Pasipayaru Salad : சூப்பர் சுவையான காலை உணவு; ஆரோக்கியமானது! சிம்பிளான பாசிபயறு சாலட்!
Pasipayaru Salad : பாசிப்பயறு சாலட் செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்
பாசிப்பயறு – முக்கால் கப்
எண்ணெய் – சிறிதளவு
கறிவேப்பிலை – ஒரு கொத்து
உப்பு – தேவையான அளவு
பச்சை மிளகாய் – 1
பெருங்காயத் தூள் – ஒரு சிட்டிகை
கடுகு – கால் ஸ்பூன்
தேங்காய் துருவல் – கால் கப்
மல்லித்தழை – தேவையான அளவு
எலுமிச்சை பழச்சாறு – 2 ஸ்பூன்
செய்முறை
பாசிப்பயறை ஒரு மணி நேரம் ஊறவைத்து, அதனை வடிகட்டி தனியாக எடுத்து வைக்க வேண்டும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்க்க வேண்டும்.
எண்ணெய் சூடானவுடன் கடுகு, பெருங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். பின்னர் பாசிப்பயறில் நீரை முழுவதுமாக வடிகட்டி விட்டு அதில் சேர்க்க வேண்டும். மேலும் அதில் கொத்தமல்லி இலை, அரைத்த தேங்காய், உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்க்க வேண்டும்.
அனைத்து பொருட்களையும் நன்றாக கலந்து காலை உணவு அல்லது மாலை நேர சிற்றுண்டியாக குழந்தைகளுக்குக் கொடுக்கலாம். பாசிப்பயறு பச்சையாக சேர்க்கப்பட்டிருப்பதே கண்டுபிடிக்க முடியாது. அத்தனை சுவையானதாக இருக்கும்.
பாசிப்பயறின் நன்மைகள்
பாசிப்பயறின் நன்மைகள் மற்றும் அதில் உள்ள சத்துக்கள் என்னவென்று பாருங்கள். 100 கிராம் பாசிப்பருப்பில், 6 கிராம் புரதச்சத்துக்கள் உள்ளது. இதில் வைட்டமின் இ, சி, கே ஆகிய சத்துக்கள் உள்ளன. இது இந்திய சமையலில் அதிகளவில் இடம்பெறுகிறது. இது எளிதாக செரிக்கக் கூடியது. மற்ற பருப்புக்களுடன் ஒப்பிடும்போது, இந்த பாசிப்பயறில் கார்போஹைட்ரேட்கள் குறைவாக உள்ளது. இது உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் அவசியமான ஒன்று. இதை நீங்கள் தினசரி உணவில் சேர்த்துக்கொள்வதால், எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. உடல் எடையை குறைக்க உதவுகிறது. இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளது. நார்ச்சத்துக்கள் நிறைந்தது. நீரிழிவு நோயை தடுக்க உதவுகிறது. செரிமானத்தை அதிகரிக்கிறது.
இதில் 70 கலோரிகள், கார்போஹைட்ரேட் 14 கிராம், புரதம் 3 கிராம், கொழுப்பு 1 கிராம், சாச்சுரேடட் கொழுப்பு 1 கிராம், சோடியம் 4 மில்லி கிராம், பொட்டாசியம் 19 மில்லி கிராம், நார்ச்சத்துக்கள் 1 கிராம், சர்க்கரை 1 கிராம், வைட்டமின் ஏ, கால்சியம் 4 மில்லி கிராம், இரும்புச்சத்து 1 மில்லி கிராம் உள்ளது. காலையில் இதை எடுத்துக்கொள்ளும்போது உங்கள் உடலுக்கு அன்றைய நாளுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் கிடைத்துவிடும்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்