Parupu Urundai Kulambu : பருப்பு உருண்டை குழம்பு; ஒரு தட்டு நிறைய சாதம் மொத்தமும் காலியாகிவிடும்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Parupu Urundai Kulambu : பருப்பு உருண்டை குழம்பு; ஒரு தட்டு நிறைய சாதம் மொத்தமும் காலியாகிவிடும்!

Parupu Urundai Kulambu : பருப்பு உருண்டை குழம்பு; ஒரு தட்டு நிறைய சாதம் மொத்தமும் காலியாகிவிடும்!

Priyadarshini R HT Tamil
Jan 19, 2025 03:12 PM IST

பருப்பு உருண்டை குழம்பு செய்வது எப்படி?

Parupu Urundai Kulambu : பருப்பு உருண்டை குழம்பு; ஒரு தட்டு நிறைய சாதம் மொத்தமும் காலியாகிவிடும்!
Parupu Urundai Kulambu : பருப்பு உருண்டை குழம்பு; ஒரு தட்டு நிறைய சாதம் மொத்தமும் காலியாகிவிடும்!

சின்ன வெங்காயம் – 10 (பொடியாக நறுக்கியது)

தக்காளி – 1 (பொடியாக நறுக்கியது)

கடலை பருப்பு – அரை கப்

துவரம் பருப்பு – அரை கப்

சோம்பு – ஒரு ஸ்பூன்

நல்லேண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்

கடுகு – கால் ஸ்பூன்

உளுந்து – கால் ஸ்பூன்

வெந்தயம் – கால் ஸ்பூன்

பச்சை மிளகாய் – 1

உப்பு – தேவையான அளவு

பூண்டு – 6 பற்கள் (இடித்தது)

தேங்காய்த் துருவல் – அரை கப்

குழம்பு தூள் – 4 ஸ்பூன்

மஞ்சள் தூள் – அரை ஸ்ழுன்

புளி – எலுமிச்சை அளவு

(சூடான தண்ணீரில் ஊறவைத்து கரைத்துக்கொள்ளவேண்டும்)

கறிவேப்பிலை – ஒரு கொத்து

மல்லித்தழை – கைப்பிடியளவு

முருங்கைக்கீரை – ஒரு கைப்பிடியளவு (ஆய்ந்தது)

செய்முறை

முதலில் இரண்டு பருப்புகளையும் நன்றாக அலசி ஒரு மணி நேரம் ஊறவிடவேண்டும். பின்னர் அதை மிக்ஸி ஜாரில் சேர்த்து கொரகொரப்பாக, தண்ணீர் விடாமல் அரைத்துக்கொள்ளவேண்டும். அதில் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், கறிவேப்பிலை, மல்லித்தழை, இடித்த பூண்டு, முருங்கைக்கீரை, தேங்காய் துருவல், உப்பு, சோம்பு என அனைத்தையும் சேர்த்து நன்றாக கிளறவேண்டும். இதை சிறிய உருண்டைகளாகப் பிடித்து இட்லி பாத்திரம் அல்லது ஸ்டீமரில் வேகவைத்துக்கொள்ளவேண்டும். வெந்தவுடன் உருண்டைகளை எடுத்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவேண்டும்.

குழம்பு செய்முறை

அடுப்பில் கடாயை வைத்து, 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, அதில் வெந்தயம், கடுகு, உளுந்து, சோம்பு சேர்த்து பொரிந்தவுடன், பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவேண்டும். அடுத்து அதில் தக்காளி பழத்தை சேர்க்கவேண்டும். அது குழைவாக வெந்தவுடன், மஞ்சள் தூள், குழம்பு மிளகாய்த் தூள் சேர்த்து நன்றாக வதக்கவேண்டும்.

அடுத்து புளிக்கரைசலை சேர்த்து நன்றாக கொதிக்க விடவேண்டும். குழம்பு நன்றாக கொதித்தவுடன், அதில் வேகவைத்த பருப்பு உருண்டைகளை சேர்க்கவேண்டும். அதை சேர்த்து குழம்பை கொதிக்கவிடவேண்டும். எண்ணெய் பிரிந்து வரும் பதத்தில் மல்லித்தழையை சேர்த்து இறக்கினால் சூப்பர் சுவையான பருப்பு உருண்டை குழம்பு தயார். இதை சூடான சாதத்தில் சேர்த்து சாப்பிட சுவை அள்ளும். இதற்கு நீங்கள் தனியாக பொரியல் செய்யத் தேவையில்லை. அந்த பருப்பு உருண்டையையே தொட்டுக்கொண்டு சாப்பிட்டு விடலாம்.

வேண்டுமென்றால் அப்பளம் பொரித்துக்கொள்ளலாம் அல்லது முட்டை ஆம்லேட் போட்டுக்கொள்ளலாம். உருண்டை அரைக்கும் மாவில் ஒரு ஸ்பூன் எடுத்து வைத்துக்கொள்ளலாம். அதை குழம்பில் கரைத்து வேகவைத்தால் இன்னும் சுவை கூடுதலாக இருக்கும்.

சூப்பர் சுவையான இந்த பருப்பு உருண்டைக் குழம்பு உங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் பிடிக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். நீங்களே ஒருமுறை ருசித்தால் மீண்டும், மீண்டும் வேண்டும் என்று நினைப்பீர்கள். எனவே கட்டாயம் இந்த பருப்பு உருண்டை குழம்பை செய்து பாருங்கள்.

இதுபோன்ற எண்ணற்ற தகவல்கள், விடுகதைகள், ஜோக்குள், வித்யாசமான ரெசிபிக்கள், குழந்தைகளின் பெயர்கள், தோட்டக்கலை பராமரிப்பு குறிப்புகள், பண்டிகைக் கால சிறப்பு உணவுகள், பழக்கங்கள், மரபுகள், குழந்தைகளுக்கு அர்த்தமுள்ள பெயர்கள், அழகு குறிப்புகள் மற்றும் ஆரோக்கிய குறிப்புக்கள் தேர்ந்தெடுத்து வழங்கப்பட்டு வருகிறது. எனவே தகவல்களை தொடர்ந்து பெற்று ஆரோக்கியமான வாழ்வு வாழ வாழ்த்துக்கள்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.