தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Parenting Tips : ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் குழந்தைகளுக்கு ஏன் தேவை? இதை படிங்க முதலில்!

Parenting Tips : ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் குழந்தைகளுக்கு ஏன் தேவை? இதை படிங்க முதலில்!

Priyadarshini R HT Tamil
Jun 11, 2024 10:03 AM IST

Parenting Tips : ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் குழந்தைகளுக்கு ஏன் தேவை? இதை படித்தால் உங்களுக்கு போதிய விளக்கம் கிடைக்கும்.

Parenting Tips : ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் குழந்தைகளுக்கு ஏன் தேவை? இதை படிங்க முதலில்!
Parenting Tips : ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் குழந்தைகளுக்கு ஏன் தேவை? இதை படிங்க முதலில்!

ட்ரெண்டிங் செய்திகள்

உங்கள் குழந்தைகள் மகிழ்ச்சி ஹார்மோன்களை வெளியிட உதவும் வழிகள்

உங்கள் குழந்தைகள் மகிழ்ச்சி ஹார்மோன்களை அதிகம் வெளியிட உதவும் சூழல்களை உருவாக்குங்கள். இதனால் அவர்களுக்கு நேர்மறை எண்ணங்கள் ஏற்படுவதுடன், அவர்களின் நலன் பாதுகாக்கப்படும். அதை செய்வதற்கான வழிகளை தெரிந்துகொள்ளுங்கள்.

உங்கள் குழந்தைகளுக்கு மகிழ்ச்சி ஹார்மோன்கள் சுரந்தால், அவர்களின் மனம் மகிழ்வுடனும், உடல் ஆரோக்கியத்துடனும், அவர்கள் எண்ணற்ற நேர்மறை ஆற்றலைகளையும் பெறுவார்கள். இது அவர்களின் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்துக்கும் நல்லது.

உடல் பயிற்சிகளுக்கு ஊக்கம் கொடுங்கள்

அன்றாடம் உடற்பயிற்சிகள் செய்வது உடல் எண்டோஃபின்கள், செரோட்டினின்கள் மற்றும் டோப்பமைன்கள் சுரக்க உதவுகிறது. வெளியில் விளையாடுவது, பைக் ஓட்டுவது அல்லது விளையாட்டில் ஈடுபடுவது என இவையனைத்தும் உங்கள் குழந்தையை மகிழ்ச்சியாக்குகிறது.

விளையாட்டு நேரத்தை அதிகரியுங்கள்

விளையாட்டுகள், கைவினைப் பொருட்கள் தயாரிப்பது என உங்கள் குழந்தையை எப்போதும் ஏதேனும் விளையாட்டுகள் அல்லது கிரியேட்டில் நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவது அவர்கள் உடலில் எண்டோர்ஃபின்கள் மற்றும் ஆக்ஸிடோசின் சுரக்க வழிவகுக்கும். இது உங்கள் குழந்தையின் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்துக்கும் வழிவகுக்கும்.

போதிய உறக்கம் தேவை

உங்கள் குழந்தைகளின் உடலில் ஹார்மோன்கள் முறையாக சுரப்பதற்கு, ஆழ்ந்த உறக்கம் முக்கியமானது. எனவே முறையான உறக்க நேரம் அவசியம். உங்கள் குழந்தைகள் போதிய ஓய்வைப் பெறுகிறார்கள் என்பதை உறுதிசெய்யுங்கள்.

நேர்மறையான சமூக தொடர்புகளை வளர்த்தெடுங்கள்

உங்கள் குடும்பம் மற்றும் குழந்தைகளுடன் நேரத்தை செலவிடுவது மற்றும் குழந்தைகளை ஒற்றுமையான இணைந்து மற்றவர்களுடன் விளையாடவோ அல்லது வேறு நடவடிக்கைகளில் ஈடுபடவோ அறிவுறுத்துவது உங்கள் குழந்தையின் ஆக்ஸிடோசின் அளவை அதிகரிக்க உதவும். இது உங்களுக்கு மகிழ்ச்சி மற்றும் பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்தும்.

கிரியேட்டிங் நடவடிக்கைகளை ஊக்கப்படுத்துங்கள்

ஓவியம், வர்ணம் தீட்டுவது, இசைக்கருவி இசைப்பது ஆகியவை உங்கள் குழந்தைகள் உடலில் டோப்பமைன் அளவு அதிகரிக்க உதவும். இதனால் உங்கள் குழந்தைகளின் மகிழ்ச்சியும் இரட்டிப்பாகும்.

ஆரோக்கியமான உணவு

உங்கள் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவைக் கொடுங்கள். ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவையும் கொடுத்தல் நல்லது. அதில் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட்கள், டிரிப்டோஃபான் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்திருக்கவேணடும். இது உங்கள் உடலில செரோட்டினின் அளவை முறைப்படுத்தி, உங்களின மனநிலையை மாற்றும்.

ரிலாக்ஸ் மற்றும் மனநிறைவு

யோகா, தியானம், மூச்சுப்பயிற்சிகள் உங்கள் குழந்தைக்கு மனஅழுத்தத்தை ஏற்படுத்தும், கார்டிசால் சுரப்பைக் குறைக்கும். இது உங்கள் உடலில் செரோட்டினின் அளவை அதிகரிக்கச் செய்யும். இதனால் உங்கள் குழந்தைகள் மகிழ்வுடன் இருப்பார்கள். இது உங்கள் குழந்தைக்கு மனநிறைவும், ஓய்வையும் தரும். எனவே இந்தப்பழக்கங்களை உங்கள் குழந்தைகள் செய்வதற்கு ஊக்குவியுங்கள்.

இணைந்து சிரியுங்கள்

காமெடி வீடியோக்களை பார்த்தும், ஜோக்குகளை கூறியும், உங்கள் குழந்தைகளுடன் சேர்ந்து நீங்களும் சிரியுங்கள். நன்றாக அற்ப விஷயங்களுக்காக சிரியுங்கள். இதுவும் உங்கள் குழந்தையின் உடலில் எண்டோர்ஃபின்களை அதிகரிக்க உதவும். மற்றவர்களையும் இது மகிழ்ச்சியாக்கும்.

வீட்டில் குழந்தைகள் மகிழ்ச்சியாக இருந்தால் அந்த வீடே மகிழ்ச்சியாக இருக்கும். எனவே குழந்தைகள் எப்போதும், ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என குதூகலத்துடன் இருக்கட்டும். அவர்களுடன் சேர்ந்து நீங்களும் மகிழ்ந்திருங்கள். இனிய வாழ்த்துக்கள்!

WhatsApp channel

டாபிக்ஸ்