குழந்தை வளர்ப்பு குறிப்புகள் : உங்கள் குழந்தைகளை நீங்கள் ஏன் அன்றாடம் கண்காணிக்கவேண்டும்? அதற்கு இவைதான் காரணம்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  குழந்தை வளர்ப்பு குறிப்புகள் : உங்கள் குழந்தைகளை நீங்கள் ஏன் அன்றாடம் கண்காணிக்கவேண்டும்? அதற்கு இவைதான் காரணம்!

குழந்தை வளர்ப்பு குறிப்புகள் : உங்கள் குழந்தைகளை நீங்கள் ஏன் அன்றாடம் கண்காணிக்கவேண்டும்? அதற்கு இவைதான் காரணம்!

Priyadarshini R HT Tamil
Updated May 24, 2025 10:09 AM IST

குழந்தை வளர்ப்பு குறிப்புகள் : உங்கள் குழந்தைகள் என்ன செய்கிறார்கள் என்று அவர்களை நீங்கள் ஏன் அன்றாடம் கவனிக்கவேண்டும் என்று தெரிந்துகொள்ளுங்கள்.

குழந்தை வளர்ப்பு குறிப்புகள் : உங்கள் குழந்தைகளை நீங்கள் ஏன் அன்றாடம் கண்காணிக்கவேண்டும்? அதற்கு இவைதான் காரணம்!
குழந்தை வளர்ப்பு குறிப்புகள் : உங்கள் குழந்தைகளை நீங்கள் ஏன் அன்றாடம் கண்காணிக்கவேண்டும்? அதற்கு இவைதான் காரணம்!

நேர்மையான உணர்வுகளுக்கு இடம்

உங்கள் குழந்தைகளுக்கு உங்களிடம் அவர்களின் உணர்வுகளை பகிர்ந்துகொள்ள சிறிது நேரம் உள்ளது என்று தெரிந்தால் அது அவர்களுக்கு உணர்வு ரீதியான நம்பிக்கையை உண்டாக்கும். நாட்கள் செல்லச் செல்ல அவர்கள் உங்களிடம் சொல்ல விரும்பாத விஷயங்களைக் கூட சொல்லத் துவங்குவார்கள். எனவே இந்த நேரம் அவர்களுக்கு மிகவும் அவசியமானது.

அமைதி போராட்டத்தை கண்டுபிடிக்க உதவும்

அனைத்து பிரச்னைகளும் வெளிப்படையாகத் தெரியாது. சிலவை மறைந்திருப்பது, குழந்தைகளின் அமைதியான கண்களிலும், அதை இதயத்துடன் அவர்கள் கூறும் பதிலிலும் ஒளிந்திருக்கும். எனவே நீங்கள் அன்றாடம் அவர்களை கண்காணிக்கும்போது, அது கையாள முடியாத அளவுக்கு பெரிதாவதற்கு முன்னர் உங்களால் என்ன நடக்கிறது என்பதை உணர முடியும்.

இளம் வயதில் இருந்தே விழிப்புணர்வு

அன்றைய நாளில் எது சிறப்பாகச் சென்றது? எது சிறப்பாக செல்லவில்லை என்பதை நீங்கள் அன்றாடம் யோசித்து பார்க்க பழகிக்கொள்ளவேண்டும். இது குழந்தைகளுக்கு அவர்களின் உணர்வுகளை கண்காணிக்கவும், அவர்களின் பதில்களை சிந்தித்து அளிக்கவும் உதவும்.

நன்றாக கவனிப்பதன் மூலம் சுய மதிப்பு

அவர்களின் சிந்தனைகள் அன்றாடம் கேட்கப்படுகிறது என்று உங்கள் குழந்தைகள் எண்ணும்போது, அது அவர்களின் தன்னம்பிக்கையை மேம்படுத்துகிறது. அது அவர்களுக்கு அவர்களின் உணர்வுகள் மற்றும் அவர்களின் கதைகளும் முக்கியம் என்பதை உணர்த்தும்.

உணர்வு ரீதியான பிணைப்பை வலுப்படுத்துகிறது

நீங்கள் படுக்கையறையில் அல்லது வாக்கிங் செல்லும்போது என எப்போது பேசினாலும், அது உங்களுக்கும் அவர்களுக்குமான பிணைப்பு, சேர்ந்திருப்பது ஆகியவற்றை வளர்த்தெடுக்கும். அன்பை சத்தமாகக் கூறமுடியாது. ஆனால் அமைதியாக உணரப்படும் ஒன்றாகும்.

ஆரோக்கியமான உரையாடல்

உணர்வுகளை அமைதியாகக் கையாள்வதையும், கேள்விகள் கேட்கப்படுவதையும் நீங்கள் கவனிக்கும்போது, குழந்தைகள் எவ்வாறு தங்களை அச்சமின்றி வெளிப்படுத்திக்கொள்வது என்பதை உணர்கிறார்கள். இது மெதுவாக அவர்கள் உணர்வுகளின் வெளிப்பாடாக மாறும்.

நினைவு

காலங்கள் கடந்தபின்னர், இந்த கண்காணிப்பு அவர்களின் மனதில் நிலைத்திருக்கும். இந்த பழக்கத்தை அவர்கள் பாதுகாப்பாக உணர்வார்கள். இந்த நினைவுகள் அவர்கள் உறவை பெரியவர்கள் ஆனவுடனும் வடிவமைக்க உதவியதைக் காட்டும்.

உறவை பாதுகாக்கும்

குழந்தைகள் வளர வளர ஏற்படும் உணர்வு ரீதியாக பிளவு அல்லது தொலைவு என்பதை தவிர்க்க இந்த அன்றாட கண்காணிப்புகள் உதவும். உங்கள் இருவரையும் காலம் வெவ்வேறு திசைகளை நோக்கி நகர்த்தும்போதும், உங்களை இணைத்து வைப்பது இந்த அன்றாட பழக்கம்தான்.