Parenting Tips : ‘நன்றி சொல்ல உனக்கு வார்த்தையில்லை எனக்கு’ உங்கள் குழந்தைக்கு ஏன் நன்றி கூறவேண்டும்?
Parenting Tips : ‘நன்றி சொல்ல உனக்கு வார்த்தையில்லை எனக்கு‘ உங்கள் குழந்தைக்கு ஏன் நன்றி கூறவேண்டும் என்று தெரிந்துகொள்ளுங்கள்.
ஒரு பெற்றோராக நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்கவேண்டிய நன்றி வார்த்தைகள் என்ன தெரியுமா?
இந்த வார்த்தைகளை நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்கும்போது, அவர்களுக்கு அது அறிவுத்தெளிவையும், நடைமுறைகளையும் கற்றுக்கொடுக்கிறது.
எனது குழந்தையின் நிபந்தனையற்ற அன்புக்கு நான் நன்றி கூறுகிறேன்
குழந்தைகளின் அன்பு தூய்மையானது. அதற்கு எந்த நிபந்தனைகளும் கிடையாது. அவர்களின் அன்பு நிலையானது. அவர்களுடனான நமது தொடர்பின் சக்தியை பெற்றோருக்கும், குழந்தைகளுக்கும் எப்போதும் நினைவூட்டிக்கொண்டே இருப்பது. எனவே அவர்களின் அன்புக்கு எப்போதும் நன்றியுடையவர்களாய் இருங்கள்.
சிறுசிறு தருணங்களுக்கு நான் நன்றி கூறுகிறேன்
படுக்கை நேர கதைகள் முதல், தொடர்ந்து அவர்களின் அணைப்புக்கம், சிறிய தருணங்களே அடித்தளமாக அமைகின்றன. எனவே, வலுவான பெற்றோர் – குழந்தை உறவுக்கு சிறு தருணங்கள் மிகவும் முக்கியமானவை மட்டுமல்ல அவை மதிப்புமிக்கவையும் ஆகும்.
எனது குழந்தையின் தனித்தன்மையை நான் பாராட்டுகிறேன்
ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு திறமை உண்டு, ஒவ்வொரு குழந்தையும், அவர்களின் தனித்தன்மைக்காக பாராட்டப்படுகிறார்கள். அவர்களின் பண்புகளை நீங்கள் பாராட்டும்போது, அவர்கள் ஏற்கும் சூழலை உருவாக்குகிறார்கள்.
கற்பதற்கும், வளர்வதற்குமான வாய்ப்பு நான் நன்றியுடையவராக இருக்கிறேன்
பெற்றோரியம் என்பதும் கற்றலுக்கான ஒரு வாய்ப்பாகும். பெற்றோர் – குழந்தைகள் இருவருக்குமே அது கற்றல் வாய்ப்பை ஏற்படுத்தி தருகிறது. நீங்கள் சந்திக்கும் ஒவ்வொரு தருணமும், ஒரு வாய்ப்புதான், வளர்வதற்கும், மேலும் சிறப்பாக இருப்பதற்கும் அது ஒரு வாய்ப்புதான்.
எனது குழந்தை கொண்டுவரும் மகிழ்ச்சியை நான் போற்றுகிறேன்
குழந்தை மகிழ்ச்சி, சிரிப்பு, புன்னகை என அனைத்தையும் கெண்டுவருகிறது. இந்த இன்பம் தொற்றிக்கொள்ளும் குணமுடையதும், அது எப்போதும் நினைவில் இருப்பதும் ஆகும். எனவே சிறிய விஷயங்களில் கூட மகிழ்ச்சியை தேடுங்கள். அது உங்களுக்கு எந்நாளும் நினைவில் இருக்கும்.
எனது குழந்தை கற்றுத்தரும் பாடத்துக்கு நான் நன்றியுடன் இருப்பேன்
நமது குழந்தைகள் நமக்கு பொறுமையை கற்றுக்கொடுக்கிறார்கள். அனுதாபம் மற்றும் பலத்தை கற்றுக்கொடுக்கிறார்கள். அவர்கள் எதிர்பாராத பாடங்களையும் கற்றுக்கொடுக்கிறார்கள். அது நம்மை மேலும் மெருகேற்றுகிறது.
எனது குடும்பம் மற்றும் நண்பர்களின் ஆதரவை நான் பாராட்டுகிறேன்
குழந்தைகளை வளர்ப்பது ஒரு கிராமத்தைப் போன்றது. ஒரு கிராமத்தில் எப்படி குடும்பம், நண்பர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் என அனைவரும் உதவுபவர்களாக இருக்கிறார்களோ, அதுபோல் மதிப்புமிக்கது.
நான் எனது குடும்பத்தினர் ஆரோக்கியத்துக்கு நன்றி கூறுகிறேன்
ஆரோக்கியம் என்பதுதான் மிகவும் முக்கியமான ஒன்று. அதில் நாம் எப்போதும் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். எனவே ஆரோக்கியம் மறறும் நலன் இரண்டுக்கும் நாம் எப்போதும் நன்றியுடையவர்களாக இருக்கவேண்டும். குடும்பத்தின் நலன் மிகவும் முக்கியமான ஒன்றாகும்.
பெரியதோ சிறியதோ ஒவ்வொரு நிலையையும் கொண்டாடுங்கள்
உங்கள் குழந்தை ஒரு அடி எடுத்து நடப்பது முதல் அவர்கள் படித்து முடிப்பது வரை ஒவ்வொரு அடியிலும் அவர்கள் முக்கியமான சாதித்துள்ளார்கள். எனவே அவர்களின் இந்த தருணங்களை நீங்கள் கொண்டாடவேண்டும். அப்போதுதான் உங்கள் குடும்ப உறவுகள் வலுபெறும்.
அன்புக்கு நன்றி எனது பார்ட்னருக்கு
நீங்கள் உங்கள் பார்ட்னருடன் சேர்ந்து பெற்றோரிய பயணத்தில் ஈடுபட்டால், அவர்களுக்கும், அவர்களின் அன்புக்கும் நன்றி. அவர்களின் அன்பு மிகவும் முக்கியமானது. உங்களுடன் பார்டனருடனான அன்பு அவர்களுடன் உங்கள் குழந்தைக்கு அன்பான சூழல் மற்றும் நிலையான உறவை உருவாக்கிறது.
டாபிக்ஸ்