்து கொடுத்தால் வயிற்றில் தேங்கியிருக்கும் கசடுகளும் வெளியேற வழிவகுக்கும்.
இதை சூடான சாதத்தில் சேர்த்து சாப்பிடலாம். வடிகட்டி சூடாக கால் டம்ளர் குடித்தாலே வயிற்றுக்கு இதமாகும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்