Parenting Tips : குழந்தைகளுக்கு தந்தையுடன் ஏன் அதிக நேரம் செலவழிக்க வேண்டும்?
Parenting Tips : குழந்தைகள் தந்தையுடன் ஏன் தரமான நேரத்தை செலவிடவேண்டும் என்று தெரிந்துகொள்ளுங்கள்.
தந்தை – குழந்தை பிணைப்பின் முக்கியத்துவம்
ஆங்கிலத்தில் டாட் டைம், தமிழில் தந்தை நேரம் உங்கள் குழந்தையின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு தந்தையுடன் குழந்தை அதிக நேரம் செலவிடுவது மிகவும் முக்கியம். அது ஆடம்பரத்திற்காக மட்டுமல்ல அவசியமானதும் கூட. நல்ல குழந்தை மற்றும் தந்தை உரையாடல் குழந்தைகளில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
அவர்களின் ஆரம்ப காலத்தில் அது விளைவுகளை கொண்டுவரவில்லை. அது எதிர்காலத்திலும் கொண்டுவருகிறது. படிப்பு, தொழில், ஆரோக்கியம் என அனைத்துக்கும் அது உதவுகிறது. குழந்தையின் வாழ்வில் தந்தைகள் பெரும்பங்கு வகிக்கிறார்கள்.
அவர்களை உணர்வுப்பூர்வமாக வளர்க்கவும், சமூக ரீதியாமும், அவர்களின் மனநிலைகளையும் வளர்க்க உதவும். எனவே தந்தை நேரம் என்பதில் குழந்தைகளுடன் சற்று இருப்பது மட்டுமல்ல அவர்களுடன் அர்த்தமுள்ள உரையாடலை நிகழ்த்த வேண்டும். இதை செய்யும்போது, குழந்தைகளின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது.
கல்விக்கு உதவி
குழந்தையின் பள்ளிப்படிப்பில் பெற்றோர் ஈடுபடும்போது, அவர்கள் கல்வியில் சிறக்க வாய்ப்புள்ளது. அவர்களுடன் சேர்ந்து படிப்பது, அவர்களின் பள்ளிப்பாடத்தில் உதவுவது, அவர்களின் நினைவாற்றலை அதிகரிக்கவும், உரையாடலை தூண்டவும் உதவுகிறது.
ரோல் மாடலாகுங்கள்
தந்தைகள் தங்கள் குழந்தைகளின் ரோல் மாடலாக வேண்டும். அவர்களின் செயல்கள், அறம் உள்ளிட்டவை குழந்தைகளை பாதிக்கும். குழந்தைகளுடன் அர்த்தமுள்ள நேரத்தை செலவிடும் தந்தைகள் தங்கள் குழந்தைகளுக்கு நிறைய அறநெறிகளை போதிக்கிறார்கள். அவர்களும் வாழ்க்கல்வியையும் கற்கிறார்கள்.
உணர்வு ரீதியான தொடர்பு
தந்தை-மகன் பிணைப்பில் ஒரு உணர்வு ரீதியாக பலமான பிணைப்பை ஏற்படுத்துகிறது. குழந்தையுடன் சேர்ந்து விளையாடுவது பாதுகாப்பு உணர்வையும் கொடுக்கிறது. ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தை உருவாக்குகிறது. அது உணர்வு ரீதியான பலத்தை கொடுக்கிறது.
சுய உறுதியை அதிகரிக்கும்
குழந்தைகள் தங்கள் தந்தையுடன் இருக்கும்போது பாதுகாப்பாக உணர்கிறார்கள். குழந்தைகளுக்கு தன்பிக்கை வளர்கிறது. அவர்களுக்கு நேர்மறை சிந்தனையை தூண்டுகிறது. விமர்சனங்களை கொடுக்கும். அவர்களின் வெற்றிகளை பகிர்ந்துகொள்வார்கள்.
சமூக திறன்களை வளர்க்க உதவுகிறது
குழந்தைகளுக்கு சமூக திறன்கள் வளர உதவுகிறது. ஒற்றுமை, உரையாடல், பிரச்னைகள் என பகிர்ந்துகொள்ள முடியும். தந்தை மற்றும் குழந்தைகளுக்கு இடையேயான தொடர்பு சமூகத்தில் குழந்தைகள் நன்றாக நடந்துகொள்ள உதவுகிறது.
சுயசார்பின்மையை வளர்க்க உதவுகிறது
குழந்தைகளுடன் தரமான நேரத்தை செலவிடும் பெற்றோர், அவர்களுக்கு உதவுவதுடன் அவர்களுக்கு சுதந்திரத்தையும் வழங்குகிறார்கள். குழந்தைகளுக்கு சுதந்திரம் கொடுப்பதில் அப்பாக்கள் முக்கிய பங்கு வகிக்கிறார்கள்.
டாபிக்ஸ்