தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  Paruppu Urundai Kuzhambu: A Traditional Chettinad Special Lentil Ball Gravy Try It

Paruppu Urundai Kuzhambu: பாரம்பரியமான செட்டிநாடு ஸ்பெஷல் பருப்பு உருண்டை குழம்பு.. தெருவே மணக்கும்!

Pandeeswari Gurusamy HT Tamil
Feb 10, 2024 02:53 PM IST

சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிட ருசி அருமையாக இருக்கும். ருசி மட்டும் இல்லை இதில் புரதம் உள்ளிட்ட ஏராளமாக சத்துக்கள் உள்ளது. உருண்டை குழம்பு வைக்கும் போது தனியாக பொரியல் கூட செய்ய வேண்டியது இல்லை.

செட்டி நாடு ஸ்பெஷல் பருப்பு உருண்டை குழம்பு
செட்டி நாடு ஸ்பெஷல் பருப்பு உருண்டை குழம்பு

ட்ரெண்டிங் செய்திகள்

தேவையான பொருட்கள்

கடலை பருப்பு

வெங்காயம்

கறிவேப்பிலை

தக்காளி

சீரகம்

நல்லெண்ணெய்

கடுகு உளுந்தம்பருப்பு

பச்சை மிளகாய்

உப்பு

சோம்பு

வெந்தயம்

பெருங்காயம்

பூண்டு

மிளகாய் தூள்

மஞ்சள் தூள்

மல்லித்தூள்

புளி

மிளகாய் வத்தல்

மல்லி இலை

கறிவேப்பிலை

அரிசி மாவு

செய்முறை

கடலைபருப்பை 3 மணி நேரம் வரை நன்றாக ஊற வைக்க வேண்டும். ஊறிய கடலைப்பருப்பை மிக்ஸி ஜாரில் சேர்த்து கொள்ள வேண்டும். அதனுடன் பருப்புக்கு தேவையான அளவிற்கு உப்பு மற்றும் 4 வர மிளகாயை சேர்த்து கொள்ள வேண்டும். அதனுடன் அரை ஸ்பூன் சோம்பு சேர்த்து அரைக்க வேண்டும். இதில் தண்ணீர் சேர்க்காமல் அரைக்க வேண்டும். கொரகொரப்பாக அரைத்த பருப்பில் ஒரு பெரிய வெங்காயத்தை பொடியாக வெட்டி சேர்க்க வண்டும். அதில் கொஞ்சமாக நறுக்கிய கறிவேப்பிலை மற்றும் மல்லி இலைகளை சேர்த்து கொள்ள வேண்டும்.

கடைசியாக அந்த மாவில் ஒரு ஸ்பூன் அரிசி மாவை சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். இந்த பருப்பை மாவை பெரிய நெல்லிக்காய் அளவில் உருண்டையாக பிடித்து எடுத்து கொள்ள வேண்டும்.

மேலும் 100 கிராம் தேங்காயை சோம்புடன் சேர்த்து வலுவலுவென அரைத்து கொள்ள வேண்டும்.

இப்போது ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் சேர்க்க வேண்டும். எண்ணெய் சூடான பிறகு அதில் கால் ஸ்பூன் வெந்தயத்தை சேர்க்க வேண்டும். அரை ஸ்பூன் கடுகு, அரை ஸ்பூன் உளுந்து, ஒரு ஸ்பூன் சீரகத்தை சேர்க்க வேண்டும். 

கடுகு வெடிக்க ஆரம்பிக்கும் போது 100 கிராம் அளவிற்கு சின்ன வெங்காயத்தை நறுக்கி சேர்க்க வேண்டும். 10 பல் பூண்டையும் சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் சிவக்க ஆரம்பிக்கும் போது அதில் ஒரு பெரிய தக்காளி பழத்தை சேர்க்க வேண்டும். 

ஒரு கொத்து கறிவேப்பிலையை சேர்த்து கொள்ள வேணடும். தக்காளி நன்றாக வதங்கிய பின் அதில் இரண்டு ஸ்பூன் மிளகாய் தூள், 3 ஸ்பூன் மல்லித்தூள், அரை ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

பின்னர் ஒரு எலுமிச்சை அளவு புளியை கரைத்து சேர்த்து கொதிக்க விட வேண்டும். குழம்பு நன்றாக கொதிக்க ஆரம்பித்த உடன் அதில் அரைத்த தேங்காய் பேஸ்ட் சேர்த்து கொதிக்க விட வேண்டும். தேங்காய் பேஸ்ட் கொதிக்க ஆரம்பித்த உடன் அதில் ஏற்கனவே உருட்டி வைத்த பருப்பு உண்டைகளை சேர்த்து கொள்ள வேண்டும். 10 நிமிடம் மிதமான தீயில் வைத்து உருண்டைகளை வேக விட வேண்டும். குழம்பில் எண்ணெய் பிரிந்து வர ஆரம்பிக்கும் போது கொஞ்சமாக மல்லி இலைகளை தூவி இறக்கினால் டேஸ்ட்டான உருண்டடை குழம்பு ரெடி.. சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிட ருசி அருமையாக இருக்கும்.

ருசி மட்டும் இல்லை இதில் புரதம் உள்ளிட்ட ஏராளமாக சத்துக்கள் உள்ளது.  உருண்டை குழம்பு வைக்கும் போது தனியாக பொரியல் கூட செய்ய வேண்டியது இல்லை.

WhatsApp channel

டாபிக்ஸ்